இடுகைகள்

நிகழ்வுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊடக {வியா] வாதிகளும் ......?

படம்
-ஊடக தர்மங்களும். இப்போது ஊடகங்களால் அலசப்படும் முக்கிய செய்தி ஸ்டாலின் வீட்டின் முன் நிருபர்கள் தாக்கப்பட்டதுதான். இதற்கு முன் இவர்கள் தாக்கப்பட்டதே இல்லையா? அப்போதெல்லாம் இவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தார்களா என்பது முக்கியமில்லை.இவர்கள் புகாரில் கைது செய்யப்பட்டவர்கள் யாராவது உண்டா? சென்னை கடற்கரை சாலையில் அயோத்தியாகுப்பம் அருகில் அதிமுகவினரால் வீரமணி தலைமையில் அரிவாளால் வெட்டப்படும்  , குத்தப்பட்டும்   ராணிமேரி கல்லூரியில் பிணங்கள் போல்   கிடத்தப்பட்டு கிடந்தார்களே அப்போது இந்த ஊடக விடுதலை வீரர்கள் எங்கே சொம்படித்துக்கொண்டிருந்தார்கள்.அப்போது இந்த ஊடகவாதிகளுக்காக பரிந்து போராடியது கருணாநிதியும்,திமுகவும்தான். இன்று திமுக என்றால் அதை செய்தி வெளியிடும் விதம்,அதிமுக என்றால் அதை செய்தி வெளியிடும் விதம் ஊடக தர்மம் இன்றுள்ள நிலையை நன்றாகவே காட்டுகிறது. சசிகலா.நடராசன்,இளவரசி தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்ட போது அதை முக்கிய செய்தியாக புலனாய்வு செய்தி இதழ்களை தவிர வேறு நடுநிலை நாளிதழ்கள் என்று திரியும் ஊடகங்கள் வெளியிட்டதா? அப்போது ஜெயலலிதாவை சந்தித்து ந...

நிகழ்வுகள்,

படம்
25/08  முக்கிய நிகழ்வுகள்:- * 1803- யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது. * 1830 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது. * 1912 - சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. * 1920 - போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகஸ்ட் 13-ல் ஆரம்பித்த போர் செம்படையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. * 1933 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். * 1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது. * 1955 - கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின. * 1981 - வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகஅருகில் சென்றது. * 1989 - வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் அருகில் சென்றது. * 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது. * 2003 - மும்பையில் நடைபெற்ற இரண்டு கார் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர். * 2007 - ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு க...