இடுகைகள்

எதிர்ப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரவி யா?ஆளுனரா?

படம்
  தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக அமைச்சர் துரைமுருகன் தனித் தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தின்மீது சட்டப்பேரவையின் கதவுகள் மூடப்பட்டு எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.. மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ரவி ``தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் நண்பராக இருக்க ஆளுநர் ரவி தயாராக இல்லை. ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராகத் தற்கொலைகள் அதிகரித்தபோதிலும் சட்டத்துக்கு ஒப்புதல் தர மறுக்கிறார். அரசியல்வாதிபோல் ஆளுநர் செயல்பட்டுவருகிறார். தமிழக சட்டமன்றத்தை அவமதிக்கிறார். நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் விமர்சனம் என ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றிவிட்டார். அரசின் கொள்கை முடிவுகளை விமர்சித்து பொதுவெளியில் ஆளுநர் பேசுகிறார். ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும். சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடையூறு செய்தால் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.. ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்ப...