உலகம்

சாத்தான் வேதம் ஓதினால் சந்தேகம் வர வேண்டாமா?
-உ. வாசுகி
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட ஆயுத மோதலில், மிகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இப் பின்னணியில் இலங்கை அரசு, சர்வதேச அழுத்தத்துக்கு அடி பணிந்து, சுயேச்சை யான, உயர்மட்ட, நம்பகத்தன்மையுள்ள விசா ரணையை நடத்த முன் வர வேண்டும். குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மறு பக்கம், இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு, மீள் குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு மறு வாழ்வு போன்ற சம கால, எதிர்காலத் தேவை கள் உறுதி செய்யப்பட வேண்டும். இதுவே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில், இந்தியா இத்த கைய வாதத்தை முன் வைத்து, இலங் கைக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என் பதையும் இந்த நேரத்தில் கட்சி வலியுறுத்து கிறது.

இதற்கிடையே, அமெரிக்கா கொண்டு வரும் மனித உரிமை மீறல் குறித்த தீர்மானத் தைச் சுற்றி விவாதம் நடந்து கொண்டிருக் கிறது. தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள், ஒபாமா தலையிட வேண்டும் எனக் கோரு கிறார்கள். அமெரிக்காவை மனித உரிமை பாதுகாவலராகக் கருதி முன் வைக்கப்படும் இக்கோரிக்கை மிக அபாயகரமானது. அமெ ரிக்க ஏகாதிபத்தியத் தலையீட்டின் அரசி யலை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக் கிறது. வரலாற்றின் வழி நெடுகிலும், மனித உரிமைகளை அப்பட்டமாகக் காலில் போட்டு மிதித்தே வளர்ந்த சக்தி அல்லவா அமெரிக்கா? ஒபாமா, ஜார்ஜ் புஷ், கிளிண் டன், கார்ட்டர், ரீகன் போன்ற தனிநபர்களைத் தாண்டி, ஏகாதிபத்தியத்தின் அடிப்படை நோக்கமே ஆக்கிரமிப்பும், அத்துமீறல்களும் தானே? தமது நலனுக்காக ஒப்பந்தங்களைப் போட வைப்பதும், அதே நலனுக்காக போட்ட ஒப்பந்தங்களைக் கிழித்தெறிந்து குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதும் ஏகாதிபத்திய நாடு களின் வாடிக்கை தானே? சவுதி அரேபியா, இஸ்ரேல் போன்ற நட்பு நாடுகளின் படு மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவோ, ஐரோப்பிய வல்லரசுகளோ இது வரை தீர்மானம் கொண்டு வராத ரகசியம் என்ன? பின்லேடன் போன்ற பலரை, அமெ ரிக்க ஏகாதிபத்தியம், தனது நலன் கருதி வளர்த்துவிட்டு, அவர்களின் வன்கொடுமை களையும், மனித உரிமை மீறல்களையும் ஊக்குவித்து, உதவி செய்து, பின்னர் தன் வர்க்க நலனுக்குப் பலனில்லை என்று தெரிந்தவுடன், அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, போட்டுத் தள்ளிய நடவடிக்கைகளை அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா?

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரத்தக் கறை படிந்த வரலாறைச் சுருக்கமாகப் பார்ப் பது, ஆடு நனைகிறதே என்று (அமெரிக்க) ஓநாய் ஏன் அழுகிறது என்ற கேள்வியின் நியா யத்தை உணர்ந்து கொள்ள உதவும்.

கொலம்பஸ் போட்ட

ஆக்கிரமிப்பு விதை

அமெரிக்கா மட்டுமல்ல; இன்றுள்ள முன் னேறிய முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகளின் வரலாறுகள் ஆக்கிரமிப்புகளால் ஆனவை தான். கொலம் பசும் அவரது குழுவும், 1492ல் அமெரிக்கக் கண்டத்தில் கால் பதித்தனர். இது தற்செய லானதல்ல. ஐரோப்பிய முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் ஒரு பகு தியாக, செல்வம் தேடி, தங்கம் தேடி, வளங் கள் தேடி அலைந்த பயணக் குழுவாக அதைப் பார்க்கலாம். கொலம்பஸ் குழுவினர், அங் கிருந்த பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை அடிமைகளாக ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய் தனர். அவர்களது தங்க வயல்களைக் கபளீ கரம் செய்தனர். கொலம்பசும், அவருக்குப் பின் அது போன்று வந்தவர்களும் 2 ஆண்டு களில், தூக்கிலிட்ட, கொலை செய்த, எரித்த, சிதைத்த, தற்கொலைக்குத் தள்ளிய செவ் விந்தியர்களின் எண்ணிக்கை 2,50,000 என்று கணக்கிடப்படுகிறது. இத்தகைய ஆக்கிரமிப்புகள், அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. ஐரோப் பிய கண்டத்திலிருந்து வேலை தேடியும் பலர் இப்படி வந்தனர். அமெரிக்க கண்டத் தின் பல பகுதிகளில் பல நூறாண்டுகளாக வாழ்ந்த மக்களை, இனப் படுகொலை செய்து, ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து மற்ற இனத்தவர்கள் குடியேற்றப்பட்டனர்.

எது நாகரீகம்?

அட்லாண்டிக் சமுத்திரத்தின் கட லோரம் துவங்கி, பசிபிக் சமுத்திரக் கரை வரை, அத்தனை பூர்வ குடியினரையும் அழித் தொழித்து, அமெரிக்க சாம்ராஜ்யம் ஸ்தாபிக் கப்பட்டது. இதற்கு சுமார் 300 ஆண்டுகள் பிடித்தன. இந்த 300 ஆண்டுகளும் உலகமே அதிர்ந்து போகிற அளவுக்கான கொடுமை கள் மனித குலத்தின் மீது தொடுக்கப்பட்டன. 1830ல், அமெரிக்க அதிபராக இருந்த ஜாக் சன், பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலப் பரப்பில் இருந்த காட்டுமிராண்டிகளை வெளியேற்றிவிட்டு, நாகரீகமான வெள்ளை இன மக்களை அடர்த்தியாகக் குடியேற்று வது தான் அமெரிக்காவின் நோக்கம் என்று பகிரங்கமாக அறிவித்தார். அமெரிக்காவின் எல்லை கள் இப்படித்தான் விரிவடைந்தன. விரிவாக்கத் திற் காக, உள்ளூர் மக் கள் மீது படு கொலைகள், உயி ருடன் எரிப்பு, ஏமாற்று வேலை, மோசடி, பெண் கள் மீது சொல்ல முடியாத பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விட ப்பட்டன. நாகரீகம் சொல்லிக் கொடுக்கி

றோம் என்ற பெயரிலும், உயர்ந்த தத்துவம், நாகரீகம், ஞானம், மனிதாபிமானம், சுதந்திரம், ஆண்மை உடைய உயர் இனம் முன்னேறு வது தான் உலகத்துக்கு நல்லது என்ற பெய ரிலும் கொடுமைகள் நடந்தன. இன்று ஜன நாயகம் சொல்லிக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல நாடுகளுக்குள் அமெரிக்க ஏகாதிபத்தியம் நுழைவதற்கு, அன்றே அச்சாரம் போடப்பட்டுவிட்டது. அமெரிக்க ஊடகங்கள் மற்றும் வெகுஜன பொதுப் புத்தி யின் ஒரு பகுதியாக இது மாறிவிட்டது. அண்டை நாடுகளை ஆக்கிரமித்து தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்கு முத லாளித்துவ வணிக நலனும், லாப நோக்கமும் தான் அடிப்படை காரணமாக இருந்தன. உதா ரணமாக, கியூபாவைப் பற்றிச் சொல்லும் போது, கியூபாவில் 1 கோடி ஏக்கர் செழிப்பான வனப் பகுதி உள்ளது. இங்குள்ள மரங்களின் ஒவ்வொரு அடியும், அமெரிக்காவில் பெரும் லாபம் கொடுக்க வல்லது என்று அமெரிக்க பத்திரிகைகள் எழுதின. அன்றைக்கு நிலம், மரம் போன்ற பொருட்களாக இருக்கலாம், இன்றைக்குப் பெட்ரோலியமாக இருக்கலாம். ஆக்கிரமிப்பின் நோக்கம் ஒன்றே.

பிற நாட்டுத் தலைவர்கள் அரசியல் படுகொலை செய்யப்படுவது

அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ, ஏகாதிபத்திய நலனுக்கும், கொள்ளை களுக்கும் விரோதமாக இருக்கக் கூடியவர்க ளுக்கு, குறிப்பாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், கைப்பற்றும் நிலையில் செல்வாக்குடன் இருந்தாலும் அவர்களுக்கு நாள் குறித்து விடும். கடந்த காலத்தில், சிஐ ஏவின் இத்தகைய பல சதிகள் அம்பல மாகியுள்ளன. சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள கூலிப்படைகள், போதைப் பொருள் வியா பாரிகள், சமூக விரோதிகளுடன் கூட்டு சேர்ந்து, அரசியல் கொலைகளை சிஐஏ அரங்கேற்றும் என்பது ஊரறிந்த ரகசியம். அமெரிக்க அரசு, சிஐஏ, லாப வெறி அமெரிக்க நிறுவனங்களுக்கும் ராணுவத்துக்கும் உள்ள நெருக்கமான பிணைப்பு (இது ராணுவத் தொழில் கூட்டமைப்பு என்று அழைக்கப் படுகிறது) ஆகியவை இதில் மையப் பங்கு வகிக்கின்றன. ஃபிடல் காஸ்ட்ரோ மீது பல முறை கொலை முயற்சிகள் நடந்துள்ளன. ஈரான் நாட்டு எண்ணய் வளங்களை நாட்டு நலன் கருதி நாட்டுடமையாக்கிய மொஸ் ஸாதெக், காங்கோவின் பேட்ரிஸ் லுமும்பா, டொமினிகன் குடியரசின் ரஃபேல் ட்ரூ ஜில்லோ, சிலியின் ரீனே ஷ்னீடர், புரட்சி யாளர் சேகுவேரா, பின்னாளில் அலெண்டே என்று படுகொலை செய்யப் பட்ட ஏழை நாடு களின் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள், தேச பக்தர்களின் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது.. இத்தாலியில் இருந்த வலுவான கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைக்க முயற்சித்த குற்றத்துக்காக இத் தாலியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் அல்டோ மோரோ கொலை செய்யப் பட்டார். ஆப்கானிஸ்தானில் டாக்டர் நஜி புல்லா தூக்கிலிடப்பட்டார். அண்மையில் காலமான பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந் துள்ளது. முற்போக்குவாதிகளாக இல்லா விட்டாலும் ஏகாதிபத்தியத்துடன் முரண்டு பிடிப்பவர்கள், ஒத்துப் போகாதவர்களும் ஏரா ளமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிற நாடுகளில் உள்ள அரசுகள் ஒத்து வராவிட்டால், அவற்றுக்குப் பல பெயர்கள் சூட்டி, அவற்றைக் கீழே இறக்கி பொம்மை அரசுகளை உட்கார வைப்பதிலும் அமெ ரிக்காவை அடித்துக் கொள்ள யாராலும் முடி யாது. லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெ ரிக்காவின் இந்த அநீதிகளை சகிக்க முடி யாத அளவு சந்தித்திருக்கின்றன. டொமினி கன் குடியரசில் 4 முறை தலையீடு செய்த துடன், 8 ஆண்டுகள் அமெரிக்க துருப்புகள் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டன. ஹைத்தி யில் 1915 துவங்கி 19 ஆண்டுகள் துருப்புகள் நிறுத்தி வைக்கப் பட்டன. 1900- 1933 கால கட்டத்தில் கியூபாவில் 4 முறையும், பனா மாவில் 6 முறையும், குவாதமாலாவில் ஒரு முறையும், ஹோண்டுராசில் 7 முறையும், நிகரகுவாவில் 2 முறையும் ராணுவத் தலை யீடுகள் உட்பட அமெரிக்காவின் தலையீடு இருந்திருக்கிறது. ஆட்சிக் கவிழ்ப்புகளும் அரங்கேறியுள்ளன. இன்றைக்கும், பல நாடுகளில் அமெரிக்க துருப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரை அமெரிக்க அரசின் தலையீடுகளும் பல நாடு களின் உள்நாட்டு விவகாரங்களில் தொடர் கின்றன.

தற்போது லத்தீன் அமெரிக்க பிரதேசத் தில், 11க்கும் மேற்பட்ட நாடுகளில் இடது சாரி அரசுகள் அமைந்திருப்பது தற்செயலா னதல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதும், அதன் கைப்பாவை அரசுகள் மீதும் உள்ள மக்களின் கோபம் இந்நிலையை உரு வாக்கியுள்ளது. அதே சமயம், வெனிசுலா அதிபர் சாவேசின் புற்றுநோய் காரணமான மரணத்தை ஒட்டி, லத்தீன் அமெரிக்க பிர தேசத்தில் ஆட்சியிலிருக்கும் இடதுசாரி தலைவர்களில் 4,5 பேருக்குப் புற்று நோய் என்பதிலும் அமெரிக்காவின் கை இருக்குமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. ரசாயன யுத்தத்தில் கை தேர்ந்தது தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதை மறந்து விடக் கூடாது.

சர்வ தேச விதிமுறைகளைக் காலில் போட்டு மிதிப்பது

வியட்நாமின் மீதான அமெரிக்காவின் 30 ஆண்டு கொடூர யுத்தம், ஏஜெண்ட் ஆரஞ்சு உள்ளிட்ட ரசாயன ஆயுதங்களைப் பயன் படுத்தி, பல தலைமுறைகளுக்குப் பாதகம் செய்த செயல்கள் எல்லாம் சாதாரண மனித உரிமை மீறல்களா? 5 லட்சம் குழந்தைகள் ஊனமடைந்ததும், ஊனத்துடன் பிறந்ததும் மன்னிக்கக் கூடிய குற்றங்களா? ஜப்பானின் மீது அணுகுண்டுகளைப் போட்டு மனிதப் பேரழிவை ஏற்படுத்தியது லேசான விஷ யமா? கியூபா உள்ளிட்ட நாடுகள் மீது பல் லாண்டு பொருளாதாரத் தடை விதித்ததன் விளைவாக ஏற்பட்டுள்ள பாதகங்கள் கொஞ்சநஞ்சமா? ஆனால் வீர வியட்நாம் அமெரிக்காவை விரட்டியடித்தது. சின்னஞ் சிறு சோஷலிச கியூபா, சவால் விட்டு நின்று காட்டியது. ஆனால், அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் இத்தகைய வன்கொடுமைகளை எந்த சர்வ தேச நீதிமன்றம் என்ன செய்ய முடிந்தது? எந்த மனித உரிமை கவுன்சி லால் நடவடிக்கை எடுக்க முடிந்தது? ஐநா சபையால் என்ன தலையீடு செய்யப் பட்டது?

ஆக்கிரமிப்புக்கு ஆதரவு

பாலஸ்தீனத்தை சின்னாபின்னப் படுத்தி, இஸ்ரேல் உருவாகவும், இன்று வரை இஸ்ரேல் நடத்தும் மிகக் கொடுமையான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களுக்கும் அமெ ரிக்க அரசும், இதர சில மேற்கத்திய நாடு களும், பக்கபலமாக இருந்து வருகின்றன. தங்களது சொந்த நாட்டிலிருந்து பாலஸ் தீனிய அரபு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்றப் பட்டனர். கிட்டத் தட்ட 1 கோடி பேர் வெளியேற்றப் பட்டதாகக் கூறப்படு கிறது. பல்லாயிரக் கணக்கானோர் கொன்று குவிக்கப் பட்டனர். இஸ்ரேல், ஆக்கிரமிப்பு பகுதிகளை விட்டு வெளியேற வேண்டு மென்று பலமுறை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானங்கள் முன் மொழியப் பட்டன. இது வரை, 39 முறை, அமெரிக்கா தன் மறுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலைக் காப்பாற்றியிருக்கிறது. ஐநா சபையால் என்ன செய்து விட முடிந்தது?

இல்லாத பேரழிவு ஆயுதங்களைத் தேடுவதாக இராக்கில் நுழைந்து, நாசம் செய்து படுகொலைகளை அமெரிக்க அரசு நிகழ்த்தியது. 5 ஆண்டு யுத்தத்தில் 12 லட்சம் இராக்கியர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். இது இராக்கின் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் . பலர் ஊனமுற்றுள்ளனர். 20 லட்சம் பேர் (மக்கள் தொகையில் 13சத விகிதம்) அகதிகளாகி அண்டை நாடுகளில் அவலத்துடன் உள்ளனர். 45 லட்சம் பேர் அனாதைகளாகி விட்டனர். அதே சமயம், பேரழிவு ஆயுதங்களை இஸ்ரேல் வைத் திருப்பது வெளிப்படையாகத் தெரிந்தும், அமெரிக்கா கண்டு கொள்ளாமல் இருக் கிறது. தற்போது சிரியாவில் பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்ட கலகக் காரர்களுக்கு அமெரிக்காவும், அதன் நட்பு நாட்களும் நிதி, ஆயுதம், பயிற்சி என்று சகலமும் அளித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் அப்பாவி சிரிய மக்கள் 60,000 பேர் வரை கொல்லப் பட்டு, 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாகப் போய் சேர்ந்திருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை வளர்த்து விட்டு, தற்போது அவர்களை அழிக்கிறோம் என்ற பெயரில், அமெரிக்கா ஏராளமான துருப்புகளை அங்கு நிறுத்தி வைத்திருக்கிறது. பல்லாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலோர் அப்பாவி மக்கள் தான். 6 சுய அதிகாரம் பெற்ற குடியரசுகள் ஒன்றிணைந்த யூகோஸ்லாவியாவில், சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, ரத்த ஆறு ஓடியதற்கும், இனப் படுகொலைகள் நடந்ததற்கும் அமெ ரிக்க அரசின் பங்களிப்பு பிரதான காரணம்.

