பட்டாசு பலிகள்
தமிழ்நாட்டில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாவது என்பது முடிவில்லா தொடர்கதைதான்.செப்டம்பர் மாதம் சிவகாசியில் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். அந்த கோரத்தில் இருந்து அரசும் பட்டாசு தொழில் செய்பவர்களும் பாடம் படித்ததாகத் தெரிய வில்லை.விபத்துகளின் சமீபங்களில் மட்டுமே அதை பற்றி பரபரப்பாக பேசுவதும்,பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசு கெடுபிடி செய்வதும் நடக்கிறது.பின் அவ்ளோதான்.இன்று அந்தவகையி மற்றுமொரு வெடி வெடித்து பலரை சிதற வைத்துள்ளது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் மேச்சேரி அருகே செங்காட்டூர் பிரிவு என்ற இடத்தில், பட்டாசு தயாரிக்கும் கூடத்தில் இன்று (25.12.12) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உரிமம் பெற்று பட்டாசு தயாரிக்கும் அந்த ஆலையில், வானவெடிகள் உள்பட திருவிழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.ஆனால் பட்டாசு தயாரிப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் கவனக்குறைவு வழக்கம் போல்தான். ...