இடுகைகள்

சுகுமாரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடிகை சுகுமாரி .......,

படம்
தமிழ், மலையாளம், இந்தி, ஒரியா, பெங்காலி மொழிகளில் 2500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள நடிகை சுகுமாரி மரணமடைந்தார். அவருக்கு வயது 74. சென்னை தி.நகரில் வசித்து வந்தார் சுகுமாரி. கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் விளக்கேற்றும்போது தவறுதலாக அவர் புடவையில் தீப்பற்றியது. பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை சுகுமாரி இறந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்திரி உட்பட பழம்பெரும் நடிகர், நடிகைகளுடன் நடித்ததோடு இந்த தலைமுறை நடிகர்களுடன் நடித்துவந்தார். கமல்ஹாசனின் பல படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர்தான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பெருமைப்படுத்தினார். ஒய்.ஜி.மகேந்திரன், சோ  நடத்திய நாடகங்களிலும் நடித்து வந்தார். மத்திய அரசின் பத்மஸ்ரீ உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். நாகர்கோவிலில் 1938ல் பிறந்த சுகுமாரி, ‘ஓரிரவு‘ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அடுத்து ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சம்பூர்ண ராமாயணம்’, ‘பட்டிக்க...