நிகழ்வுகள்,
25/08
முக்கிய நிகழ்வுகள்:-
* 1803- யாழ்ப்பாணம் பனங்காமம் பற்று மன்னன் பண்டாரவன்னியன் விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.
* 1830 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.
* 1912 - சீனத் தேசியவாதிகளின் குவாமிங்தாங் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
* 1920 - போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகஸ்ட் 13-ல் ஆரம்பித்த போர் செம்படையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
* 1933 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
* 1944 – இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது.
* 1955 - கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.
* 1981 - வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகஅருகில் சென்றது.
* 1989 - வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் அருகில் சென்றது.
* 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.
* 2003 - மும்பையில் நடைபெற்ற இரண்டு கார் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
* 2007 - ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
* 2007- கிறீசில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 53 பேர் கொல்லப்பட்டனர்.
பிறந்த நாள்
* 1929 - எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
* 1962 - தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்
* 1952 - விஜயகாந்த்
இறந்த நாள்
* 1822 - வில்லியம் ஹேர்ச்செல், வானியலாளர் (பி. 1738)
* 1867 - மைக்கேல் பரடே, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1791)
* 1908 - ஹென்றி பெக்கெரல், பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1852)
* 1976 - எல்விண்ட் ஜோன்சன், சுவீடன் நாட்டு எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
* 2007 - தாதி பிரகாஷ்மணி, பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை ராஜயோகினி
* 2008 - தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1933)
* 2009 - எட்வர்ட் கென்னடி, அமெரிக்க செனட்டர் (பி. 1932)
* 2012 - நீல் ஆம்ஸ்ட்ராங், சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர் (பி. 1930)
------------------------------------------------------------------------------------------------------------------------------------
8 ஆயிரம்-80 ஆயிரம்,
--------------------------------------------------
இந்திய பொதுத்துறை வங்கிகளில் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன் களை திருப்பிச் செலுத்தாமல் அப்படியே விழுங்கி வருகின்றன. அதற்கு உறுதுணையாக இருந்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பணிவிடை செய்து வருகிறது.
இதன் விளைவு இந்திய மக்களின் பணம் ரூ. 5 லட்சம் கோடியை கார்ப்பரேட் திமிங்கலங்களின் வாய்ற்குள் மத்திய அரசு திணித்து வருகிறது.
இப்படி பெரும் நிறுவனங்கள் வாங்கிய கடனில் 10 சதவிகிதம் அளவிற்கு வராக்கடனாக மாறுவது ஏன் என்பது குறித்து தற்போது மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) விசாரணையை துவங்கியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கட னாக ரூ. 50 லட்சம் கோடிக்கு மேல் கொடுத் திருக்கின்றன.
இதில் தற்போது ரூ.5லட்சம் கோடியை வராக்கடனாக கணக்கெழுத மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்த நடவடிக் கை பெரும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செய்யும் கைமாறாகவே அமையும். இதில் பல் வேறு மோசடிகள் உள்ளடங்கியிருக்கின்றன.மத்திய அரசு எந்த கார்ப்பரேட் நிறுவனங் களின் கடனை வராக்கடனாக கணக்கெழுத ஒப்புதல் தெரிவிக்கிறதோ, அதே நிறுவனங்கள் மறுபுறம் புதிய சொத்துக்களை வாங்கிக் குவிக் கின்றன.
புதிய தொழில்களில் முதலீடுகளையும் செய்து வருகின்றன. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, சில அதிகாரிகளையும் துணைக்கு வைத்துக் கொண்டு வரி கட்டுவதில் இருந்தும் தப்பிக்கும் பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.சாதாரணமாக கல்விக்கடன் பெற்ற ஒரு மாணவன் படித்து முடித்து வேலை கிடைக்காத தால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
அப்போது மாண வனின் புகைப்படம் மட்டுமின்றி அவரது குடும் பத்தினரின் புகைப்படத்தையும் வெளியிட்டு கடன் செலுத்தாதவர்கள் பட்டியலை அறிவிக் கிறது. "ஆனால் பலலட்சம் கோடிகளை வாங்கி விட்டு செலுத்த மறுத்து வரும் பெரும் நிறுவனங் களின் பெயரைக்கூட வெளியிட மத்திய அரசு மறுக்கிறது.
இதுவரை பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதில் பெரும் பகுதி மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.
இதுவும் போதாது என்று தற்போது பொதுத் துறை வங்கிகளின் பணிகளையும் கைப்பற்றும் வேலையும் கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்று வருகிறது.
ஸ்டேட் பேங்க் நிர்வாகம் இதுவரை துப்புரவு பணியாளர்களை வைத்து சுத்தம் செய்த வேலை தற்போது தனியார் கம்பெனிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதன் விளைவு இது வரை மாதம் ரூ. 8 ஆயிரம் கொடுத்து துப்புரவுப் பணியை மேற்கொண்ட வங்கிகள், தற்போது அதே பணிக்கு ஏ 1 என்ற தனியார் நிறுவனத் திற்கு ரூ. 80 ஆயிரம் கொடுக்க வேண்டிய கட் டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி மத்திய அரசே பொதுத்துறை வங்கி களில் உள்ள மக்களின் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரப்பசிக்கு பந்தி வைத்துப் பரிமாறி வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------