விசாரணை என்ற பெயரில் போர் கைதிகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்தும் சித்ரவதைகள் (அபு கிரெய்ப், குவாண்டனாமா சிறைச்சாலைகள் உட்பட) கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு மிருகத் தன்மை கொண்டவை. அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் ஒரு சேர மீறுபவை. இலங்கை மனித உரிமை மீறல்களை விசா ரிக்க வேண்டும் என்று இவர்கள் கூறுவது, சாத்தான் வேதம் ஓதுகிற கதையாகவே உள்ளது.

சர்வ தேசக் கம்யூனிச சதியை எதிர்த்த போர் என்றும், தீய சாம்ராஜ்யமான சோவியத் யூனியனை எதிர்த்த போர் என்றும் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், தற்போது இஸ்லாமிய பயங் கரவாதத்துக்கு எதிரான போர் என்று, ஒவ் வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பெயர் சூட்டி, தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கை களை நியாயப்படுத்திக் கொள்கிறது. உலக நலனுக்காகவே, தான் இதைச் செய்வதாக மக்களை நம்ப வைக்கிறது. கார்ப்பரேட் ஊட கங்கள் முழுமையாக ஒத்துழைக்கின்றன.

ஏகாதிபத்தியத்தின்

இரட்டை முகம்

அமெரிக்காவின் இத்தகைய கொடுஞ் செயல்களை தீரத்துடன் எதிர்த்ததிலும், எதிர்கொண்டதிலும் சோவியத் யூனியனுக்கு மகத்தான பங்குண்டு. இரண்டாவது உலகப் போருக்குப் பின் உருவான அணி சேரா இயக்கமும், அப்போது நிலவிய சர்வதேச நிலைமைகளும், பலாபலன்களும் ஏகாதி பத்திய நடவடிக்கைகளை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தின. சோஷலிச முகாம் என்ற ஒன்று இருந்தது, அமெரிக்க ஏகாதிபத் தியத்துக்குப் பெரும் பிரச்சனையாக இருந் தது என்பது தான் உண்மை. இன்று வலு வான சோஷலிச முகாம் இல்லாத நிலை யில், ஆகப் பெரும் பயங்கரவாதியாக, உலகத் தையே தன் ஆளுகைக்குள் கொண்டு வரும் ஆதிக்கவாதியாக, ஏகாதிபத்திய நாடுகளின் தலைவனாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இறுமாந்து நிற்கிறது.

சர்வ தேச நிதி மூலதனத்தின் கொள்ளை லாபத்துக்காக, உலகை வேட்டைக் காடாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் இதர மேலை நாடுகள், முதலாளித் துவத்தைத் தூக்கி நிறுத்த எதை வேண்டு மானாலும் செய்யத் தயாராக உள்ளன. வளரும் நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதும், சந்தைகளைக் கைப்பற்றுவதும் அதற்காக இந்நாடுகளின் இறையாண்மையை நீர்த்துப் போகச் செய்வதும், அதிரடி ஆக்கிரமிப்பு நட வடிக்கைகளில் இறங்குவதும் சமகால முத லாளித்துவத்தின் தேவையாக உள்ளன. பிர தேச ஒத்துழைப்பு என்ற பெயரில் இந் நாடுகள் அந்தந்த மண்டலத்தில் ஒரு கூட் டமைப்பை ( போல) உருவாக்குவதைக் கூட ஏற்றுக் கொள்ளாமல், பிரித்தாளும் சூழ்ச்சி யின் மூலம் பலவீனப்படுத்துவதும் ஏகாதிபத் திய மேலாதிக்கத்தின் தேவை. இது குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த தீர்மானம் விரிவாகவே விளக்குகிறது.

பல நாடுகளில் நிலவும் தேசிய இனப் பிரச்சனையில் அமெரிக்காவுக்கு ஒரே நிலைபாடு கிடையாது. நட்பு நாடாக இருந் தால், சிறுபான்மை தேசிய இனத்தின் நியாய மான உரிமை குரல்களுக்கு எதிராக அந் நாட்டு அரசை ஆதரிப்பது; அணி சேரா அல்லது சோஷலிச முகாமுடன் நெருக்க மாக இருக்கும் நாடானால், சிறுபான்மை தேசிய இன உரிமைகளுக்காகவே தான் பிறந்து வளர்ந்தது போன்ற நிலையை எடுப் பது; ஆக இரட்டை நிலைபாடு ஏகாதிபத் தியங்களுக்கு உண்டு.

இலங்கை அமைந்துள்ள கடல் பகுதி, அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு மிக வசதியாக இருக்கும் பகுதியாகும். ஏற் கனவே, திரிகோணமலையில் அமெரிக்கா வின் தளம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஒன்று பட்ட இலங்கை, அமெரிக்காவின் பக் கம் சாய்வது, ஏகாதிபத்தியத்துக்குப் பேருத வியாக இருக்கும். இரண்டாகப் பிரிந்தால் இன்னும் வசதி தான். அணி சேரா நாடாக இருக்கும் இலங்கையைத் தனது முகாமுக்கு ஆதரவாகக் கொண்டு வரும் நோக்கம், அமெ ரிக்காவின் இன்றைய நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கிறது. இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை குறித்தோ, மிக மோச

மாக பாதிக்கப் பட்டு நிற்கும் இலங்கை தமிழர் கள் மீதோ அமெரிக்காவுக்கு அக்கறை எது வும் கிடையாது. ஒரு வேளை, எதிர்பார்க்கிற படி இலங்கை அரசு ஏகாதிபத்திய முகா முக்குப் படிந்தால், மனித உரிமை தீர்மானம் காற்றில் பறக்க விடப்படும் என்பதில் எள் ளளவும் சந்தேகமே தேவையில்லை.

எனவே தான், உலக பயங்கரவாதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வலை பின் னலுக்கு இரையாகி விடக் கூடாது. அமெ ரிக்க அரசு உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடு களின் அக்கிரமங்களுக்கு எதிராக, வளரும் நாடுகளின் இறையாண்மை பாதுகாக்கப் பட வேண்டும்; அதே சமயம், அந்நாடுகளின் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசுகள் கட்டவிழ்த்து விடும் வர்க்க சுரண்டலுக்கு எதிராக, அங்குள்ள அனைத்து தேசிய இனங் களையும் சார்ந்த தொழிலாளி வர்க்கம், இதர சுரண்டப்படும் மக்களையும் ஒன்றிணைத் துப் போராட வேண்டும். கூடவே, சிறு பான்மை தேசிய இனங்களுக்கு சம உரிமை, சம வாய்ப்புகள், அவர்களது மொழி, கலாச் சாரம் பாதுகாக்கப் படுவது போன்ற ஜன நாயகக் கடமைகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும். அதற்காக அனைத்து இனங் களிலும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று படுத்தி, அரசியல் தீர்வுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். இலங்கையிலும் இத் தகைய அணுகுமுறையே பலனளிக்கும்.

இந்தியா தனது ராஜீய உறவைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். சர்வதேச மன்றங் களில் குரல் எழுப்ப வேண்டும். அதை விடுத்து, இலங்கை அரசின் பாகுபடுத்தும் கொள்கைகள் ஒரு புறம், இலங்கை ராணு வம், இலங்கையின் பூர்வகுடி தமிழ் மக்கள் மீது நடத்திய கொடுமையான மனித உரிமை மீறல்கள் மறு புறம் உருவாக்கும் நியாயமான கோபத்திலும், வேதனையிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் துணைக்கு அழைப்பது அடுப்புக்குத் தப்பி கொதிக்கும் எண்ணெயில் விழுந்த கதையாக மாறி விடும்.

(ஆதாரம்: ‘பயங்கரவாதம் வேர்களும், தீர்வுகளும்’ டி.ஞானையா எழுதிய ஆங்கிலப் புத்தகம் - முதல் பதிப்பு 2010- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விலை ரூ.190)

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், தகவல்களை இலகுவாக எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் (USB) பயன்படுத்தப்படுகின்றன. இருந்தும் அத்தகவல்களை கணணி வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படுகின்றது. இத்தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு USB Write Protecter என்ற ஒரு மென்பொருள் பயன்டுகின்றது. 1. குறித்த பென்டரைவை கணணியுடன் இணைக்கவும்2. தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்3. பின் அம்மென்பொருளை இயக்கவும். அவ்வாறு இயக்கும் போது ஒரு Page தோன்றும்4. அதில் USB write protection ON என்பதை தெரிவு செய்யவும்இப்பொழுது குறித்த பென்டிரைவில் (USB) காணப்படும் கோப்புக்களை அழிக்கவோ அல்லது பிரதிசெய்யவோ (Copy) முடியாது.அவ்வாறு செய்ய வேண்டுமெனில் மீண்டும் மென்பொருளை இயக்கி USB Write Protection OFF என்பதை தெரிவு செய்ய வேண்டும்.


