மணல் ஆ [தர ]ய் வுக் குழு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திரு ஆஷிஷ் குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத் தில் கனிம மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்யவும், மணல் கொள்ளை அடித்த நிறுவனங்கள் மீது நடவடிக் கை எடுக்கவும் உத்தரவிட்டதாகவும், அதன் பின்னணியில் அவர் திடீரென அரசால் இட மாற்றம் செய்யப்பட்ட தாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. மாவட்ட ஆட்சியர் திரு ஆஷிஷ் குமார் வேம்பார் பகுதி கடற் கரையில் சுமார் 40 ஹெக்டேர் பரப்பில் சுமார் 2.30 லட்சம் மெட்ரிக் டன் கனிம மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட் டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அதன் பேரில் வி.வி. மினரல்ஸ் நிறுவ னம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் சுரங்கத்துறை கமிஷன ருக்கு இம்மாதம் 6 ம் தேதி இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார். இதை அடுத்து சுரங்கத்துறை ஆணையர் ஆகஸ்ட் 8ம் தேதி தமிழக அரசின் தொழில் துறை முதன்மை செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்" தூத்துக்குடி மாவட்டத்தில் குத்தகைக்கு விடப் பட்ட சில சுரங்கங்களில் விதிமுறை களை மீறி அத...