சரித்திரம் படைத்த
" தோழர் ஜோதிபாசு" ------------------------------------ "இந்தியத் தொழிற்சங்க மையத்தின் 14ஆவது மாநாடு, அதன் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், இந்தியப் புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜோதிபாசுவின் நூற்றாண்டை 2013 ஜூலை 8 முதல் 2014 ஜூலை 8 வரை கொண்டாடுமாறு அனைத்து சிஐடியு சங்கங்களுக்கும் மற்றும் குழுக்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளது. அதனையொட்டி சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் எழுதியுள்ள கட்டுரை இங்கு தரப்படுகிறது." இந்தியத் தொழிற்சங்க மையத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், இந்திய அரசியல்வானின் ஒப்பற்ற மக்கள் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜோதிபாசு, 1914 ஜூலை 8 அன்று பிறந் தார். அவரது பெற்றோர்கள் இன்றைய வங்க தேசத்தின் டாக்கா மாவட்டத்திலிருந்து வந்தவர்களாவார்கள். அவரது தாயார் ஓர் உயர் மத்திய வர்க்க நிலச்சுவான்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை டாக்ட ராக பணிபுரிந்தவர். தோழர் ஜோதிபாசுவே தன் நினைவுக் குறிப்புகளில் கூறியிருப்பதைப்போல, ‘‘அவருடைய குடும்பத்தில் அரசியல் வாடை வீசியதாகத் தெரியவில்லை.’’ ஆயினும், ‘‘தங்கள...