இணையதள முகவரி : USB Write

------------------------------------------------------------------------------------------------------------------------------------
சத்தீஸ்கர் மாநிலத்தில் மஸ்தார் எனும் இடத்தில் டாடா நிறுவனம் எஃகு ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட சில நாள்களுக்குப் பின், சல்வாஜுடும் என்கிற ஆயுதமேந்திய கண் காணிப்புப் படை உருவாக்கப்பட்டது. ‘காடுகளில் வாழும் மாவோயிஸ்டுகளின் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தாமாகவே முன்வந்து உருவாக்கிய மக்கள் படை இது’ என்று அரசு விளக்கமளித்தது. கனிம வளம் உள்ள காட்டுப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காக அரசும் சுரங்க முதலாளியக் குழுமங்களும் கூட்டாக உருவாக்கிய ஆயுதப் படை தான் சல்வாஜுடும். மற்ற மாநிலங்களிலும் வெவ் வேறு பெயர்களில் இதுபோன்ற குண்டர் படைகளை அரசுகளும் முதலாளிகளும் இணைந்து உருவாக் கினர். எனவேதான் பிரதமர் மன்மோகன்சிங் ‘மாவோ யிஸ்டுகள்தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்’ என்று அறிவித்தார். இது மாவோயிஸ்டுகள் மீதான அரசின் போர் அறிவிப்பே ஆகும்.
சல்வாஜுடும் காடுகளில் சிற்றூர்களில் வாழும் மக்களை அச்சுறுத்தி வெளியேற்றுவதற்காக அவர்களைத் தாக்கியது. பலர் கொல்லப்பட்டனர். வீடுகள் எரிக்கப் பட்டன. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இவ்வாறு வெளியேறும் பழங்குடியினருக்காக அரசு முகாம்களை அமைத்து உதவுவது போல் நடித்தது. 600 சிற்றூர் களிலிருந்து 50,000 மக்கள் அரசு முகாம்களில் அடைக்காலம் புகுந்தனர். 3,50,000 பேர் வேறு இடங் களுக்கு ஓடிவிட்டனர். சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர், ‘காடுகளிலிருந்து வெளியேறாமல் உள்ள எல்லோரும் மாவோயிஸ்டுகளாகக் கருதப்படுவார்கள், என்று அறிவித்தார். இவ்வாறாக நவீன சுதந்தர இந்தியாவில் சில பகுதிகளில் மக்கள் தங்கள் நிலத்தை உழுது விதைப்பதுகூட பயங்கரவாதச் செயலாகக் கருதப்படு கிறது. சல்வாஜுடும் செய்த அட்டூழியங்களால் மக் களிடம் எதிர்ப்பும் சினமும் தீயாய் மூண்டது. அவர்கள் திருப்பித் தாக்கத் தொடங்கினர். பலர் மாவோயிஸ்டு படையில் சேர்ந்தனர். 2009ஆம் ஆண்டு ‘பசுமை வேட்டை’ என்ற பெயரில் மாவோயிஸ்டுகள் மீதும் மக்கள் மீதும் அரசுப் படைகள் தாக்குதல் தொடுத்தன. சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட், மேற்குவங்களாம் ஆகிய பகுதிகளில் இரண்டு இலட்சம் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.
அண்மையில் பஸ்தாரில் ஆசிரியராகப் பணி செய்த பழங்குடி இனப்பெண் சோனிசோரி என்பவரை மாவோயிஸ்டுகளின் கையாள் என்று கூறி காவல் துறை கைது செய்தது. மாவோயிஸ்டுகளுக்குக் கையா ளாக இருப்பதாக ஒத்துக்கொள்ளுமாறு சோனிசோரி யின் பிறப்பு உறுப்புக்குள் கற்கள் திணிக்கப்பட்டன. இந்த ஆசிரியப் பெண்மணி கைது செய்யப்பட்டதற்குக் கடும்  எதிர்ப்பு எழுந்தது. கொல்கத்தா மருத்துவமனை யில் மருத்துவ ஆய்வுக்காக அவர் சேர்க்கப்பட்டபோது, பிறப்பு உறுப்பில் இருந்த கற்கள் அகற்றப்பட்டன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசார ணைக்கு வந்தபோது சோனிசோரியின் பிறப்பு உறுப்பிலிருந்து அகற்றப்பட்ட கற்கள் (பாலிதீன் பையில்) நீதிபதிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதன்பிறகும் சோனிசோரி சிறையில் இருக்கிறார். சோனிசோரியை விசாரணை செய்த காவல்துறை கண்காணிப்பாளர் அன்கிட் கார்க் என்பவருக்கு வீரச் செயல் புரிந்ததற்காக, குடியரசு நாளில், குடியரசுத் தலைவரின் கையால் தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய இந்தியாவில் இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் இழைக்கப்படும் கேடுகள், கொடுமைகள் பற்றிய செய்திகளை மக்களின் பேரெதிர்ப்பு மற்றும் மாவோயிஸ்டுகளின் தாக்குதல் கள் வாயிலாகத்தான் நாம் அறிகிறோம். அரசுகள் இதுபற்றிய தகவல்களைத் தருவதில்லை. புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் இரகசிய ஆவ ணங்களாக உள்ளன. ஊடகங்களில் ஒரு சில மட்டுமே இதுபற்றிய செய்திகளை மக்களுக்குத் தெரிவிக் கின்றன. பெரும்பாலான அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் இச்செய்திகளை வெளியிடுவதில்லை. ஏனெனில் இவ் ஊடகங்களின் வருவாயில் பெரும் பகுதி பெருமுதலாளியக் குழுமங்கள் அளிக்கும் விளம் பரங்கள் மூலம் கிடைக்கிறது. மேலும் முதலாளியக் குழுமங்களே ஊடகங்களின் உரிமையாளராக உள்ளன.
பெருமுதலாளியக் குழுமங்களின் கொடையாண்மை (Corporate Philanthropy):
மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, 1990களில் முதலாளியக் குழுமங்கள் அழகிப் போட்டிகளை நடத்தின. இப்போது, குறிப்பாக, சுரங்கத் தொழிலில் உள்ள பெருங்குழுமங்கள் இலக்கிய விழா, கலை விழா, திரைப்பட விழா என்கிற பெயரில் நிகழ்ச்சி களை நடத்துவதில் முனைப்புக் காட்டி வருகின்றன. பன்னெடுங்காலமாகக் காடுகளில் வாழ்ந்துவரும் கோண்ட் பழங்குடியினரை வெளியேற்றி பாக்சைட் கனிமத்தைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் வேதாந்தா நிறுவனம் திரைப்படக் கல்வி பயிலும் இளைஞர் களுக்கு ‘மகிழ்ச்சியை உருவாக்குவது’ என்ற தலைப்பில் திரைப்படப் போட்டி நடத்தியது. தற்காலக் கலைகள் குறித்த சிறப்பு இதழை ஜிண்டால் குழுமம் வெளி யிட்டது. அப்போது  இந்தியாவில் உள்ள கலைஞர் களில் பலருக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டியது. தெல்கா ‘நியூஸ்வீக்’ நடத்தும் சிந்தனைக் களம் நிகழ்ச்சியின் புரவலர் எஸ்ஸார் குழுமமும். டாடா நிறுவனமும், ரியோ டின்டோ நிறுவனமும் இணைந்து அண்மையில் ஜெய்ப்பூரில் இலக்கிய விழா நடத்தின. அறிவாளிகளை, கலைஞர்களை, எழுத்தாளர்களைத் தன் வலைக்குள் இழுத்துப்போட்டுத் தன் ஆதரவாளர் களாக மாற்றுவதே கார்ப்பரேட் கொடையாண்மையின் குறிக்கோள்.
கார்ப்பரேட்டுகளின் கவர்ச்சியான கொடையாண் மையின் வரலாறு 20ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தில் அமெரிக்காவில் அறக்கட்டளைகள் என்ற பெயரில் தொடங்கியது. கார்னிஜி எஃகு நிறுவனம் 1911இல் முதலாவது அறக்கட்டளைகளையை தொடங்கியது. 1914இல் ராக்பெல்லர் அறக்கட்டளை உருவாக்கப் பட்டது. ஜெ.டி. ராக்பெல்லர், ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனியை நிறுவியவர். இப்போது நம் ஊரில் டாடா, அம்பானி போல் அப்போது அமெரிக்காவில் கார்னிஜி, ராக்பெல்லர் நிறுவனங்கள் இருந்தன.
ஜெ.டி. ராக்பெல்லர்தான் அமெரிக்காவின் முதலாவது பில்லியனர்; உலகின் முதல்நிலைப் பணக்காரர். ஆப்பி ரகாம் லிங்கன்பால் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தவர். குடிப்பழக்கம் இல்லாதவர். கடவுள் தான் தனக்கு இவ்வளவு பெருஞ்செல்வத்தைக் கொடுத்தார் என்று அழுத்தமாக நம்பியவர்.
பெரு முதலாளியக் குழுமங்கள் அமெரிக்காவில் அறக்கட்டளைகளை அமைக்கத் தொடங்கிய போதே, அவற்றின் நம்பகத்தன்மை, சட்ட ஏற்பு, பொறுப் பாண்மை இல்லாமை ஆகியவை குறித்துக் கடுமை யான விவாதம் நடந்தது. இந்நிறுவனங்களிடம் உபரி யாகப் பெருந் தொகை இருக்குமானால், தொழி லாளர்களின் ஊதியத்தை உயர்த்தித் தரட்டும் என்று மக்கள் கேட்டனர். (இவ்வாறு மக்கள் கேட்கும் நிலை அப்போது அமெரிக்காவில் இருந்தது). தங்கள் தொழிலைப் பாதுகாப்பதற்கும், பெருக்குவதற்குமான ஓர் உத்தியே அறக்கட்டளைகளை நிறுவுவதாகும். ஏனெனில் அறக்கட்டளையின் பணத்துக்கு வரிகட்ட வேண்டியதில்லை; எவ்வளவு தொகை வேண்டுமா னாலும் வைத்துக் கொள்ளலாம்; யாருக்கும் கணக்குக் காட்ட வேண்டியதில்லை; வெளிப்படைத் தன்மையற்றது. பொருளியல் வழியாகக் குவித்த செல்வத்தை அரசியல், சமூக, கலாச்சார மூலதனமாக மாற்றுவதற்கும், எதிரிகளைச் சமரச வழிக்குக் கொண்டு வருவதற்கும், பணத்தை ஆட்சி அதிகாரமாக மாற்றுவதற்கும் அறக்கட்டளைகள் சிறந்த வாயில் களாக உள்ளன. தங்களின் கொள்ளை இலாபத்தில் கடுகளவு பணத்தைச் செலவிட்டு உலகையே ஆள் வதற்கு இதைவிட வேறு சிறந்த வழி என்ன இருக்கிறது? கணினி பற்றி ஒன்றிரண்டு தொழில் நுட்பங்கள் மட்டுமே தனக்குத் தெரியும் என்று ஒத்துக் கொள்கிற பில்கேட்ஸ், அமெரிக்காவிற்கு மட்டுமல் லாமல், உலகிற்கே கல்வி, சுகாதாரம், வேளாண்மைக் கோட்பாடுகளை வகுக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றிருப்பது எப்படி? எல்லாம் அறக்கட்டளை செய்யும் மாயவித்தைதான்!
1920களில் அமெரிக்க முதலாளியத்துக்குக் கடல் கடந்த நாடுகளின் மூலப்பொருள்களும், சந்தையும் தேவைப்பட்டன. எனவே உலக அளவில் கார்ப் பரேட்டுகள் ஆதிக்கம் செய்வதற்கான திட்டத்தை அறக்கட்டளைகள் தாம் வகுத்தன. 1924ஆம் ஆண்டு ராக்பெல்லர் அறக்கட்டளையும், கார்னிஜி அறக்கட்ட ளையும் இணைந்து அயல்உறவுக்கான கவுன்சில் (Council on Foreign Relations - CFR) என்ற அமைப்பை உருவாக்கின. அமெரிக்காவின் பெருமுதலாளிய நிறுவனங்களின் நலன்களைப் பேணும் வகையில் அமெரிக்காவின் அயல்உறவுக் கொள்கைகளை வகுப்பது இதன் வேலை.
ஃபோர்டு அறக்கட்டளையும் இந்த அமைப்புக்கு நிதி உதவி செய்து வருகிறது. 1947ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.அய்.ஏ.வுக்கு அயல் உறவுக் கவுன்சில் பண உதவி செய்து வருகிறது. மேலும் இவை இரண்டும் இணைந்து செயல் படுகின்றன. பிறகு, அமெரிக்க அரசின் செயலாளர்கள் 22 பேரும் இக்கவுன்சிலில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர். அய்க்கிய நாடுகள் மன்றத்தை அமைக்க ஏற்படுத்தப்பட்ட செயற்குழுவில் அயல் உறவுக் கவுன்சில் உறுப்பினர்கள் 5 பேர் இடம் பெற்றிருந்தனர். ராக்பெல்லர் 8.5 மில்லியன் டாலர் நிதி அளித்து நியூயார்க்கில் வாங்கிக் கொடுத்த நிலத்தின் மீதுதான் அய்.நா. மன்றக் கட்டடம் இன்றும் அமைந்துள்ளது.
1946க்குப்பின் உலக வங்கியின் தலைவர் களாகப் பதவி வகித்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் அயல்உறவுக் கவுன்சிலில் உறுப்பினர்களாக இருந்தவர்களே! ஆனால் உலகில் ஏழைகளின் தேவதூதர்களாக இவர்கள் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.
1950களில் ராக்பெல்லர் மற்றும் போர்டு அறக் கட்டளைகள், பல நாடுகளிலும் இருந்த அரசு சாரா அமைப்புகளுக்கும் (தொண்டு நிறுவனங்கள்) கல்வி நிறுவனங்களுக்கும் நிதி உதவி செய்தன. அமெரிக்க அரசின் ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்கு அறக்கட்ட ளைகள் பாதை அமைத்துத் தந்தன. அப்போது அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், இந்தோனேசியாவிலும், ஈரானிலும் முறைப்படித் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சிகளைக் கவிழ்த்துக் கொண்டிருந் தது. போர்டு அறக்கட்டளை அமெரிக்க மாதிரியிலான பொருளாதாரப் படிப்பை இந்தோனேசியப் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்தியது. இதில் பயின்ற மாணவர் களுக்கு அமெரிக்க இராணுவ அதிகாரிகள் பயங்கர வாதத் தாக்குதல்களை முறியடிப்பதற்கான பயிற்சியை அளித்தார்கள். 1965இல் இந்தோனசியாவில் சி.அய்.ஏ. ஆதரவுடன் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பில், இம் மாணவர்கள் பங்கேற்றனர். சி.அய்.ஏ. ஜெனரல் சுகர்ட்டோவை ஆட்சியில் அமர்த்தியது. அதன்பின் சி.அய்.ஏ. அளித்தத் திட்டத்தின்படி பல இலட்சம் கம்யூனிஸ்டுகள் அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதேபோன்று ராக்பெல்லர் அறக்கட்டளையால் சிகாகோ பல்கலைக்கழகத்தில் புதிய பொருளாதாரக் கொள்கை பற்றிய படிப்பு ஏற்படுத்தப்பட்டது. சிலி நாட்டு இளைஞர்கள் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்க் கப்பட்டனர். சி.அய்.ஏ. இவர்களுக்குப் பயிற்சி அளித்தது. சிலி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சித் தலைவர் அலண்டே அமெரிக்க முதலாளி களின் சுரங்கங்களை நாட்டுடமையாக்கினார். சோச லிசக் கொள்கையினரான அலண்டே ஆட்சியை 1973இல் சி.அய்.ஏ. கவிழ்த்தது. அலண்டே படு கொலை செய்யப்பட்டார். இதற்கு அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களும் இராணுவத் தினரும் துணை நின்றனர்.
1957இல் ராக்பெல்லர் அறக்கட்டளை இரமோன் மகசேசே விருதை ஆசிய நாட்டின் சமூகத் தலைவர் களுக்கு வழங்குவதற்கென ஏற்படுத்தியது. இரமோன் மகசேசே என்பவர் பிலப்பைன்சு நாட்டின் அதிபராக இருந்தவர். இவர் ஆசியாவில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்கான செயல்பாடுகளில் அமெரிக்காவின் அடியாளாகச் செயல்பட்டவர். 2008ஆம் ஆண்டு போர்டு அறக்கட்டளை, பல துறைகளில் சிறப்பாகப் பணிபுரிபவர்களுக்கென்று மகசேசே விருது வழங்கத் தொடங்கியது. இந்தியாவில் கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர் ஆகியோரிடையே மகசேசே விருது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எம்.எஸ். சுப்புலட்சுமி, சத்தியஜித்ரே, செயப்பிரகாஷ் நாராயணன், சிறந்த ஊடகவியலாளரான பி. சாய்நாத் முதலானோர்க்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மகசேசே பட்டத்தால் கிடைத்ததைவிட, இவர்கள் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய் துள்ளனர்.
பொதுவாக இதுபோன்ற விருதுகள், பட்டங்கள் வழங்கப்படுவதன் நோக்கம், எத்தகைய எதிர்ப்புகளை அனுமதிப்பது, எவற்றை அனுமதிக்கக் கூடாது என்பதை மக்களுக்கு உணர்த்துவதேயாகும். ஊழலுக்கு எதிராக அன்னா அசாரேவின் இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்களுள் மூவர் மகசேசே விருது பெற்ற வர்கள் - அன்னா அசாரே, அரவிந் கெஜிரிவால், கிரண்பேடி. அரவிந் கெஜ்ரிவால் பல தொண்டு நிறுவனங்களை நடத்துகிறார். அவற்றுள் ஒன்று போர்டு அறக்கட்டளையின் நிதி உதவியால் நடக்கிறது. கிரண்பேடியின் தொண்டு நிறுவனத்துக்கு கொகோ கோலாவும், லேமேன் பிரதர்ஸ் நிறுவனமும் நிதி வழங்குகின்றன. அதனால் அன்னா அசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் பெருமுதலாளியக் குழு மங்களின் பகற்கொள்ளையைப் பற்றி வாய் திறப்ப தில்லை.
பன்னாட்டு நிதியம் ‘மறுகட்டமைப்பு’ என்ற பெயரால் மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள், கல்வி, சுகா தாரம், குழந்தைகள் நலம், பிற வளர்ச்சித் திட்டங் களுக்குச் செலவிடும் தொகையைக் குறைக்குமாறு கட்டாயப்படுத்தின. அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தைத் தொண்டு நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டன. தனியார் மயமாக்கப்படும் அனைத்தும் தொண்டு நிறுவனமயமாகின்றன (NGO-Isation). எல்லா தொண்டு நிறுவனங்களையும் மோசடியானவை என்று கூறிவிட முடியாது. பல இலட்சக்கணக்கில் உள்ள தொண்டு நிறுவனங்களில் சில மட்டுமே உண்மையான தொண்டு செய்கின்றன. ஆனால், கார்ப்பரேட்டுகளின் நிதி உதவி யுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு எதிரான மக்கள் இயக்கங்களைக் காயடிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
நருமதை அணை எதிர்ப்பு இயக்கம், கூடங்குளத் தில் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆகியவற்றை கார்ப்ரேட் ஊடகங்கள் வெட்கமின்றி, அயல்நாடுகளிலிருந்து நிதி உதவி பெறுகின்றன என்று கூறுகின்றன.
பெருந்தொகையை வைத்துக் கொண்டுள்ள பெரும் பாலான தொண்டு நிறுவனங்கள் புரட்சிகரமான இயக் கத்தை நடத்துவோரை அவற்றின் மாத ஊதியக்காரர் களாக மாற்றி விடுகின்றன. அறிவாளிகள், கலைஞர்கள், திரைப்படத் துறையினர் ஆகியோரை அவர்களின் புரட்சிகர நோக்கங்களிலிருந்து தடம்புரளச் செய்து, மனித உரிமைகள், பெண்ணுரிமை, சமூக முன் னேற்றம் என்கிற மென்மையான தளங்களில் செயல் படுமாறு மாற்றி விடுகின்றன.
முதலாளியம், தாராளமயம், தனியார்மயக் கொள் கைகளை நடைமுறைப்படுத்துவதில் வெற்றி பெற் றுள்ளது. ஆனாலும் முதலாளியம் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நெருக்கடியின் விளைவுகள் இன்னும் முழுமையாக வெளிப்பட வில்லை. மார்க்சு, “முதலாளியம் எல்லாவற்றுக்கும் மேலாக, தனக்குச் சவக்குழி தோண்டுவோரை - பாட்டாளிவர்க்கத்தைப் படைக்கிறது. முதலாளியத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் நடந்தே தீரும்” என்று கூறியிருக்கிறார்.
மார்க்சு கணித்தவாறு முதலாளியம் பாட்டாளிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆலைகள், தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. வேலைகள் பறிபோகின்றன. தொழிற்சங்கங்கள் செயலற்று உள்ளன. பாட்டாளிகள் ஒருவருக்கெதிராக ஒருவர் மோதவிடப்படுகிறார்கள். இந்தியாவில் முசுலீம்களுக்கு எதிராக இந்துக்கள், தலித்துகளுக்கு எதிராகப் பழங்குடியினர், ஒருநிலப் பகுதியினர்க்கு எதிராக வேறொரு நிலப்பகுதியினர் மோதவிடப்படு கின்றனர். ஆயினும் உலகம் முழுவதும் முதலாளி யத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடை பெறுகின்றன. சீனாவில் எண்ணற்ற வேலை நிறுத்தங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள் நடக்கின்றன. இந்தியாவில் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிலங்களைக் கையகப்படுத்த விடாமல் மக்கள் போராடி வருகின்றனர். முதலாளியம் மாற்று வழி என்ன என்று தெரியாமல் திகைத்து நிற்கிறது.
அம்பானி குடும்பத்தினர் அவர்களுடைய மாளி கைக்கு அன்தில்லா என்று ஏன் பெயரிட்டனர். 8ஆம் நூற்றாண்டில் இபேரியன் பகுதியில் (தற்போதுள்ள ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல்) நடந்ததாக வழங்கப் படும் கதையில் வரும் ஒரு தீவின் பெயர் அன்தில்லா. முசுலீம்கள் ஹிஸ்பானியாவைக் கைப்பற்றியதும், எட்டு கிறித்துவப் பாதிரிகளும் அவர்களுடைய ஆட் களும் கப்பலில் ஏறி தப்பிச் சென்றனர். சில நாள்கள் கழித்து அன்தில்லா தீவில் இறங்கினர். காட்டு மிராண்டிகள் கைப்பற்றிய தங்கள் தாயகத்திற்கு இனிச் செல்வதில்லை என்றும் உறுதிபூண்டார். தமக்கான புதிய நாகரிகத்தைப் படைப்பது என்று முடிவு செய்தனர். அதற்காக அவர்களுடைய படகுகளைத் தீயிட்டு எரித்தனர்.
அம்பானி குடும்பம் தங்கள் மாளிகைக்கு அன்தில்லா என்று பெயரிட்டிருப்பதால், தங்கள் தாய்நாட்டில் வறுமையிலும் அழுக்கேறிய - நாற்றமடிக்கும் சூழ்நிலையிலும் வாழும் மக்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு புதிய நாகரிக வாழ்வை உருவாக்கப் போகிறார்களா? அப்படியானால் இதுவே மிகவும் வெற்றிகரமான பிரிவினையாக அமையும். நடுத்தர வர்க்கத்தினரும் மேட்டுக்குடியினரும் விண் வெளிக்குச் சென்று வாழப் போகிறார்களா?
மும்பை நகரின் மீது இரவின் இருள் படர்கிறது. அன்தில்லா மாளிகையின் வாயிலுக்கு வெளியே சீருடையில் கையில் கைப்பேசிகளுடன் அம்மாளி கையின் காவலர்கள் காவலுக்கு நிற்கின்றனர். மாளிகையிலிருந்து ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் - பேய்களை விரட்டுவது போல எரிகின்றன. ஆனால் அக்கம்பக்கத்தில் வாழ்வோர், அன்தில்லா மாளிகையின்  ஒளிவெள்ளம் தங்களின் இனிய இரவைக் களவாடுவதாகக் கூறுகின்றனர்.
நமக்குரிய இரவை மீண்டும் நாம் பெறுவதற்கு இதுவே தகுந்த வேளையாகும்.

(அவுட்லுக்  இதழில் அருந்ததிராய் எழுதிய கட்டுரை தமிழாக்கம்; க. முகிலன்)


ஓபராவில் முதல் கறுப்பு அத்தியாயம்
-பேரா. ஆர். சந்திரா
‘1619 முதல் இன்றுவரை’

20.8.1619 அன்று ஆப் பிரிக்காவைச் சேர்ந்த 3 கறுப்பினப் பெண் களும், 17 கறுப்பின ஆண்களும் அமெ ரிக்காவில் உள்ள ‘ஜேம்ஸ் டவுன்’ என்ற பகுதியில் அடிமை களாக உழைக்க இறக்குமதி செய்யப் பட்டனர். 1624ல் முதல் கறுப்பினக் குழந்தை அமெரிக் காவில் பிறந்தது. மனிதநேயம் இன்றி, அடிமைகளாக கேவலமாக நடத் தப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுத்த ஜென்னி ஸ்லூ, 1725ல் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றார். இன்று ஒரு ஆப்பிரிக்க- அமெரிக்கர் ஜனா திபதியாக இருக்கலாம். ஆனால் அமெ ரிக்க வரலாற்றின் ஏடுகளை புரட்டினால், ஒவ்வொரு துறையிலும் கறுப்பின மக்கள் தடம்பதிக்க நடத்தியுள்ள போராட்டங் களையும், சகித்துக்கொண்ட அவமானங் களையும் காணமுடியும்.

