இடுகைகள்

தினமணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தினமணி இப்போது ஜெயா மணி.

படம்
தினமணி மேல் நம்பிக்கையில்லை  – தினமணி வாசகர்கள் Posted by  வினவு       இந்த கட்டுரை வினவு தளத்தில் இருந்து மீள் பதிவு.  காரணம் நானும்  தினமணியின் தீவிர வாசகனாக இருந்துவந்தவன்.ஏ .என்.சிவராமன் காலத்தில் இருந்த தினமணியின் பெருமையை கேள்விப்பட்டே தினமணியின் வாசகனானேன். 28 ஆண்டுகளாக தினமும் வாங்கியவன்.இன்னமும் தினமணி சுடர்,வணிகமணி ,இளைஞர் மணி தினமணி கதிர் போன்றவைகளை சேர்த்து வைத்திருப்பவன். ஆனால் என்று நிமிர்ந்த நன்னடை வைத்தி வந்து ஆசிரியர் நாற்காலியில் வந்து அமர்ந்து" பே நாயை " திறந்தாரோ அன்றில் இருந்து தினமணி வர்க்க பேதம் காண ஆரம்பித்து முற்றிலும் ஜெயா ஆதரவு இதழாக அதிமுகவின் இன்னொரு எம்ஜிஆர் ஆகமாறி விட்டது.அதிலும் மதி கருத்துப்படங்கள் ரசிக்கும் படி இருந்தாலும் விட விதைகளை தூவி வருகிறது. தினமணி  தினமும் படிப்படியாக நிறம் மாறும் பச்சோந்தியாக மாறியதும் நானும் படிப்படியாக வாங்குவதை நிறுத்தி இப்போது தினமணி சுவரொட்டியை கூட படிப்பது கிடையாது. ஆனால் வைத்தியோ தனது தினமணி அழிந்தாலும் பரவா யில்லை என்று ஜெயா ஜால்ராவை இன்னும் பலமாக ஒலிக்க...

தினம்ணியின் தீர்ப்பு,,.!

படம்
அரசியல் பக்கம் போக வேண்டாம் என்றாலும் சிலர் எழுதுவதை பார்க்கையில் பேனாவை கை தானாகவே எடுக்கிறது.தினம்ணி.இதை வைத்திய நாதன் ஆசிரியரானதில் இருந்து கொஞ்சம் ,கொஞ்சமாக படிப்பதை நிறுத்தி விட்டேன்.நான் மட்டுமா என்றால் இல்லை.கடைக்காரரே சொன்னார்.10 விற்ற இடத்தில் இப்போது விற்பனை இல்லை.முகவரும் விற்காததை திருமப் வாங்க மாட்டேன் என்பதால் இப்போது 3 அல்லது 2 மட்டுமே வாங்குகிறேன்.அதுவும் ஞாயிறுதான் எல்லாம் விற்கும் என்றார். நான் வாங்காதற்கு காரணம். நடுனிலை என்பதற்கு உதாரணமாக இருந்த ,இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களை அரசு முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்த பெருமை கொண்ட தினமணியின் பாஜக,அதிமுக ,ஜெயலலிதா சார்பான செயல்பாடுகள்தான்.  வைத்தியின்  ஆசிரியர் பொறுப்புக்கு பின்னர் இலை மறைவு காய மறைவாக ஆரம்பித்து இப்போது  நமது எம்ஜிஆரை விட கட்சி பத்திரிக்கையாகி விட்டது.வைத்திய நாதன் பாரதியாரின் மீசையும் ,அவரின் வரிகளை பத்திரிக்கையிலும் வைத்திருக்கிறாரே ஒழிய அவர் தில்லானா மோகனாம்பாள் வைத்தியாகவே மாறி விட்டார். அது சரி.இப்போ எதற்கு வைத்தியின் தினமணி புகழ். 02.10.2014 [காந்தி பிறந்த நாளில்தான்]தினமணியில் வெள...