செல் பேசியின் தந்தை யார்?

கூப்பர்? ஸ்டுபிர்ஃபீல்டு? இன்றைய காலக்கட்டத்தில் செல் பேசி மூலம், தொலைத் தொடர்பு, இணையத்தில் உலாவருதல், பொழுதுபோக்கு, இசை முதலிய சேவைகள் பெறுவது, நமது அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாதது.. உலக தொலைத் தொடர்பு ஒன்றியம் 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், தற்போது, உலகளவில் செல்பேசியைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 680கோடி அடைந்துள்ளது. இது, உலகின் பொது மக்கள் தொகையில் 96விழுக்காட்டு வகிக்கிறது. செல்லிட பேசியைப் பயன்படுத்துகின்ற போது, அதனைக் கண்டுபிடித்தவர் பற்றி, உங்களுக்கு தெரியுமா? 1973-ஆம் ஆண்டு, மார்ட்டீன் கூப்பர், உலகில் முதலாவது செல் பேசியைக் கண்டுபிடித்தார். நவீன செல்பேசியின் தந்தை என்னும் பெருமையை அவர் பெற்றார். எனினும், 2008-ஆம் ஆண்டு மே 13-ஆம் நாள், பிரிட்டானின் டெய்லி மெயில் (Daily Mail) ஏட்டில் வெளியிட்ட தகவலில், நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் (Nathan ubblefield) என்ற அமெரிக்கரே, செல்பேசியைக் கண்டுபிடித்த முதலாவது நபர் என வெளியாகியுள்ளது. மேலும், Virgin செல்பேசி வலைபின்னல் நிறுவனர் சர் ரிச்சார்டு பிரான்சனும், நாதன...