கமில்லா வில்லியம்ஸ் (1919-2012)

அடிமைகளாக இறக்குமதி செய்யப் பட்ட கறுப்பின மக்கள் தங்கள் உழைப் புடன், அருமையான சங்கீதத்தையும் அமெரிக்க மண்ணுக்கு அளித்துள்ளனர். நூற்றுக்கணக்கான கறுப்பின ஆப்பி ரிக்க குழுக்கள் தங்கள் பாரம்பரிய சங் கீதம், கலைகளை ‘வெள்ளை’ மண் ணில் நிலைநாட்ட ஏராளமான தடை களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்படி, வெள்ளையர்கள் மட்டுமே பங்கு பெற்ற ‘ஒபரா’வில் தடம் பதித்த முதல் கறுப்புப் பெண் கமில்லா வில்லியம்ஸ். ‘ஒபரா’ என்பது ஒரு கலை வடிவம். இதில் பங்கேற்கும் கலைஞர்கள் நல்ல நடிப்புத்திறனுடன், அசாத்திய குரல் வளம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். நமது நாடக அரங்கில் காட்சி கள், உடைகள், நடனம், பாட்டு என்று இருப் பது போலவே ஒபராவிலும் இருக்கும். எனவே, அக்கலைஞர்கள் பன்முகத் திறன் கொண்டவர்களாக இருக்க வேண் டும். (நமது சினிமாவில் கே.எல். சைகல் (ஹிந்தி), எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம் மற்றும் பலர் (தமிழ்) இருந்தது போல், நடிப்பு, பாட்டு என இரண்டிலும் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்).

‘ஒபரா’ என்ற கலைவடிவம் பதினா றாம் நூற்றாண்டில் இத்தாலியில் துவங்கி, பின்னர் ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன்,

ரஷ்யா என பல நாடுகளுக்கும் பரவியது.

கறுப்பின மக்கள் முதலில் வேலை பற்றிய பாடல்களைப் பாடினர். 1830 களில் கிறிஸ்துவ இயக்கம், ஆன்மீகப் பாடல்களுக்கு வழிவகுத்தது. 1876ல் முதல் கறுப்பின சங்கீத காமெடி குழு ‘ஹையர் சிஸ்டர்ஸ்’ தோன்றியது. ‘ஒபரா’ கலை வடிவத்தில் கறுப்பின மக்கள் முக்கிய பங்குபெற காரணமாக இருந்தவர் தியோடர் ட்ரூரி என்பவர். 1900ல் வெள் ளையர்களை வாத்திய கலைஞர்களாக வும், கறுப்பின மக்களைப் பாடகர்களாக வும் கொண்ட குழுவை ஏற்படுத்தினார்.

18.10.1919ல் கமில்லா வில்லியம்ஸ் ஒரு சங்கீத குடும்பத்தில் பிறந்தார். டான்வில், வர்ஜீனியாவில் உள்ள கல் வாரி பாப்டிஸ்ட் சர்ச்சில் தனது 8வது வய தில் பாடத் துவங்கினார். 12 வயதில் முறை யான (க்ளாசிகல்) சங்கீதம் பயிலத் துவங்கினார். அவரது குரல் பயிற்சிக் கென அவரது தந்தை ஒரு வெள்ளைக் கார பாடகரை பயிற்சியாளராக அமர்த்தி னார். அன்றைய சூழல் வெள்ளையர்கள் படிக்கும் பள்ளி தனியாக இருந்தது. பல இடர்களை எதிர்கொண்டு கமில்லா வர்ஜீனியா ஸ்டேட் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் ஒரு ஆரம் பப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி னார். அங்கு குழந்தைகளுக்கு சங்கீதமும் கற்றுத் தந்தார்.

1943ல் முறையாக வாய்பாட்டு கற்றுக் கொள்ள ஸ்காலர்ஷிப் கிடைத்தது. 1944ல் ஸ்டாம்போர்டில் முதல் முறை யாக மேடையேறி ‘மேடம் பட்டர்ஃ ப்ளை’ என்ற வேடத்தில் தோன்றி, தனது குரலால் நிகழ்ச்சிக்கு வந்தவர்களைக் கவர்ந்தார். பார்வையாளர்களில் அன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பாடகி (சொப்ரானோ) ஜெரால்டின் பரர் அமர்ந்திருந்தார். கமில்லா ஏற்ற வேடத் தில் 1907ஆம் ஆண்டிலேயே நடித்து பிர பலமானவர் ஜெரால்டின். கமில்லாவின் குரல்வளத்தைக் கேட்ட அவர், கமில்லா வுக்கு உதவ முன் வந்தார். ஜெரால்டின் மூலம், ஆர்.சி.ஏ என்ற பிரபல நிறுவனத் துடன் கமில்லா ஒப்பந்தம் செய்து கொண் டார். 1948ல், வெர்டியன் ‘எய்டா’வில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து, பாடி னார். 1954ல், லண்டன் சாட்லர்வெல்ஸ் ஒபராவின் சியோ-சியோ-சான், கமில் லாவை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. வியன்னா ஒபராவில் முக்கிய கதாபாத்திரத்தில் பாடிய முதல் கறுப் பினப் பெண் என்ற பெயர் பெற்றார்.

1963ல் சிவில் உரிமை போராளிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர் கள் விடுதலைக்கு நிதி திரட்ட கமில்லா தனது ஊரில் பாடி, நடித்து நிதி திரட்டி னார். வாஷிங்டனை நோக்கி சிவில் உரிமை பேரணி நடைபெற்ற பொழுது, அதிலும் பாடினார். அந்தப் பேரணி முடிவில்தான் மார்டின் லூதர் கிங் உலக பிரசித்தி பெற்ற “எனக்கு ஒரு கனவு உள்ளது” என்ற உரையாற்றினார். 1964ல், மார்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அந்த நிகழ்ச்சியிலும் கமில்லா பாடினார்.

1946ல் சிட்டி சென்டர், மான்ஹட்ட னில், மேடை ஏறிய பொழுது, பெயர் அறியப் படாத கமில்லா, 1960ஆம் ஆண்டிற்குள் பல முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று, பல பிரபல ஒபரா கம்பெனிகளின் கீழ் பாடி சாதனைகள் பல புரிந்தார். கமில்லாவின் குடும்பம் வசதியான குடும்பம் அல்ல. தந்தை காரோட்டி, தாய் வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்தவர். ஆனால் இவை எதுவும் கமில்லாவின் கலை வளர்ச்சிக்குத் தடையாக இல்லை. ஒபராவின், முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமை பெற்றதுடன், 1977ல், ப்ளூமிங்டனில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தின் சங்கீதத் துறை யில் ஆசிரியராக நியமிக்கப்பட்ட முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையும் பெற்றார்.

சாதனைகள் பல செய்தபின்பும் கமில்லாவை வருத்தம் கொள்ளச் செய்த சம்பவங்கள் நிறைய உண்டு. பல பிரபல கம்பெனிகளின் நிகழ்ச்சிகளில் பாடி புகழ்பெற்ற கமில்லாவுக்கு இறுதிவரை ‘மெட்’ என்ற பிரபல ஒபரா நிறுவனம் வாய்ப் பளிக்கவில்லை. அதுமட்டுமல்ல, ‘மொசார்ட்’ இசை அமைத்த பல நாடகங் களில் பாடும் வாய்ப்பு கமில்லாவுக்கு கிடைக்கவில்லை. அவை எல்லாம் வெள்ளை நிற ஐரோப்பியர்களை மைய மாகக் கொண்டவை. “வெள்ளை ‘விக்’ வைத்துக்கொண்டு வெள்ளை நிற மேக் அப் போட்டுக்கொண்டு கறுப்புப் பெண் ணான நான் எப்படி நடிக்க முடியும்?” என கமில்லா இதுபற்றி கூறியுள்ளார். “எனது குரலுக்கு மொசார்ட்டின் இசை மிகவும் பொருத்தமானது என்று எனக் குத் தெரியும். ஆனால் என்ன செய்வது?” என்றும் கூறியுள்ளார். பல பாடகர் களுக்கு உந்துசக்தியாக விளங்கிய கமில் லாவுக்கு தரப்பட வேண்டிய அங்கீகாரம் தரப்படவில்லை என்ற குறை பலருக்கு உண்டு. அதைப்பற்றி கமில்லா ஒரு பேட்டியில்,“அங்கீகாரம் வழங்கப் படாமல் இருப்பது என்னை வருத்த மடையச் செய்ததுண்டு. ஆனால், அதற் காக அழக்கூடாது. சங்கீதத்தைப் பொறுத்த வரை கசப்புணர்வுக்கு இடமில்லை. கசப்புணர்வு குரல்வளத்தை பாதிக்கும். எனவே, அத்தகைய உணர்வு பாடகர்களி டம் இருக்கக்கூடாது” என்று தெரிவித் துள்ளார்.

கமில்லா, சார்ல்ஸ் பீவர்ஸ் என்ற வழக்கறிஞரை 1950ல் திருமணம் செய்து கொண்டார். 1970ல் கணவர் இறந்து விட்டார். கமில்லா - சார்ல்ஸ் தம்பதி யினருக்கு குழந்தை கிடையாது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் “கறுப்பின மக்களின் வரலாற்று மாதம்” என்று அனுஷ்டிக்கப் படுகிறது. 2012 பிப்ரவரி மாதம் தனது 92வது வயதில் கமில்லா வில்லியம்ஸ் மரணமடைந்தார். அமெரிக்க வரலாற்றில் கறுப்பின மக்கள் ஆற்றிய பங்கில் கமில் லாவுக்கு தனி இடம் உண்டு. கலைத் துறையில் நிறவெறி அரசியல் உள்ள தென்பதற்கு எவ்வளவு காலம் கழித்து, மிகச் சிறந்த நடிகை ஊஃபி கோல்ட் பெர்கர், நடிகர் டென்சில் வாஷிங் டனுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது என்ப தில் இருந்து புரிந்து கொள்ள முடியும். இன்றும் பல்கலைக்கழகங்கள், மாபெரும் நிறுவனங்களில் முடிவெடுக்கும் இடத் தில் உள்ள ஆப்பிரிக்க - அமெ ரிக்கர்கள் குறைவே. அமெரிக்காவின் விளையாட்டுத் துறை, கலைத்துறையில் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக் கது என்பதை யாரும் மறுக்க இயலாது.

நிறவெறி மிகுந்திருந்த காலத்தில், ஒடுக்கப்பட்ட கறுப்பினப் பெண்ணான கமில்லாவின் சாதனை, கறுப்பினப் பெண் ணியத்திற்கு கிடைத்த வெற்றியாகவே அவர்கள் கருதுகின்றனர். சென்ற மாதம் மறைந்த கமில்லாவுக்கு நம் அஞ்சலி

------------------------------------------------------------------------------------------------------------

வால்மார்ட். சிறு வியாபாரிகள் வாழ்வைக் குலைக்கும் மா[ர்ட்.]?

-------------------------------------

எதிர்ப்புகளை மீறி  இந்தியாவின் உள்ளே வால்மார்ட்டை நுழைக்கப்பார்க்கிறது.மன்மோகன்சிங்கின் காங்கிரசு அரசு

. சில்லறை வணிகத்தில் நுழைய முடியாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாயிற்கதவைச் சாத்தியிருப்பது போல பாவ்லா காட்டிவிட்டு, கொல்லைப்புறம் வழியாக வால்மார்ட்டை உள்ளே அழைத்து வருகிறது மன்மோகன் சிங் அரசு. 

வால் மார்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஏர்டெல் நிறுவனத்தின் முதலாளி ராஜன் பாரதி மிட்டல் சென்ற மாதம் அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்படி பாரதி நிறுவனம் தனக்குத் தேவையான பொருட்களை வால்மார்ட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளும். அரிசி பருப்பு முதல் அனைத்துப் பொருட்கள் மீதும் வால் மார்ட் என்ற முத்திரை (பிராண்டு) இருக்கும். பொருள் கொள்முதல், வணிக நிர்வாகம் ஆகிய அனைத்தையும் திரைமறைவில் வால்மார்ட் நடத்தும். ஆனால் கடையின் பெயர் மட்டும் வால் மார்ட் என்று இருக்காது. கடைக்கு வேறு பெயர் வைத்துக் கொண்டு, வால்மார்ட்டின் முகவராக பாரதி நிறுவனம் இயங்கும். 
இந்த கள்ளத்தனமான ஏற்பாட்டுக்கு உதவும் வகையில் சில்லறை வணிகம் குறித்த தனது கொள்கையை திட்டமிட்டே வடிவமைத்திருக்கிறது காங்கிரசு அரசு. 
         
ஏகாதிபத்தியங்கள் பல இருந்தாலும் அவற்றின் தலைவனாகவும் மேலாதிக்கச் சக்தியாகவும் அமெரிக்கா இருப்பதைப் போல, சில்லறை வணிகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், வால்மார்ட் அவை அனைத்துக்கும் மேலான ஒரு பயங்கரமான அழிவுச் சக்தி. அமெரிக்க இராணுவம் நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கும் வால்மார்ட் தொடுக்கும் வர்த்தகப் போருக்கும் பெரிய வேறுபாடு கிடையாது — துப்பாக்கி ஒன்றைத் தவிர. 
அமெரிக்க மேலாதிக்கத்திற்க்கும் வால்மார்ட்டுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவைப் புரிந்து கொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் ஒன்று இருக்கிறது. அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் நியமித்த தூதர்களில் முக்கியமானவர் வால்மார்ட்டின் இந்தியக் கூட்டாளியான மிட்டல். சில்லறை வணிகத்திற்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கும் உள்ள தொடர்புதான் வால்மார்ட்டுக்கும் மறுகாலனியாக்கத்திற்கும் உள்ள தொடர்பு. 
மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் ஏந்தியிருக்கும் ஆயுதம். இந்த ஆயுதத்தின் மூலம் உலக மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், பண்பாடு முதல் அவர்களுடய அரசியல் கருத்துகள் வரை அனைத்தையும் மாற்றுகிற வால்மார்ட். நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட். அதற்குப் பலியான அமெரிக்க மக்கள், தம் இரத்தத்தில் ஊறி சிந்தøனøயயும் செரித்து விட்ட வால்மார்ட் எனும் இந்த நச்சுக் கிருமியிடமிருந்து விடுபடமுடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் உடலுக்குள் நுழைந்து விட்டது அந்த நச்சுக்கிருமி. இதனை எதிர்த்த போராட்டம் நீண்டது, நெடியது. அந்தக் கிருமியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது இந்த தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த்துப் போராடவும் உதவும்.

இரண்டாம் உலகப்போரில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சாம் வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்ற பலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையை விட மலிவாகவும் விற்றது வால்மார்ட்.
உறுதியாக நட்டம் விளைவிக்கக் கூடிய இந்த வியாபார உத்தியை மேற்கொள்ள சாம்வால்டன் இரண்டு வழிமுறைகளைக் கையாண்டார். ஒன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம், இரண்டாவது, உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் சரக்கெடுப்பது. இந்தக் கொள்øககள் காரணமாக வால்மார்டின் வளர்ச்சி மெதுவாக இருப்பினும் 1969ம் ஆண்டுக்குள் 31 மில்லியன் டாலர் ஆண்டு வருமானத்துடன் தன் முதல் கடைக்கு 200 மைல் சுற்றளவிற்குள்ளாகவே 32 கடைகளைத் திறந்தார் சாம் வால்டன்.
இந்த வணிகமுøறயினால் வருமானத்தை மீறிய கடன்பட்ட சாம் வால்டன், தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதிரடியாக மேலும் பல கடைகளை திறந்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து பல வங்கிகளிடம் கடன் கோரினார். வங்கிகள் சாம் கோரியது போல் அல்லாமல் கடனுக்கு வரம்பு விதித்தனர். வங்கிகளை நம்பிப் பயனில்லை என உணர்ந்த சாம் பங்குச் சந்தையின் உதவியை நாடினார். அமெரிக்காவின் அந்நாளைய சட்டப்படி எந்த ஒரு நிறுவனமும் முதல்முறை (ஐகO) நேரடியாக தன் பங்குகளை விற்க முடியாது, வேறொரு நிதி நிறுவனத்தின் மூலமாக மட்டுமே பங்குகளை விற்க முடியும்.
இந்தப் பணிக்கு சாம் இரண்டு பெரும் கிரிமினல் வங்கிகளை தனக்காக அமர்த்தினார். ஒன்று, அமெரிக்க உளவுத்துறையின் அடியாளாக அறியப்பட்டு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக 1990இல் தண்டிக்கப்பட்ட அர்கன்ஸாஸின் ஸ்டீபன்ஸ் வங்கி. மற்றொன்று, ஆங்கிலேய அரசுக்கு கைக்கூலியாக இருந்து, அமெரிக்கப் புரட்சிக்கு துரோகமிழத்த பாஸ்டன் தேசிய வங்கி. பின்னாளில் ஒயிட்வெல்ட் ஸ்விஸ் கடன் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த வங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் நிதி ஊழலுக்காகவும் 1985இல் தண்டிக்கப்பட்டது.
இந்த இரண்டு கிரிமினல் வங்கிகளும் 1970இல் 4.5 மில்லியன் டாலர் பணத்தை சாம் வால்டனுக்குப் பங்குச் சந்தை மூலமாகப் பெற்றுத் தந்தனர். இதற்குப் பிரதி உபகாரமாக கிரிமினல் பேர்வழி ஸ்டிபன்ஸை வால்மார்டின் ஒரு இயக்குனராக்கினார் சாம் வால்டன்.
70களில் பங்குச் சந்øதயின் உதவியை நாடியது வால்மார்ட். 80களிலோ நாப்தா, எஃப்.டி.ஏ.ஏ போன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் தென் அமெரிக்க நாடுகளையும் கனடாவையும் ஊடுருவ வால்மார்டின் உதவி அமெரிக்கப் பங்குச் சந்øதக்குத் தேவைப்பட்டது. வால்மார்ட் தயாராக இருந்தது.
உலகமயமாக்கம் வால்மார்ட்டின் அசுர வளர்ச்சி
தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தொடர்ந்து அத்துøறயில் கொள்ளை இலாபமீட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்க முதலாளிகள் தம் மூலதனத்தை உற்பத்தித் துறையிலிருந்து அதற்கு மாற்றினர். அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. பல அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அழிந்தன. தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஏழை நாடுகளின் கொத்தடிமைக் கூடாரங்களில் உருவாக்கப்படும் மலிவு விலை பொருட்களை நுகரும் சமூகமாக அமெரிக்கா மாறியது.
இத்தகைய பொருட்களை அமெரிக்காவெங்கும் விற்பனை செய்யும் ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக வால்மார்ட் உருவாகியிருந்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட். வால்மார்ட்டை உலகமயமாக்கலின் சிறந்த ஆயுதமாகக் கண்டு கொண்ட அமெரிக்க பங்குச் சந்தை, வால்மார்ட்டிற்கு பணத்தை வாரியிறைத்தது. வால்மார்ட் வெறித்தனமாக வளர்ந்தது. 
80களின் இறுதி வரை 70,000 சதுரஅடி பரப்பிலான பிரம்மாண்டமான கடைகளை நடத்தி வந்தது. (மற்ற அமெரிக்கப் பெருவணிகக் கடைகளின் சராசரி அளவு 40,000 சதுர அடி). போட்டியாளர்களை அழிக்க ஆணி முதல் உணவு வரை 1,20,000 பொருட்களை விற்கும் 2,00,000 சதுரஅடி பரப்பிலான (4 கால்பந்து மைதானம் அளவில்) சூப்பர் சென்டர்களை 1987 முதல் வால் மார்ட் நிறுவனம் துவங்கியது. 
1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட் அடுத்த 12 ஆண்டுகளில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி 25,000% வளர்ச்சியøடந்தது. இதே காலகட்டத்தில்தான் உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது. 
1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட் இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, சீனா, எல்சால்வடார், ஜெர்மனி, குவாதிமாலா, ஹோன்டுராஸ், ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, போர்டோரிகோ மற்றும் பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பலநாடுகளில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. 

