இடுகைகள்

அண்ணா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேரறிஞர் அண்ணா.

படம்
தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் 46-வது நினைவு தினம்  இன்று. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஞ்சீபுரத்தில், மத்தியத் தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த நடராசன்-பங்காரு அம்மையார் தம்பதியரின் அன்பு மகனாக 15-09-1909 அன்று பிறந்த தமிழ்நாட்டின் தலைமகனுக்கு பெற்றோர் இட்ட பெயர் அண்ணாதுரை என்பதாகும்.   காஞ்சீபுரம் நடராசன் அண்ணாதுரை என்ற முழுப்பெயரின் சுருக்கமாக சி.என்.அண்ணாதுரை என்று அறியப்பட்ட அவர், ஆரம்ப கல்வியை சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், பட்டப்படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார். தமக்கையார் ராசாமணி அம்மையாரின் அரவணைப்பில் வளர்ந்த அண்ணா, மாணவப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம் புரிந்தார். கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தை தவிர்த்து பிறமொழிகளில் பேசக்கூடாது என்ற ஆங்கில மோக மனப்பான்மை அன்றைய காலகட்டத்திலும் அதிகம் இருந்தது. ஆங்கிலத்தில் பேசுவதே கவுரவம் என்று எண்ணம் மேலோங்கியிருந...

வாழ்க அண்ணா!!!

படம்
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்ததினம் இன்று[15/09/2014] அறிஞர் அண்ணா என்று அனைவராலும் அன்போடும், மதிப்போடும் அழைக்கப்படும் முன்னாள் தமிழக முதல்வர், பேரறிஞர் அண்ணா அவர்கள் உலகத் தமிழர்கள் அனைவரதும் உள்ளங்களில் வீற்றிருக்கும் ஒப்பற்ற தலைவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி. தமிழிலும் ஆங்கிலத்திலும் தன்னிகரற்று விளங்கிய மேதை. இணையற்ற பேச்சாளர். சுவைமிக்க எழுத்தாளர். எதிர்தரப்பில் இருந்தவர்களாலும் ஏற்றுப் புகழப்பட்ட அறிஞர். மாற்றாரையும் மதித்து நடந்த பண்பாளர். தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தற்கொடையாளர். பாமர மக்களை நோக்கித் தமிழ் இலக்கிய வெள்ளத்தைப் பாய்ச்சிய கவிஞன் மகாகவி பாரதி என்றால், பாமரரையும், படித்தவரையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் மேடைப் பேச்சினை ஒரு கலையாக மேன்மைப் படுத்திய தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்களே. வளம் மிகுந்த தமிழ் நாட்டில், வரலாற்றுப் புகழ் நிறைந்த நகரம் காஞ்சிபுரம். பட்டுத் தொழிலுக்குப் பெயர் பெற்ற இடம். ஒரு காலத்தில் அது பல்லவ வேந்தர்களின் தலை நகராகப் புகழ்பெற்று விளங்கியது. பண்டைய இலக்கியங்களில் இடம் பெற்று இலங்கியது. பக்திக் களமாக எ...