இடுகைகள்

ஓசோன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓசோன் பாதுகாப்பு தினம்.....!

படம்
சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம். கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள "அடுக்கு வாயு மண்டலத்தில்' தான் ஓசோன் உள்ளது.  1840ல் ஜெர்மன் அறிஞர் பிரடரிக் ஸ்கான் பெயின் ஓசோனைக் கண்டறிந்தார்.  ஓசோனின் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம்.  இதன் அளவு குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்.16ல் கனடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் "மான்ட்ரீல் ஒப்பந்தம்' எனும் உடன்படிக்கை ஏற்பட்டது.  இதைக் குறிக்கும் வகையில், செப்.16ல் "சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. "ஓசோன் படலத்தை பாதுகாத்தல்: இதற்கான பணி தொடரும்' என்பது இந்தாண்டு இதன் மையக்கருத்து. ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு, நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் தான் காரணம். குறிப்பாக, குளோரோ புளோரோ கார்பன் (சி.எப்.சி.,) எனும் குளிரூட்டிப் பொருள் ஓசோனைச் சிதைத்து, அதன் அளவைக் குறைப்பதில் முதல் இடத்தில் உள்ளது.  ஏ.சி....