வளர்ச்சியின் மர்மம் 

வால்மார்டின் இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கும் அமெரிக்க ஏகபோகங்கள் ஏழை நாடுகளை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொண்டு அழித்து வருவதற்குமான உறவு தற்செயலானதல்ல. இத்தனை ஆயிரம் கடைகளைக் கட்டத் தேவையான பல லட்சம் கோடி டாலர்கள், வரிச்சலுகைகளாகவும், இன்றைய தேதியில் வால்மார்டின் கடன் எத்தனை லட்சம் கோடி என்று வெளியே தெரியாத அளவிற்கு கடன் பத்திரங்களாகவும் உலகின் முன்னணி வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளில் மறைந்துள்ளன. 
இந்த வால்மார்ட் சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதிலிருந்தும் உறிஞ்சும் பல லட்சம் கோடி டாலர்களும் நிறுவனத்தின் பங்குகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வைத்திருக்கும் சாம் வால்டனின் குடும்பத்தின் வயிற்றுக்குள் செல்கிறது. லாப ஈவுத்தொகை (Dividend) மூலமாக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர்களைக் கொள்ளையடிக்கும் சாம் வால்டன் குடும்பத்தினர் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் வரிசையில் 5 முதல் 9 இடம் வரை நிரம்பியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பைக் கூட்டினால் உலகின் நிரந்தரப் பணக்காரக் குடும்பமே இவர்கள்தான். 
உலக அரசியலின் படுபிற்போக்கு சக்திகளான புஷ், டிக் செனி வகையறாக்களுக்கு சாம் வால்டன் குடும்பம்தான் நிரந்தரப் புரவலர்கள். அமெரிக்காவில் கல்வியை முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிரமாக முயலும் கும்பல்களுக்கும் தலையாய புரவலராக இருப்பதுடன், பின்தங்கிய நாடுகளை அதன் பிடியில் வைத்திருக்கும் பல அரசுசாரா நிறுவனங்களையும் வால்டன் குடும்பம் பராமரித்து வருகிறது. 
உலகமயமாக்கல் கொள்ளைக்காகத் திட்டமிட்டே வளர்க்கப்பட்ட வால்மார்ட் இன்று 6100 கடைகள், 18 லட்சம் ஊழியர்கள், ஆண்டு விற்பனை 312.4 பில்லியன், லாபம் மட்டும் 11.2 பில்லியன் என உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியாகியுள்ளது. 42 மணி நேரத்திற்கு ஒரு புதிய கடை என திறந்த வண்ணம் உள்ளது. வால்மார்ட் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் 21வது பணக்கார நாடாக இருந்திருக்கும். இதன் ஆண்டு வருமானம் பல ஏழை நாடுகளின் வருமானத்தை விடவும் அதிகம்.

ஏகபோகத்தின் வீச்சு 

வாரத்திற்கு 10 கோடி அமெரிக்கர்கள் வால்மார்ட்டின் கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர். 
அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35%, மொத்த மருந்து மாத்திரை சந்øதயில் 25%, வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%, ஆடியோ வீடியோ விற்பனையில் 25%என்று அமெரிக்கச் சந்தையையே தனது கோரப்பிடிக்குள் கைப்பற்றி வைத்திருக்கிறது வால்மார்ட்.
அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித் தாள் விற்பøனயாளரும் வால் மார்ட் தான். வெளிவரும் பத்திரிகைகளில் ஏறத்தாழ 20% வால்மார்ட் மூலம் விற்பனையாகிறது. அமெரிக்கச் சந்øதயில் இப்படியென்றால் மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மொத்தச் சந்øதயில் 50% வால்மார்ட்டின் கையில் இருக்கிறது.
அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), வீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன. 
இத்தகைய ஏகபோகத்தின் மூலம் உற்பத்தியாளர்களைத் தன்னை அண்டிப் பழக்கும் அடிமைகளாகவே மாற்றியிருக்கிறது வால்மார்ட். தன்னுடன் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களையே ஆட்டிப் படைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னால் தமது பொருட்களின் விற்பனை விலை என்ன என்பதை பல பன்னாட்டு நிறுவனங்கள் வால்மார்டிற்குச் சொல்லி வந்தன. இன்றோ சந்தையைத் தன் பிடியில் வைத்திருக்கும் வால்மார்ட், தான் சொல்கிற பொருளை, கோருகிற விலையில் இந்நிறுவனங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்துகிறது. 
வால்மார்டிற்குப் பிடிக்கவில்லையா, பத்திரிக்øகயின் அட்டை வடிவமைப்பு மாற்றப்பட வேண்டும், வால்மார்ட் ஆட்சேபித்தால் காசெட்டின் பாடல் வரிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். வால்மார்ட் கோரினால் பொருட்களின் நிறத்தை மாற்ற வேண்டும். விலையைக் குறைக்கும் பொருட்டு உற்பத்திப் பொருளின் தரத்தைக் குறைக்கச் சொன்னால் அதையும் செய்யவேண்டும். அமெரிக்க மக்களின் தலைவலி காய்ச்சலுக்கான மாத்திரையை முடிவு செய்வது கூட வால்மார்ட்தான். 
தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. அதே போன்ற வேறு நிறுவனத்தின் பொருட்கள் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும். 
ஏற்öகனவே சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்டின் பங்கு தான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளி நாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம். 

உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல் 

ஒவ்வொரு நாளும் பென்டான்வில் எனப்படும் வால்மார்ட்டின் தலைøமயகத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து உற்பத்தியாளர்கள் படையெடுக்கிறார்கள். அவர்களை இனவாரியாகப் பிரித்து தனியøறகளில் அமர்த்தி வால்மார்ட் தலைகீழ் ஏலத்தைத் துவங்குகிறது. 
அதாவது, யார் மிகக் குறைவான விலையைக் கூறுகிறார்களோ அவர்களுக்கே அவ்வாண்டு ஒப்பந்தம். மீண்டும் அடுத்த ஆண்டு சென்ற ஆண்டின் விலையை விடக் குறைத்துக் கொடுக்க அந்நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படும். கச்சாப் பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு என அந்நிறுவனங்கள் மறுத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஏலம் துவங்கும். வால்மார்டின் மூலமாக இந்நிறுவனங்களின் வியாபாரம் பன்மடங்கு அதிகரித்தாலும், கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவினால் பல நிறுவனங்கள் திவாலாகின்றன. அல்லது அமெரிக்காவில் ஆலைகளை மூடிவிட்டு, உற்பத்தியை சீனா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றியிருக்கின்றனர்.
அமெரிக்காவின் ஐந்து பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலக்டிரிகல்ஸ், வால்மார்டின் நிர்பந்தத்தினால் தனது உற்பத்தியை மெக்ஸிகோவிற்கும், சீனாவிற்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் மாற்றிவிட்டது. அமெரிக்க (IUE) யூனியனின் கூற்றுப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் ஜெனரல் எலக்டிரிகல்ஸில் மட்டுமே 1,00,000 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.
பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுøமயாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் கூட்ட முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான "ரப்பர் மெய்ட்'. வால்மார்ட் விலையுயர்விற்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இன்று நியூவெல் நிறுவனம் தொடர்ந்து வால்மார்ட்டுடன் வர்த்தகம் செய்வதற்காக தனது 400 ஆலைகளில் 69ஐ மூடிவிட்டு ஆசியாவிற்கு உற்பத்தியை மாற்றியது. இதனால் இந்நிறுவனத்தில் இதுவரை வேலை இழந்தோர் 11,000 பேர். 
இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி, உள்ளிட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து 15 லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட். 

உழைப்புச் சுரண்டல் 

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை மடக்கிப் போட்டு வியர்வைக் கடைகள் எனப்படும் கொடூரமான கொத்தடிமைக் கூடாரங்களை வால்மார்ட் இரகசியமாக நடத்துகிறது. சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளிலோ வெளிப்படையாகவே இவை நடத்தப்படுகின்றன. இங்கு ஆணி, பொம்øமகள், மின்விசிறிகள் போன்ற பல்லாயிரம் விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 
நாளொன்றுக்கு 13 முதல் 16 மணி நேரம் வேலை, வார விடுமுறை கிடையாது என்று தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படும் இது போன்ற கூடாரங்களில் விழாக்கால, பண்டிகை விற்பனை சீசன்களில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.
நினைத்தே பார்க்க முடியாத இந்தக் கொடூர வேலைக்கு மாதச்சம்பளம் 42 டாலர்கள். இது சீனாவின் குறைந்தபட்ச கூலியை விட 40% குறைவு. இந்த தொழிலாளர்கள் 7 அடிக்கு7 அடி அறையில் 12 பேர் அடைக்கப்பட்டு அதற்கு வார வாடகை 2 டாலர்களும், மட்டமான உணவிற்கு வாரத்திற்கு 5.50 டாலர்களும் வசூலிக்கப்படுகிறது. இந்த வேலைக் கொடுøமயினால் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அது அவர்களுடைய சொந்தச் செலவு. சீனாவில் மட்டும் வால்மார்டிற்கு இது போன்ற 5000 கொத்தடிமைக் கூடாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏழை நாடுகளின் தொழிலாளர்களைப் போலவே தனது சொந்த ஊழியர்களையும் வால்மார்ட் ஒடுக்குகிறது. உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஆனால் எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. முன்னர் எந்தக் காலத்திலாவது ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வேலை வாய்ப்பு இல்லை.
அதே போல எந்தக் கடையிலாவது தொழிற்சங்கம் அமைக்கப்படும் எனச் சந்தேகித்தால் அந்தக்கடை ஊழியர்களை ரகசியக் காமிராக்கள் கொண்டு கண்காணித்து சந்தேகத்திற்கு உரிய நபர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்கிறது. தனது தலைøமயகத்தில் இதற்கென்றே உருவாக்கி வைத்திருக்கும் சிறப்பு தொழிற்சங்க எதிர்ப்புப் படையை வரவழைத்து கருங்காலிகளை உருவாக்கி, சங்கம் அமைக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளுகிறது. 
தொழிற்சங்கங்கள் இருக்கும் மற்ற நிறுவனங்களின் ஊழியர்களை விட வால்மார்ட் ஊழியர்களின் சம்பளம் 23% குறைவு. வால்மார்ட் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். காப்பீடு செய்யவில்லையென்றால் மருத்துவமே பார்த்துக் கொள்ள முடியாது என்ற நிøலயில் உள்ள அமெரிக்காவில் வெறும் 38% வால்மார்ட் ஊழியர்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
சிறப்பு விற்பனை நாட்களில் தனது ஊழியர்களை வெளியில் செல்லக்கூட அனுமதிக்காமல், கடையில் வைத்துப் பூட்டும் வால்மார்ட், கூடுதல் பணி நேரத்திற்கு தொழிலாளிகளுக்கு ஒரு பைசா கூட ஓவர்டைம் வழங்குவதில்லை. பெண் தொழிலாளிகளுக்கு ஆண்களை விட குறைவான சம்பளம், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க மறுப்பது, குழந்தைத் தொழிலாளர் முறை என நீண்டு கொண்டே செல்கின்றன வால்மார்டின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள்.
இந்தக் கொடுமைகளை எதிர்த்து கனடா நாட்டில் வால்மார்டின் இறைச்சிக்கடை ஊழியர்கள், சங்கம் அமைத்தவுடன், அந்நாடு முழுவதுமுள்ள தனது கடைகளில் இறைச்சிப்பகுதியையே இழுத்து மூடி தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது. தனது தொழிலாளர் விரோத நடவடிக்øககளுக்காக அமெரிக்காவின் 38 மாநிலங்களில் வழக்குகளைச் சந்தித்து வருகிறது வால்மார்ட். இது தவிர அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய வழக்கான 16 லட்சம் முன்னாள், இந்நாள் வால்மார்ட் ஊழியர்கள் இணைந்து தொடுத்துள்ள வழக்கும் அதன்மேல் நிலுøவயில் உள்ளது.

அடுத்த குறி இந்தியா

சமூகச் செல்வங்களான உழைப்பையும், உற்பத்திøயயும் தின்று செரித்து, வேலையின்மை யையும், வறுமைøயயும் எச்சங்களாக விட்டுச் செல்லும் பொருளாதாரப் புற்று நோய் வால்மார்ட். இதன் அடுத்த இலக்கு இந்தியா. சில்லறை வணிகத்தை நம்பி வாழும் 4 கோடி குடும்பங்கள், பல கோடி விவசாயிகள் ஆகியோருடைய வாழ்க்கைøயயும், 10 லட்சம் கோடி மதிப்பு கொண்ட உலகின் நான்காவது பெரிய சில்லறை விற்பனைச் சந்øதயுமான இந்தியாவை விழுங்க பல்லாயிரம் கோடி முதலீட்டுடன், வருகிறது வால்மார்ட்.
மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால் நாம் மரணத்தை வாங்கப் போகிறோமா?
நன்றி:புதிய ஜனநாயகம்,
__________________________________________
’பரிணாம வளர்ச்சி பற்றி’

