இடுகைகள்

வித்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மோடி வித்தை?

படம்
உத்தரப் பிரதேசத்தில் பலகட்டமாக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.  சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து நாட்டு மக்களை தியாகம் செய்ய அறைகூவல் விடுத்தார் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர். அதற்கு அவர் கூறிய காரணங்கள்  (1) கருப்புப் பணம் ஒழியும்;  (2) கள்ளப்பணம் ஒழியும்;  (3) தீவிரவாதிகளுக்குச் செல்லும் பணம் தடைப்படும்;  (4) டிஜிட்டல் பரிவர்த்தனை வளரும், ஆகியவைகளாகும்.  ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை. புழக்கத்திலிருந்த பணம் ஏறக்குறைய அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டன. இப்போதுவரை எவ்வளவு பணம் வந்து சேர்ந்தது என்பதை அரசோ, மைய வங்கியோ நாட்டிற்கு தெரியப்படுத்தவில்லை; அல்லது அறிவிக்க விரும்பவில்லை.  அனைத்து வங்கி பண பரிவர்த்தனைகளும் மின்னணு முறையில் நடைபெறும் நாட்டில் 60 நாட்கள் கடந்தும் எவ்வளவு பணம் வந்து சேர்ந்தது என அறிவிக்காமல் மக்களை ஏமாற்றுகிறார்கள்.  இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கையின்போது ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் ஊரே சிரிக்கும் அளவுக்கு அரசின் எடுபிடியாக அது மாறியதைக் கண...