இடுகைகள்

நோய் எதிர்ப்பு சக்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மிளகு கொதிநீர்.

படம்
  பெ ரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம். அதிலும் பெரும்பாலான மக்கள் தற்போது ஆயுர்வேதம் மற்றும் இயறகை பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களை நாடிச்செல்கின்றனர். இயற்கை மருத்துவம் மட்டுமல்லாது இயற்கையாக கிடைக்கும் உணவுப்பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகினறனர். இதனை கருத்தில் கொண்டு பலரும் தங்களது தினசரி உணவு முறையில் மற்றம் செய்துள்ளனர். உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது கட்டாயம். இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருந்தாலும், அந்த உணவு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அந்த நிலையில் உள்ளவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு சிறந்த மற்றும் எளிய வழிமுறை உள்ளது. கருப்பு மிளகு தண்ணீர் ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய பானமாக உள்ளது. இந்த நீரை தயாரிக்க நீண்ட நேரம் தேவையில்லை. அதிக பொருட்களும் தேவையில்லை. வீட்டில் எளிமையாக கிடைக்கும் தண்ணீர் மற்றும் மிளகை பயன்படுத்தி எளிய முறையில் இந்த நீரை தயா...