ரிச்சர்ட் டாக்கின்ஸ் உலகப் புகழ் பெற்ற பரிணாம உயிரியல் விஞ்ஞானி. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். ஆனால்,பொதுவாக பரிசோதனைச் சாலையில் உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்துவிஞ்ஞான மாநாடுகளில் கட்டுரை வாசித்துவீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் ரகம் அல்ல அவர். பொதுமக்கள் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்கள் எழுதுவதுஅந்தக் கருத்துகள் மக்களிடம் சென்று சேரக்கூடியவகையில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் தயாரிப்பதுமக்கள் கூட்டத்துக்கு இடையே பேசுவது எனத் தீவிரக் களப்பணி ஆற்றுவதிலும் முன்னணியில் நிற்பவர். ஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதர்!
இதில் சர்ச்சை எங்கிருந்து வருகிறதுரிச்சர்ட் டாக்கின்ஸ் வேலை செய்துவந்த துறை அப்படிப்பட்டது. சார்லஸ் டார்வின்பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இந்தக் கோட்பாட்டின்படிபல்வேறு விதமான உயிர்கள் உருவாவதற்குக் கடவுள் என்ற கோட்பாடு அவசியமே இல்லை. ரிச்சர்ட் டாக்கின்ஸ§ம் மற்ற பலரும் இந்தக் கோட்பாட்டை மேலும் முன்னுக்கு எடுத்துச் சென்றனர். அதனால் கிறிஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்தக் குறிப்பிட்ட அறிவியல் துறைமீது பிரச்சனை ஏற்பட்டது. அவர்கள், ‘படைப்புவாதம்’ (கிரியேஷனிசம்) என்ற புதிய அறிவியல்’ துறையை உருவாக்கினார்கள்.
இதைப்பற்றி இந்தியாவில் இருக்கும் நாம் அதிகம் கேட்டிருக்கக்கூட மாட்டோம். ஆனால் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு துறை இது. அமெரிக்க மக்கள்தொகையில் 40%மேலானவர்கள் டார்வின் ஒரு சாத்தான் என்றும்,அவரது பரிணாம வளர்ச்சிக் கொள்கை அவர்களது மதத்துக்கு எதிரானது என்றும்,படைப்புவாதமே சரியானது என்றும் நினைக்கிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் வலுவான எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் பள்ளிக்கூடங்களில் டார்வினின் கருத்துகளைச் சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதில் பல இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
எவொல்யூஷன் எனப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது உண்மைதானா?அதற்கு என்ன சாட்சிகள்நிரூபணங்கள் உள்ளன என்று படைப்புவாதிகள் கேட்கிறார்கள். முதலில் சுருக்கமாகப் பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்று புரிந்துகொள்வோம். உயிர் வகைகள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன என்கிறது பரிணாம வளர்ச்சிக்கொள்கை. ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் சில தனிப்பட்ட நபர்களிடம் ஏற்படும் மாற்றங்கள்அந்த நபர்கள் பிறரைவிட அதிக நாள் உயிர்வாழும் சாத்தியத்தை ஏற்படுத்தினால்அந்த நல்ல’ மாற்றங்கள் குறிப்பிட்ட உயிரினத்தில் அதிகரிக்க ஆரம்பிக்கும். அந்த நல்ல’ குணம் கொண்ட நபர்களின் சந்ததிகள் அதிகரிப்பதால் இது நிகழ்கிறது. இப்படியே இந்த மாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தால்இறுதியில் ஒரு புதுக்கிளை உருவாகிநாளடைவில் முற்றிலும் புதிய உயிரினம் உருவாகிவிடுகிறது.
இப்படித்தான் ஏதோ ஓர் உயிரினத்தில் தொடங்கி இன்று மனிதர்கள் தோன்றியுள்ளனர். மனிதர்கள் போன்ற பாலூட்டிகள் அனைத்துக்கும் ஒரு கட்டத்தில் ஒரு பொதுவான பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. பாலூட்டிகளுக்கும் பறவைகளுக்குப் பொதுவான ஒரு பெற்றோர் உயிரினம் இருந்துள்ளது. இப்படியே பின்னோக்கிப் போனால் எல்லாவித உயிரினங்களுமே ஒரே ஓர் உயிரிலிருந்து கிளைத்ததாக இருக்கவேண்டும்.
இந்தக் கொள்கை தீவிர ஆப்ரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் (யூதர்கள்,கிறிஸ்தவர்கள்இஸ்லாமியர்கள்) அனைவருக்கும் கோபத்தைக் கிளப்புவதில் ஆச்சரியமில்லை. அந்த மதங்களின்படிஉலகம் என்பதை இறைவன் தோற்றுவித்தது மட்டுமின்றிஉலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆறே நாள்களில் உருவாக்கினான். அப்போதே உலக உயிர்கள் அனைத்தையும்ஈ முதல் எறும்பு வரை,மாடு முதல் மான் வரைதிமிங்கிலம் முதல் தேள்வரை அனைத்தையும் உருவாக்கிவிட்டான். அப்போது உருவாக்கப்படாத எந்தப் புது உயிரும் இனி உருவாகாது. இன்று காணப்படும் எந்த உயிரும் என்றோ உருவாக்கப்பட்டுவிட்டன. அதுவுமின்றி இந்தத் தோற்றம் அனைத்தும் நடந்து சுமார் 5,000 வருடங்கள் தான் ஆகியுள்ளன.
ஆனால் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்படிதினம் தினம் மாற்றங்கள் நிகழ்கின்றனசில லட்சம் ஆண்டுகள் கழித்து முற்றிலும் புதியஇதுவரையில் இல்லாத உயிரினங்கள் உருவாகியிருக்கும். மேலும் உயிர்கள் தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.
பரிணாம வளர்ச்சியை ஏற்காத படைப்புவாதிகள் பல கேள்விகளை முன்வைக்கின்றனர். ரிச்சர்ட் டாக்கின்ஸின் புத்தகம் இந்தக் கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக எதிர்கொள்கிறது. மிகவும் எளிய முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம்,அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆதங்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
டாக்கின்ஸ் படிப்படியாக நம்மை பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்குள் அழைத்துச் செல்கிறார். முதல் கேள்வி: இந்த விஷயத்தை டார்வின் என்று ஓர் ஆசாமி 19-ஆம் நூற்றாண்டில் வந்து சொல்லும்வரை ஏன் வேறு யாரும் கண்டுபிடிக்கவில்லை?இதற்குக் காரணம்பிளேட்டோ என்ற கிரேக்கத் தத்துவஞானியின் கருத்துகள் மேற்கத்திய விஞ்ஞானிகளைப் பரிணாம வளர்ச்சிக் கொள்கை பற்றி சிந்திக்கவிடாமல் செய்துவிட்டதே என்கிறார் டாக்கின்ஸ். பிளேட்டோவின் அடிப்படைக் கொள்கை,சாராம்சவாதம். எல்லா உயிரினங்களும் ஒரு சிறந்த வடிவமைப்பின் குறைபட்ட வடிவங்களே. டார்வினின் கருத்தாக்கத்தில் இப்படி கச்சிதமான’ வடிவமைப்பு ஏதும் கிடையாது. ஆனால் மேற்கத்திய விஞ்ஞானிகள் அனைவருமே பிளேடோவின் சிந்தனைத் தாக்கத்திலிருந்து மீளாததால் மாற்றி யோசிக்கவில்லை. எனவே டார்வினின் தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
டார்வின் தன்னைச் சுற்றிலும் நடப்பதைக் கவனமாகப் பார்த்தார். மனிதன் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு நாய்களையும்புறாக்களையும்குதிரைகளையும் உருவாக்குவதைக் கண்டார். மனிதன் செயற்கையாக தனக்கு விருப்பமான தன்மைகள் உடைய உயிரினங்களை உருவாக்கும்போதுஇயற்கையிலேயேகூட அப்படி ஒரு நிகழ்வு ஏன் நடந்திருக்கக்கூடாது என்று யோசித்தார். அப்படி அவர் உருவாக்கிய கருத்துதான் இயற்கைத் தேர்வுமுறை’.
ஆனால் இந்த இயற்கைத் தேர்வு நடப்பதை மனிதக் கண்ணால் பார்ப்பது கடினம். ஏனெனில் இந்த முறையின் மூலம் மாற்றங்கள் ஏற்பட பல ஆயிரம் வருடங்களாவது குறைந்தது ஆகிவிடும். நம் வாழ்நாளோ நூறு வருடங்களுக்கும் குறைவே. ஆனால் புதைப்படிவ நிரூபணங்கள் நிறையக் கிடைக்கின்றன. மண்ணுக்கு அடியில் புதைந்துள்ள பல்வேறு உயிரினங்களை எடுத்து ஆராயும்போது என்னென்ன முற்றிலும் வித்தியாசமான உயிரினங்கள் ஒரு காலத்தில் வாழ்ந்துள்ளன என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
அடுத்து டாக்கின்ஸ் எதிர்கொள்வது உயிர்களின் வயதை. கார்பன் டேட்டிங் என்ற முறையைப் பற்றி எளிமையாக விளக்கும் டாக்கின்ஸ் எப்படி உலகத்தின்மரங்களின்,உயிர்களின் வயதைக் கணக்கிடமுடியும் என்று காண்பிக்கிறார். பிறகு அந்தக் கணக்குகளின்மூலம் இந்த உலகம் எப்படி பல கோடி ஆண்டுகள் என்பதைத் தெளிவாக்குகிறார்.
பரிணாம வளர்ச்சி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று சொல்லித் தான் தப்பித்துவிடவில்லை மேலும் டாக்கின்ஸ் சில பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே நடக்கும்நடந்துள்ள சில பரிணாம வளர்ச்சி மாற்றங்களை உதாரணங்களாகத் தருகிறார்.
குரோவேஷியா நாட்டுக்கு அருகில் உள்ள இரண்டு தீவுகள் போட் கோபிஸ்டேபோட் மெர்காரு. போட் கோபிஸ்டாவில் வாழும் ஒரு பல்லி இனம்போட் மெர்காருவில் ஒன்றுகூடக் கிடையாது. 1971ல் கோபிஸ்டாவில் இருந்து இந்தப் பல்லிகள் சிலவற்றைப் பிடித்து மெர்காருவில் போட்டார்கள். மீண்டும் 2008ல் மெர்காரு சென்று கடந்த 37 வருடங்களில் என்னதான் ஆகியுள்ளது என்று கண்டறிய முற்பட்டார்கள். மெர்காருவில் உள்ள பல்லிகளுக்கு கோபிஸ்டேவில் உள்ளவற்றைவிட தலை சற்றே நீளமாகவும் அகலமாகவும் ஆகியிருந்தன! ஏன்கோபிஸ்டேவில் உள்ள பல்லிகள் பூச்சிகளைப் பிடித்து 
சாப்பிட்டுக்கொண்டிருந்தன. ஆனால் அதிக பூச்சிகள் இல்லாத மெர்காருவில்அங்கே உள்ள தாவர இலைகளைத் தின்று பழக ஆரம்பித்த இந்தப் பல்லிகள். தாவர இலைகளைக் கடித்துத் தின்ன அழுத்திக் கடிக்கவேண்டும். எனவே தலை பெரிதாக வளர்ந்ததுபற்கள் சற்றே பெரிதாககடினமாக இருந்தன. ஆகவெறும்37 ஆண்டுகளிலேயேசூழ்நிலை மாற்றத்துக்குத் தக்கவாறுஓர் உயிரினத்தின் கிளையில்கண்ணால் கண்டறியக்கூடிய மாற்றம் உருவாகத் தொடங்கிவிடுகிறது.
இதேபோல் நுண்ணுயிரிகளைக் கொண்டு நடந்த சோதனை முயற்சி ஒன்றையும் விளக்குகிறார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். கப்பி மீன்கள் கொண்டு நடந்த ஒரு சோதனையை விளக்குகிறார். இயற்கையில் பரிணாம வளர்ச்சி என்பதை சில உயிரினங்களில் காணவும் முடிகிறது. ஆனால் பொதுவாகவேகண்டறியக்கூடிய மாற்றங்கள் கொண்ட பரிணாம வளர்ச்சி நடைபெறும் காலகட்டம் என்பது பல ஆயிரம் வருடங்களாவது இருக்கும்.
பொதுவாக படைப்புவாதிகள் மட்டுமல்லாது படித்தவர்களுமே கேட்கும் ஒரு கேள்வி, ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் குரங்குகள் இன்னமும் ஏன் உள்ளன?’என்பது. இதுபரிணாம வளர்ச்சித் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாததால் உருவாகும் கேள்வி. திடீரென ஒரு குறிப்பிட்ட நாள் அன்று இன்று நாம் காணும் ஒரு குரங்குவகை,தன் தோலை சட்டையைக் கழற்றுவதுபோல் கழற்றி மனிதத்தோலை அணிந்துகொண்டு இரண்டு கால்களால் நடந்து மனிதனாக ஆகிவிடுவதில்லை. எந்த ஒரு தனி குரங்கும்மனிதனாக ஆகிவிடுவதில்லை. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று சொல்வதே தவறு. குரங்குமனிதன் இரண்டுக்கும் ஒரு பொது பெற்றோர் இனம் ஒன்று இருந்தது. அந்தப் பெற்றோரிலிருந்து குரங்குக் கிளையும் மனிதக் கிளையும் பிரிந்தன. தனித்தனியாக வளர்ந்தன. இதுதான் உண்மை நிலை.
எப்படி இயற்கையில் விதவிதமான உருவங்கள் உருவாகின்றன என்பது பற்றி விளக்குகிறார் டாக்கின்ஸ். ஒரு நண்டுஒரு வண்டு இரண்டும் எப்படி முற்றிலும் புதுமையானவித்தியாசமான வடிவத்தைப் பெறுகின்றனதெளிவற்ற ரேண்டம் வரைகணித முறைப்படி இயங்கும்போதுபுதிது புதிதான தோற்றங்கள் உருவாகும் அல்லவாதாள் ஒன்றில் இங்கைத் தெளித்துஅந்தத் தாளை கன்னாபின்னாவென்று மடித்துமீண்டும் பிரித்துப் பார்க்கும்போது அந்தத் தாளில் ஓர் அழகான வடிவம் ஒன்றைக் காண்பீர்கள். அப்படிப்பட்ட வடிவங்கள்தான் இயற்கையில் உயிர்களின் உருவமாக உருவாகின்றன. அவற்றில் பல வடிவங்கள் வாழமுடியாமல் அழிந்துபோக,ஒரு சில வடிவங்கள் மட்டும் கடல்வாழ்நிலவாழ் உயிரினங்களின் வடிவங்களாகத் தங்கிவிடுகின்றன என்பதைப் பல ஆதாரங்களுடன் எடுத்துக் காண்பிக்கிறார்.
உயிர்கள் மிகவும் சிக்கலான வடிவம் கொண்டவை என்பதால் அவை நிச்சயம்மிக அதிக சக்திவாய்ந்த கடவுள்’ போன்ற ஒருவரால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கமுடியும் என்ற வாதத்தை மிக அழகாகக் கையாளுகிறார் டாக்கின்ஸ். கேயாஸ் சிஸ்டம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்துஎப்படி மிகவும் சிக்கலான இடங்களிலும் வரிசையும் தெளிவும் ஏற்படுகின்றன என்பதைக் காண்பித்து,உயிர்கள் ஒற்றை செல்லிலிருந்து பிரிந்து பிரிந்து பல செல்களாக மாறிகடைசியில் ஒரு மானாகஒரு கழுதையாகஒரு கனகாம்பரம் செடியாக ஆகும்போது எப்படி ஒரு செல்லுக்குத் தான் பூவாகவேண்டும்தான் காதாக வேண்டும்கண்ணாக வேண்டும் என்றெல்லாம் தெரிகிறது என்றும் அதனை மிகச் சரியாக அது எப்படிச் செய்கிறது என்பதையும் மிக எளிமையான முறையில் விளக்குகிறார்.
இந்தப் புத்தகத்தில் டாக்கின்ஸ் எழுதியுள்ள மிக அற்புதமான அத்தியாயம் அது இறுதி அத்தியாயம். அதில் டார்வினின் உயிர்களின் தோற்றம்’ (ஆரிஜின் ஆஃப் ஸ்பீஷிஸ்) என்ற புத்தகத்தில்அவரது கடைசி வரியை எடுத்துக்கொண்டுஅதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக விளக்குவது. அந்த ஓர் அத்தியாயத்துக்காகவே இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்!
உலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்பது உயிர்கள்தான். ஆனால் இந்த ஆச்சரியத்தை முற்றிலும் புரிந்துகொண்டு ரசிப்பதைக் காட்டிலும்எல்லாமே ஒருமீசக்தியின்’ திருவிளையாடல் என்று தவறாகப் புரிந்துகொண்டுஅவற்றை ஆழப் படித்துஇயற்கையின் அழகை மக்கள் ரசிக்காமல் விட்டுவிடுகிறார்களே என்ற ஆதங்கம் புத்தகம் முழுக்க விரிவடைகிறது.அவசியம் படித்தே ஆகவேண்டிய நூல்களில் ஒன்று இது.
- பத்ரி சேஷாத்

   கடாபி வரலாறு.         


லிபியாவை கடந்த பல தசாப்தங்களாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கர்னல் முவம்மர் கடாபி தாங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக லிபியாவின் இடைக்கால அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


கடாபியின் பிறந்த ஊரான சிர்த்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக இந்த படைகள் அறிவித்த சில மணிகளில் கடாபியை தாங்கள் கொன்றுவிட்டதாக அறிவித்திருக்கின்றனர். முன்னதாக அங்கே பல வார காலம் நீடித்த கடும் மோதல்கள் இடம்பிடித்தன.

நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் லிபியாவை ஆண்ட அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை கைது செய்யக்கோரிவருகிறது.

