5ஜி செல்பேசிகள்.
தொலைதொடர்புத துறையில் குறிப்பாக செல்பேசியில் நோக்கியாவை பின்னுக்குத்தள்ளி முன்னே வருகிறது சாம்சங் . இதன் இப்போதைய புதிய அதிரடி அறிமுகம் 5ஜி செல்பேசிகள். 5ஜி செல்பேசி தொடர்பாக சாம்சங் நிறுவனம் கூறும்போ து "ஒரு வினாடிக்கு ஒரு கிகாபைட் அளவிலான தகவல்களை பறிமாறிக்கொள்ளும் திறன் 5ஜி யின் சிறப்புத்தன்மை " என தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் தான் இந்த சேவை சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் 4ஜி சேவையை ஒப்பிடும் போது தகவல் பறிமாற்றத்தில் பல நூறு மடங்கு வேகம் படைத்தது 5ஜி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேவையைக் கொண்டு 3டி திரைப்படங்கள், 3டி விளையாட்டுகள், அதி நவீன எச்.டி., (UHD) தரத்துடன் கூடிய ஸ்டரீமிங் ஆகியவற்றை உபயோகிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. நிமிடத்துக்கு நிமிடம் சமூக வலை தளங்களில் உலவி புதிது புதிதாக இடுகை போடும் காலம். அதற்கேற்ப செல்பேசியும் கையடக்க கணினி என்ற தன்மையை விட்டு அடுத்ததளதுக்கு 5 வது தலைமுறை அலைவழியே போய் விட்டது. நீங்கள் விரும்பும் ஒரு திரைப்படத்தை யாராவது திருடி வலை...