கடாபியை தாம் கண்டுபிடித்ததாக தெரிவித்த ராணுவ வீரர் ஒருவர், அவர் பிடிபடுவதற்கு முன் “என்னை சுடாதே” என்று கூறியதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

கொண்டாடும் கடாபி எதிர்ப்பு படைகள்
கொண்டாடும் கடாபி எதிர்ப்பு படைகள்


முவம்மர் கடாபி, 1969 ஆம் ஆண்டு ரத்தமில்லா ராணுவ கிளர்ச்சிமூலம் ஆட்சியைப்பிடித்தபோது அவர் லிபியாவின் மீட்பராக பார்க்கப்பட்டார். 27 வயதான இளம் ராணுவ தளபதியான கடாபி, சக ராணுவத்தினரால் சகோதரத் தலைவர் என்று செல்லமாக கூப்பிடப்பட்டார். அந்த அளவுக்கு அவருக்கு நல்லபெயர் இருந்தது. அவரும் ஆட்சிக்கு வந்தபுதிதில் தன்னை மக்கள் தலைவனாகவே காட்டிக்கொண்டார்.
1942 ஆம் ஆண்டு பிறந்த கடாபியின் சரியான பிறந்த நாள் எது என்பது முறையாக பதிவு செய்யப்படவில்லை. Bedouin பழங்குடி இன பெற்றோருக்கு பிறந்த கடாபி, தனது பழங்குடியின பின்னணியை விளம்பரப்படுத்துவதில் பெருமைப்பட்டார். உதாரணமாக தனது விருந்தாளிகளை நாடோடி கொட்டகையில் வரவேற்பது முதல், தனது வெளிநாட்டு பயணங்களில் இந்த கொட்டகையை கொண்டு சென்று அதை காட்சிப்பொருளாக வைப்பதுவரை தனது சாமானிய பின்புலத்தை அவர் மறக்காமல் காட்சிப்பொருளாக்குவார்.
ஆனால் அவரது ஆட்சியில் நாட்டில் அரசியல் கட்சிகள் எதையும் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சகிப்புத்தன்மையற்ற அவரது தலைமையிலான ஆட்சியில் எதிர்ப்புக்கே இடமில்லை. எதிர்த்தவர்கள் ஒன்று சிறை சென்றார்கள். இல்லாவிட்டால் இரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்கள்.
ஆட்சியில் இருந்த கடாபி
ஆட்சியில் இருந்த கடாபி
ஆரம்பம் முதலே அவர் சர்ச்சைக்குரிய தலைவராக இருந்தார். மத்திய கிழக்கு பிரதேசத்திலும், உலக அரங்கிலும் அவருக்கு ஆதரவிருந்த அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது.
அவருக்கும் மேற்குலகுக்குமான மோதல் எண்பதுகளில் உச்சகட்டத்தை அடைந்தது. வெளிநாடுகளில் செயற்பட்டுவந்த ஆயுத குழுக்கள் பலவற்றை அவர் ஆதரித்தார். பாலத்தீன விடுதலை குழுக்களிலிருந்து, ஐயர்லாந்து ஆயுத குழுக்கள் வரை இவரது ஆதரவு பட்டியலில் இடம்பிடித்தன. இதனால் பயங்கரவாதிகளின் ஆதரவாளர் என்று மேற்குலக நாடுகள் அவரை பல தசாப்தங்களாக திட்டிவந்திருக்கின்றன.
லண்டனில் இருக்கும் லிபிய தூதரகத்திற்கு வெளியே பிரிட்டன் காவல்துறை அதிகாரி யுவன்னா பிளட்சர் சுடப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, லிபியாவுடனான தனது உறவை பிரிட்டன் முறித்துக்கொண்டது.
நான்காண்டுகள் கழித்து, ஸ்காட்லாந்தின் லாக்கர்பீ நகரத்தில் வைத்து அமெரிக்க ஜம்போ விமானம் ஒன்று வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்டது. இதில் 270 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இரண்டு லிபியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சர்வதேச அரங்கில் கர்னல் கடாபி தீண்டத்தகாதவராக மாறினார்.
கடாபி பதுங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழி
கடாபி பதுங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழி
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப்பிறகு, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லிபியா இழப்பீடு வழங்கியத்தைத் தொடர்ந்தும், பேரழிவை உருவாக்கும் ஆயுதங்களை கைவிடுவதாக அவர் ஒப்புக்கொண்டதைத்தொடர்ந்தும் அவர் சர்வதேச நாடுகளால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக அங்கீகரிக்கப்பட்டார். மேற்குலக நாடுகளுடனான உறவிலும் மாற்றம் ஏற்பட்டது.
ஆனால் இத்தகைய சாதகாமான மாற்றங்களை அவர் தனது உள்நாட்டு அரசியலில் முன்னெடுக்கவில்லை. விளைவு, வட ஆப்ரிக்க பிராந்தியத்திலும், அரபுலக நாடுகளிலும் வலுப்பெற்ற சீர்திருத்த கோரிக்கைகளின் தாக்கம் லிபியாவில் வலுவடைந்தபோது கடாபியால் அதை எதிர்கொள்ள இயலவில்லை. தனது ஆட்சிக்கு எதிரான ஆர்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன்ற கடாபி, கடைசியில் ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த ஊரான சித்ரில் சென்று தஞ்சம் புகுந்தார். இறுதியில் அங்கேயே கொல்லப்பட்டார்

_______________________________________________

ஆப்பிள்’ ஸ்டீவ் ஜாப்ஸ்”மரணம்.
       ’”
$கணினி உலகில் பல  சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ‌ஜாப்ஸ் மரணமடைந்தார். புற்று‌நோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார். அவருக்கு வயது 56ஆகிறது.
1980ல் இவர் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனம் இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப மாருதல்களில் முக்கிய இடம் வகிக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் 21வது வயதில்ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கினார். 1980ல் இவர் உருவாக்கிய ஆப்பிள் கம்ப்யூட்டர் மிக பிரபலமாக விளங்கியது. 2011ல் இதன் விற்பனை 4 லட்சத்தைத் தாண்டி உலக சாதனை படைத்தது.
கையில்  எடுத்துச் செல்லும் வகையில்மடிக் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கியவர் இவரே. 2003ல் ஐ பாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர்
 2007ல் ஐ‌ போனை இவர் உருவாக்கினார். ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை ‌கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது. கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது.
இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார். 
                                                                             
அமெரி்க்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் கடந்த 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிறந்தார் ஸ்டீவன்பவுல் ஜாப்ஸ். கம்ப்யூட்டர் இன்ஜினியராக தனது பள்ளி வாழ்க்கையை துவக்கினார். 300-க்கும் மேற்பட்ட தனது எலெக்ட்ரானிக் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றுள்ளார். கடந்த 1977-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் கம்ப்யூட்டரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ-போன்களை அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு ஜனவரி 27-ம் ஆண்டு முதன்முதலாக ஐ-பேடினை அறிமுகம் செய்து நவீன கணினி உலகில் புரட்சியை ஏற்படுத்தினார்.கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார்.அவர் விலகினாலும் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகள் தொடர்ந்துவந்தது.

                 
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIOOOOOOOOOOOOOOOOOOOOOOOIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII

நோபல் பரிசுவிஞ்ஞானி 2 நாட்களுக்கு முன்னரே மரணம்

மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வான கனடாவின் ரெல்ப் ஸ்டைன்மன் தேர்வாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே மரணமடைந்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுவோர் விபரம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. மூன்று விஞ்ஞானிகள் இந்த பரிசை பகிர்ந்துகொண் டுள்ளனர்.
இதில் ஒருவரான கனடாவின் ரெல்ப் ஸ்டெயின்மன் கடந்த செப்டெம்பர் 30 ஆம் தேதியே மரணமடைந்துள்ளார்.
 மரணமடைந்த ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்ப டுவதில்லை. இந்நிலையில் ரெல்ப் ஸ்டையினுக்கு நோபல் பரிசை வழங்குதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புற்று நோய்க்கான புதிய மருந்து மற்றும் சிகிச்சை அளிக்க ஏதுவாக, உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ரகசியங்களை கண்டறிந்து வெளியிட்ட தற்காகவே மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.
இதில் தான் ஆய்வு நடத்திய புற்றுநோய் காரணமாகவே ஸ்டைன்மன் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர அமெரிக்காவின் புரூஸ் பட்லர், லக்சன்பேர்க்கின் ஜுல்ஸ் ஹாப்மான் ஆகிய விஞ்ஞானிகளும் இம்முறை நோபல் பரிசை வெல்லவுள்ளனர்.
2011 நோபல் பரிசு வழங்கும் வைபவம் சுவீடன் தலைநகர் ஸ்டொப்ஹோமில் வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.

=================================================
இந்தியா பொருளாதார நிலை.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடன் நெருக்கடியைசமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான கடனை குறைத்து, உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.iஇதற்குக் காரணம் அது முற்றிலுமாக அந்நியமாதலில் இருந்து இடதுசாரிகட்சியினர் எதிர்ப்பால் சற்று விலகியிருந்ததே.அதனால்தான் உலக பொருளாதர வீழ்ச்சி அதை அமெரிக்கா அதன் கூட்டு நாடுகாலிப் போல் இந்தியாவைப் பாதிக்கவில்லை. இதனால், அயல்நாட்டினரின் மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்புள்ள நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. பி.எச்.டீ. நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு, உலக நாடுகளின் கடன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து இப்பிரிவு, தற்காலிக புள்ளிவிவர அடிப்படையில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது: அமெரிக்காவின் கடன் உயர்ந்து கொண்டே உள்ளது. அதனால் அந்நாடு, அதன் கடன் உச்சவரம்பை, பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் உயர்த்திக் கொண்டது. அது போன்று கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கடன் நெருக்கடியைசந்தித்து வருகின்றன. இதனால், இந் நாடுகளில் அயல்நாட்டினர் முதலீடுமேற்கொள்வதில் ஆர்வம் குறைந்துள்ளது. அதேசமயம்,சர்வதேச பொருளாதார நெருக்கடியை இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் ”லபமாக சமாளித்து வருகின்றன. இந்நாடுகள், அவற்றின் சிக்கன நடவடிக்கை, திறமையான நிதி நிர்வாகத்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான கடன்களை குறைத்து வருகின்றன. கடந்த 2008ம் ஆண்டு, அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் தாக்கம் உலக நாடுகளை பாதித்தது. எனினும் இந்த தாக்கத்தில் இருந்து இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ஓரளவு தற்காத்துக் கொண்டன. கடந்த 2007ம் ஆண்டு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த கடன் 77.7சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, நடப்பு 2011ம் ஆண்டில், தற்காலிக மதிப்பீட்டின் அடிப்படையில் 2.7சதவீதம் குறைந்து 75சதவீதமாகசரிவடைந்துள்ளது. தற்போது உலக பொருளாதாரம் மந்தமாக உள்ளது. இந்நிலையிலும், இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான கடன் குறைந்துள்ளதற்கு, செலவின குறைப்பு மற்றும் சிறப்பான நிதி நிர்வாக அணுகுமுறை ஆகியவை காரணமாகும். இதே போன்ற நடைமுறையை பிரேசில் நாடும் கடைபிடித்து வருகிறது. இதனால், கடந்த 2007ம் ஆண்டு காணப்பட்ட, மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான கடன், 65.2சதவீதத்தில் இருந்து நடப்பு ஆண்டில் 65சதவீதமாக குறைந்துள்ளது.இதே காலத்தில், ரஷ்யாவின் கடன் 3.2சதவீதம் உயர்ந்து 8.5சதவீதத்தில் இருந்து 11.7சதவீதமாக அதிகரித்துள்ளது. இதர நாடுகளைக் காட்டிலும், ரஷ்யாவின் கடன் அளவு மிகக் குறைந்த அளவே உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், வேகமாக வளர்ச்சி பெற்று வரும் சீனாவின் கடன் இதே காலத்தில் அதிகரித்துள்ளது. இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான கடன், 2007ம் ஆண்டு 19.6சதவீதமாக இருந்தது. இது, 7.3சதவீதம் உயர்ந்து, நடப்பு 2011ம் ஆண்டில் 26.9சதவீதமாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், இத்தாலியின் கடன் 17.4சதவீதம் அதிகரித்து 103.6சதவீதத்தில் இருந்து 121.1சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான கடன், இதே காலத்தில் 17.6சதவீதம் உயர்ந்து, 65சதவீதத்தில் இருந்து 82.6சதவீதமாக அதிகரித்துள்ளது.ஸ்பெயின் நாட்டின் கடன் 31.3சதவீதம் அதிகரித்து, 36.1சதவீதத்தில் இருந்து 67.4சதவீதமாக உயர்ந்துள்ளது.இங்கிலாந்து நாட்டின் கடன் 36.8சதவீதம் உயர்ந்து, 43.9சதவீதத்தில் இருந்து 80.8சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கடன் 37.7சதவீதம் அதிகரித்து 62.3சதவீதத்தில் இருந்து 100சதவீதமாக உயர்ந்துள்ளது. போர்ச்”கல் நாட்டின் கடன் 37.8சதவீதம் அதிகரித்து 68.3சதவீதத்தில் இருந்து 106சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான கடன் 187.7சதவீதமாக இருந்தது. இது, 45.4சதவீதம் உயர்ந்து, நடப்பு 2011ம் ஆண்டில் 233.1சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், கிரீஸ் நாட்டின் கடன் 60.1சதவீதம் உயர்ந்து, 105.4சதவீதத்தில் இருந்து 165.6சதவீதமாக உயர்ந்துள்ளது. அயர்லாந்து நாட்டின் கடன் 84.3சதவீதம் அதிகரித்து 24.9சதவீதத்தில் இருந்து 109.3சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா, அதன் கடன்களை குறைக்க எடுத்து வரும் தீவிர முயற்சி, சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. அதனால், அயல் நாட்டினர், இதர நாடுகளை விட இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வமுடன் உள்ளனர்.இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

===========================================================


இலங்கைப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் பலவற்றை இலங்கை தொலைக்காட்சி மூலமே மேற்குலகம் திரட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தியதையும் இலங்கை மீதான போர்க்குற்றங்களில் ஒன்றாக ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைஅரசாங்கமே தாக்குதல் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதியில் – கனரக ஆயுதங்களை பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்த பின்னரும் – பொதுமக்கள் மீது பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளதற்கான ஆதாரங்களை அரசாங்கத் தொலைக்காட்சியே வழங்கியுள்ளது.
இதுபற்றிய தகவல் பரிமாற்றக் குறிப்பு ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
2009 மார்ச் 11ம் நாள் கொழும்பில் இருந்து அமெரிக்கத் தூதுவர் பிளேக் அனுப்பியஇலங்கைநிலைமைகள் குறித்த 29வது அறிக்கையில் இதுபற்றிய தகவல் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.
2009 மார்ச் 10ம் நாள் பாதுகாப்பு வலயத்தில் பலத்த பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுவதாகவும், அன்றைய நாள் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 254 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா பிரதிநிதி தமக்குத் தெரியப்படுத்தியதாகவும் பிளேக் அனுப்பிய தகவலில் கூறப்பட்டுள்ளது.
அன்றைய நாள் பாதுகாப்பு வலயத்தில் “மிகமோசமான நாள்“ என்று பிளேக் தனது அறிக்கையில் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறுகின்றது.
ஆட்டிலறிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்தி விட்டதாக, இலங்கை அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதி கொடுத்திருந்த போதும்- புலிகள் நிலைகள் மீது இலங்கைப் படையினர் ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தும் காணொலிக் காட்சியை அரச தொலைக்காட்சி அன்றைய நாளும் (மார்ச் 11) ஒளிபரப்பியுள்ளதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐரிஎன் தொலைக்காட்சியில் இந்தக் காணாலி ஒளிபரப்பப்பட்டதாகவும், இது பற்றி மறுநாளான மார்ச் 12ம் நாள்  பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்திக்கும் போது எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது

==========================================
சில நூல்கள்

ரூசோவின் சமுதாய ஒப்பந்தம்
பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான சமர்க்களமாக விளங்கிய பதினெட்டாம் நூற்றாண்டின் புதுமைப் படைப்பு இந்த புத்தகமாகும். 1776ல் நிகழ்ந்த அமெரிக்க புரட்சிக்கும், 1789ல் நிகழ்ந்த பிரெஞ்சு புரட்சிக்குமான விதையாக இந்த புத்தகம் விளங்கியதாக சரித்திர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிக்மன் ப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்
மனித மனம் பற்றிய ஆழ்ந்த பல விஷயங்களை இந்த புத்தகம் ஆய்வு செய்கிறது. மனிதனின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பே கனவுகள். இது மனிதனை செயலுக்குத் தூண்டிவிடும் சக்தி கொண்டது, என இப்புத்தகம் கூறுகிறது.
சார்லஸ் டார்வினின் ‘உயிரினங்களின் தோற்றம்’
1859ல் இது வெளியிடப்பட்ட காலம் வரை உயிரினங்களின் தோற்றம் குறித்து மத கட்டுக்கதைகளே விதவிதமான விளக்கங்களைக் கூறிவந்தன. ஆனால் உயிரியல் மரபில் ஒரு புரட்சிகர சிந்தனை மாற்றத்திற்கே விதைபோட்டு, அதுவரையான உலக பார்வையினையே இந்நூல் மாற்றியமைத்துவிட்டது.
காரல்மார்க்ஸ் - பிரடெரிக் எங்கல்சின் உலக கம்யூனிஸ்ட் அறிக்கை
காரல்மார்க்ஸ், பிரடெரிக் எங்கல்ஸ் ஆகியோரின் கூட்டுப்படைப்பு உலக கம்யூனிஸ்ட் அறிக்கை ஆகும். ஒரு புதிய சோசலிஸ்ட் உலக கண்ணோட்டத்தை மனித குலத்திற்கு அளித்த இப்புத்தகம் நான்கு பகுதிகளைக் கொண்டதாகும்.
‘உலகத்தை மாற்று’ என மனித குலத்திற்கு அறைகூவல் விட்டபடியே வெளிவந்த இந்த புத்தகம் உண்மையில் கோடானு கோடி மக்களின் வாழ்வையே மாற்றியமைத்துக் காட்டியது.
காரல் மார்க்சின் ‘மூலதனம்
மார்க்ஸ் 1844 முதல் 1883 வரை 40 ஆண்டுகளும் பிரடெரிக் எங்கல்ஸ் 11 ஆண்டுகளும் பாடுபட்டு உழைத்த உழைப்பின் விளைச்சல்தான் மூலதனம் புத்தகம் ஆகும். இதன் முதல் பாகம் 1867ல் மார்க்சாலும் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் மார்க்சின் மறைவுக்குப்பின்னர் முறையே 1885-1894 ஆண்டுகளில் பிரடெரிக் எங்கல்சாலும் வெளியிடப்பட்டன.

=====================================================================

 1. ஜப்பான் ஆட்சிமாற்றம்?                    
  புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து, இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் அணு உலைகள் அமைப்பது குறித்த வாதப் பிரதிவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது. விபத்து நடந்த ஜப்பானில் ஆட்சி மாற்றத்திற்கே வழி வகுத்துவிட்டது.

  கடந்த 5 ஆண்டுகளில் ஆறாவது பிரதமராக யொஷிஹிகோ நோடா கடந்த ஆகஸ்ட் 30ம்தேதி பதவியேற்றார். ஜப்பான் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், தனக்கு முன்பு வெறும் 14 மாதங்களே ஆட்சி நடத்திய அதே கட்சி யைச் சேர்ந்த பிரதமர் நவோட்டா கானை வீழ்த்தி விட்டு நாற்காலியைப் பிடித்துள்ளார்.

  ஜப்பான் ஜனநாயகக் கட்சிக்குள் நடந்து வரும் மிகக் கடுமையான கோஷ்டி மோதல் களின் உச்சமாக, 2009ல் நடந்த தேர்தலில் இக் கட்சி ஆட்சியைப் பிடித்ததற்குப் பிறகு அடுத்த டுத்து 3 பிரதமர்கள் மாறிவிட்டார்கள். இக்கட்சிக் குள் உள்நாட்டின் முக்கியப் பிரச்சனைகளிலும், வெளியுறவுக் கொள்கைகளிலும் பல்வேறு கோஷ்டிகளிடையே மோதலும், முரண்பாடும் நீடிப்பதன் விளைவே இது.

  குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு துணை நிற்பதா, இல்லையா என்ற பிரச்சனையில் இக்கட்சிக்குள் மோதல் தீவிரம டைந்துள்ளது. அதனால்தான் ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்கு உதவும் விதத்திலான கொள்கைகளை - அது அணுசக்தி விவகாரமாக இருந்தாலும் சரி, நவீன தாராளமயக் கொள்கை யாக இருந்தாலும் சரி - அமல்படுத்துவதில் முரண்பாடு தொடர்கிறது.

  ஜப்பானில் நீண்டகாலமாக ஏகபோக ஆட்சி நடத்தி வந்தது லிபரல் ஜனநாயகக் கட்சி. அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாகவே செயல்பட்ட இந்த ஆட்சியை 2009 தேர்தலில் ஜப்பானியர்கள் தூக்கியெறிந்தார்கள். அமெ ரிக்காவில் மையம் கொண்ட உலகப் பொருளா தார நெருக்கடி, அந்நாட்டின் கட்டளைக்கேற்ப தீவிரமாக பின்பற்றப்பட்ட நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக, ஜப்பானையும் தாக்கியது. லட்சக்கணக்கான வேலைகள் பறி போயின. பொருளாதாரத் துறையில் உச்சத்தில் இருக்கிறது என ஜப்பானைப் பற்றி உலக அளவில் கருத்து நிலவுகிறது என்ற போதிலும், உள்நாட்டில் இக்கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போர்ப்பரணி பாடி வரு கிறார்கள். அதன் எதிரொலியாக ஆட்சியைப் பிடித்த ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைவ ரான யூகியோ ஹதோயமா முதலில் பிரதமர் ஆனார்.

  அமெரிக்க ஏகாதிபத்தியம் ஜப்பானில் கோலோச்சுவதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுவதை உணர்ந்த ஹதோயமா, ஜப் பானின் ஒகினாவா தீவில் இருக்கும் அமெ ரிக்காவின் ராணுவத் தளத்தை காலி செய்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று அறிவித்தார். ஜப்பானின் தெற்கு முனை யில் அமைந்துள்ள ஒகினாவா ராணுவத் தளத் தில் சுமார் 47 ஆயிரம் அமெரிக்க துருப்புகள் நவீன ஆயுதங்களோடு முகாமிட்டுள்ளன. அங் கிருந்து சீனாவையும், இதர பல நாடுகளையும் மிரட்டிக் கொண்டிருப்பதே அதன் நோக்கம். உலக அளவில் 130 நாடுகளில் 700க்கும் அதிகமான ராணுவத் தளங்களை அமெரிக்கா நிறுவியுள்ளது. அதில் மிக முக்கியமான தளங் களில் ஒன்றாக ஒகினாவா ராணுவத் தளத்தை கருதுகிறது. இதைக் காலி செய்ய முயற்சி மேற் கொள்வதாக அறிவித்துவிட்டு, ஒரு பிரதமர் ஜப்பானில் ஆட்சி நடத்திவிட முடியுமா?

  ஆத்திரமடைந்தார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா. ஜப்பான் ஜனநாயகக் கட்சிக்குள் மோதல் வெடித்தது. ஹதோயமாவை வீழ்த்தி விட்டு 2010 ஜூனில் நவோட்டா கான் பிரதமர் ஆனார். இவர் மீது பல புகார்கள் எழுந்திருந்த நிலையில், புகுஷிமா அணு உலை வெடித்தது. ஜப்பானை பெரும் துயருக்குள்ளாக்கிய இந்த விபத்தைக் கையாள்வதில் நவோட்டா கான் தோல்வி அடைந்துவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, புகுஷிமா உள் பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட பழமையான அணுமின் நிலையங் களை பாதுகாப்பு கருதி மூடுவதற்கு உத்தரவிட் டார் கான். அது இன்னும் பேராபத்தைக் கொண்டு வந்தது. ஏனென்றால், ஜப்பானின் மின் தேவை யை பூர்த்தி செய்ய அங்கு பெருமளவில் இருக் கும் நீர்மின் உற்பத்தி ஆதாரவளத்தை பயன் படுத்தாமல், தனியார் பெரும்நிறுவனங்கள் நாடு முழுவதும் அணு உலைகளை அமைத்து மின் உற்பத்தி செய்ய அனுமதி அளித்திருந்ததன் விளைவாக, திடீரென இந்த உலைகளை மூடு மாறு உத்தரவிட்டதால் இருளில் மூழ்கியது ஜப் பான். தொழில்கள் ஸ்தம்பித்தன.

  இதைத்தொடர்ந்து அவரை வீழ்த்திவிட்டு தற்போது பிரதமராகியுள்ளார் யொஷிஹிகோ நோடா. இவர் பொறுப்பேற்ற உடனே, மூடப்பட்ட அனைத்து அணு உலைகளையும் உடனடியாக திறக்குமாறு உத்தரவிட்டுள்ளார். விபத்து ஏற்பட்டாலும் அணு மின் உற்பத்தி தொடரும் என்று அறிவித்துள்ளார். ஒகினாவா ராணுவத் தளத்தைப் பற்றி பேச்சே இல்லை என்றும் கூறியுள்ளார். பொருளாதார நெருக்க டியை எதிர்கொள்ள சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஏழை ஜப்பானியர்களின் வேலையில் கைவைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார்.

  அமெரிக்காவின் ஆதரவோடு ஆட்சி நடத்துவது எப்படி என்ற ‘கலை’யை கற்றுக் கொண்டார் போலும்!

                                                                                                 - எஸ்.பி.ராஜேந்திரன்
 2. =============================================

  ஏகாதிபத்தியத்தின் எண்ணெய் அரசியல்
  -கி.இலக்குவன்
                                            
  அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் மற் றும் எண்ணெய் நுகர்வோருக்கான உலக எண்ணெய் வளப்பாதுகாப்பு அமைப்பாக அமெரிக்க ராணுவம் உருமாற்ற மடைந்து விட்டது.


  இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளவர் யார் தெரியுமா-பேராசிரியர் மைக்கேல் கிளேர் என்ற ஒரு அமெரிக்கரே இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். உலக எண்ணெய் அரசிய லில் ஒரு நிபுணராக இவர் அறியப்படுகிறார். பெட்ரோலிய எண்ணெய் வளம் நிரம்பிய பகுதி களை தனது ஆதிக்கத்துக்குள் வைத்திருப் பது என்ற ஒரு கொள்கையை அமெரிக்க அரசு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடித்து வருகிறது. 1973ம் ஆண்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், ஓபெக் என்ற அமைப்பை ஏற்படுத்தி எண்ணெய் விலையைத் தாங்களே நிர்ணயிப்போம் என்று அறிவித்தன. இதனால் ஏறிய தாறுமா றான விலையேற்றக்காலம் எண்ணெய் அதிர்ச்சிக்காலமாக அழைக்கப்படுகிறது. எண்ணெய் வளப்பிராந்தியம் எப்போதுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அமெரிக்கா அப்போதே வகுத்துவிட்டது. வேறு அந்நிய நாடு எதுவும் வளைகுடாப் பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முய லுமானால் அது அமெரிக்காவின் முக்கிய நலன்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குத லாகக் கருதப்படும். இதனை எதிர் கொள்வ தற்கு ராணுவபலத்தைப் பயன்படுத்தவும் அமெரிக்கா தயங்காது என்று அன்றைய அமெரிக்க அதிபரான ஜிம்மி கார்ட்டர் ஒரு கொள்கைப் பிரகடனத்தையே வெளியிட்டார். தனது மண்ணில் பெட்ரோலிய எண்ணெய் யை சுமந்திருக்கும் எந்தவொரு நாட்டிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ராணுவ பலத்தை பயன்படுத்தியோ, அவ்வாறின் றியோ குறுக்கிடும் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது. இராக்போர் தொடங்கி இன்றைய லிபிய யுத்தம் ஈறாக அனைத்து போர்களும் எண்ணெய் வளத்தை தனது கட் டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அமெரிக்கா வும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் நடத்தி யுள்ள யுத்தங்களே.


  சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற சில நாடுகளின் பிற்போக்குத்தனமான மன் னராட்சிகளுக்கு முட்டுக்கொடுத்து, ராணுவ உதவி போன்றவற்றை வழங்குவதன் மூலம் அவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் அமெ ரிக்கா வைத்துள்ளது. ஆனால் எண்ணெய் வளத்தை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய எண்ணெய் கம்பெனிகளின் சூறையாடலுக்கு அனுமதிக்காத நாடுகளில் ஆட்சிமாற்றத் தைக்கொண்டுவருவதையே தனது லட்சிய மாகக்கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வரு கிறது. 1953ல் ஈரான் நாட்டு அதிபரான முகமது மொசாதே தனது நாட்டின் எண்ணெய்த் தொழி லை தேசியமயமாக்கினார் என்பதற்காக சிஐஏவினால் பின்னாலிருந்து இயக்கப்பட்ட அதிரடிப்புரட்சி மூலம் அகற்றப்பட்டார்.


  உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண் ணெய் வளநாடான இராக்கில் நடந்தது என்ன என்பதை உலகம் அறியும். பேரழிவு ஆயுதங் களை இராக் குவித்துள்ளது என்ற அப்பட்ட மான பொய்யைப்பரப்பி சதாம் உசேனின் ஆட்சி அகற்றப்பட்டது. தனது எண்ணெய் வளத்தின் பலன்களை தனது நாட்டு மக்களே அனுபவிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததே அவர் இழைத்த குற்றம். அதற்காக இராக்கின் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான இராக்கியர் கள் கொல்லப்பட்டனர்; சதாம் உசேனின் ஆட்சி அகற்றப்பட்டது.


  உலகின் இரண்டாவது எண்ணெய் வள நாடான ஈரானின் மீது கடுமையான வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. தனது மண் ணில் புதைந்து கிடக்கும் கச்சா எண்ணெய் யை வெளியே எடுத்து சுத்திகரிப்பதற்கான உதவிகளை மற்ற நாடுகளிலிருந்து பெற முடியாத நிலையில், இந்தியா போன்ற நாடு களிலிருந்து அது இறக்குமதி செய்ய வேண் டியநிலையில் வைக்கப்பட்டுள்ளது. தனது நாட்டின் எண்ணெய்த் தொழிலை மேம் படுத்துவதற்கு அதற்கு 20,000 கோடி டாலர் தேவைப்படுகிறது. வர்த்தகத் தடைகள் காரணமாக அதற்குத்தேவைப்படும் நிதி கிடைக்கவில்லை. ஈரான்/பாகிஸ்தான்/இந்தியா எரிவாயுக்குழாய்திட்டத்துக்கும் அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுள்ளது. அமெரிக்க நிர்ப்பந்தத்துக்கு பயந்து இந்திய அரசும் இந்த அநீதிக்குத் துணை போகிறது.


  ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சூடான் நாட்டின் தென்பகுதி எண்ணெய் வளம் நிரம்பிய பகுதியாகும். அமெரிக்கத் தலையீட்டின் விளைவாக இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தெற்கு சூடான் தனி நாடாகிவிட்டது. இங்கே இனி மேற்கத்திய எண்ணெய் கம்பெனிகள் புகுந்து விளையாட லாம்.


  லிபியாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காகவே கடாபி அரசுக்கு எதிரான வர்த்தகத்தடைகளை அமெரிக்கா விதித்து வந்தது. 2004 ம் ஆண்டில் அமெரிக் காவுடன் சமரசம் செய்து கொள்வதற்காகவே மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்கள் லிபியா வில் காலூன்றுவதற்கு கடாபி அனுமதித்தார். ஆனால் 2006ம் ஆண்டு முதல் கடாபி வேறு விதமாகப் பேசத்தொடங்கியதை அமெரிக்கா கண்டது. அந்நிய எண்ணெய் கம்பெனிகள் பெட்ரோலியத் தொழிலில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வருகின்றன. இது லிபியா வுக்கே கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண் டும் என்று 2006-ம் ஆண்டில் கடாபி பேசி னார். அந்நியக் கம்பெனிகளில் மேலாளர் பதவி களில் லிபியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும் கடாபி பேசினார். எண் ணெய் உற்பத்தி செய்யும் அனைத்து நாடுக ளும் தங்களுடைய பெட்ரோலியத் தொழிலை தேசியமயமாக்கவேண்டும் என்று கடாபி பேசினார். இவ்வாறு எரிசக்தித் துறையில் தனது தேசிய நலன்களை பாதுகாக்கும் கொள் கையை கடாபி வலியுறுத்தி வருவதை அமெ ரிக்கத் தூதர்கள் தங்கள் அரசுக்கு தெரிவித்து வந்துள்ளதை விக்கி லீக்ஸ் இணையதளச் செய்திகள் அம்பலப்படுத்தியுள்ளன.


  இந்நிலையில்தான் லிபியாவின் எண் ணெய் வளப்பகுதிகளில் கடாபிக்கு எதிரான கலகம் வளரத்தொடங்கியது. லிபிய மக்க ளைக் காப்பாற்றுவது என்ற பெயரில் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் விமானப்படை கள் லிபியா மீது குண்டுமழை பொழிந்தன. லிபிய கலகக்காரர்களுக்கு நிதி உதவியையும் ஆயுத உதவியையும் வழங்கி வந்தன. கடாபி யின் ஆட்சி அகற்றப்பட்டவுடன் மேற்கத்திய எண்ணெய் கம்பெனிகள் லிபியாவில் பாது காப்புடன் செயல்பட அனுமதிக்கப்படுவர் என்ற உறுதி மொழி கலகக்காரர்களால் வழங் கப்பட்டது. லிபியத் தலைநகரான திரிபோலி கலகக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்ட நிலையில், பிரான்ஸ் அதிபர் சர்கோசி போன்றோரின் பேச்சுக்கள் எண்ணெய் வளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக நேட்டோ படை தலையிட் டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளன.


  தென் அமெரிக்காவின் எண்ணெய் வள நாடான வெனிசுலாவின் தேசபக்தரான சாவே ஸின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா 2002ம் ஆண்டில் மேற்கொண்ட முயற்சி விழிப்புணர்வுமிக்க வெனிசுலா மக்களால் முறியடிக்கப்பட்டது.


  மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற் றும் அணுஆயுதப்பரவல் தடையைக் காரண மாகக் கூறி அமெரிக்கா நடத்திவரும் யுத்தங் கள் உலகின் எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற் கான ஏகாதிபத்திய அரசியல் என்பது தொடர் ந்து அம்பலமாகி வருகிறது.


                                
  __________________________________________________________
  Paristamilராஜீவ் காந்தி கொல்லப்பட்டதன் பின்னணி என்ன? உருவாக்கப்பட்ட தொடரொன்றின் இன்னொரு பக்கம்
  [September 7, 2011, 3:17 am][views: 287]
  "நாங்கள் ஈழப் போரிற்கு ஆதரவாக இருந்தோம். அத்துடன் பிரபாரன் மீது மரியாதை வைத்திருந்தோம். ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிவு (பேரறிவாளன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அறிவு மிகவும் மென்மைப் போக்குள்ள ஒரு பையன். திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் காண்பிக்கப்படும் போது அறிவு தரையைப் பார்த்தபடி இருப்பார். அவ்வாறான மென்மையான இதயமுடையவர். இவ்வாறான குணாதிசயங்களைக் கொண்ட ஒருவர் எவ்வாறு ஒருவரைக் கொலை செய்வதற்கான குண்டுகளைக் கொண்டு செல்ல உதவியிருக்க முடியும்?" என பேரறிவாளனின் தாயார் உள்ளம் குமுறுகிறார்.


  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  லேடிபேர்ட் என்ற வண்டு ரத்தத்தில் இருந்து காசநோய்க்கு(டி.பி) மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

  லேடிபேர்ட் என்ற வண்டு ரத்தத்தில் இருந்து காசநோய்க்கு(டி.பி) மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேரியா, எம்.ஆர்.எஸ்.ஏ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கும் பக்டீரியா தொற்று ஆகியவற்றையும் இந்த மருந்து குணப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  ஜெர்மனி உர்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல் வருமாறு: நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய் தீர்வு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஹார்லேக்வின் லேடி பேர்ட் வண்டுவின் பிசுபிசுப்பான ரத்தம் நோய் கிருமிகளை தாக்கி அழிப்பது தெரிய வந்துள்ளது. இதை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியதில் பறவையின் ரத்தம் மலேரியா, டிபி, எம்.ஆர்.எஸ்.ஏ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கும் பக்டீரியா கிருமிகளை அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தயாரிக்கப்படும் மருந்து, நோய்களை எளிதில் விரட்டவும் பூரண குணம் அடையவும் உதவும். சோதனைக்கூட ஆய்வில் எதிர்பார்த்ததைவிட இந்த மருந்துக்கு அதிக வெற்றி கிடைத்துள்ளது. இது குறித்த ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?