ஊழல். காப்பீடு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளே போய் வெளியே வந்து வீட்டில் அமைதியாக இருந்தாலும் துணை கிரகங்கள் அமைச்சர்கள் தலைமையில் அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவது வெளிப்படையாகவே மக்கள் அறிந்த உண்மை. தினந்தொறும் ஒவ்வொரு ஊழல் முறைகேடுகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பணத்தாசையால் அதிகாரி [தற்]கொலை செயததால் அமைச்சர் ஒருவர் பாளை சிறையில் வாடுகிறார். இன்றைய ஊழல் பரபரப்பு செய்தி. உயிர் காக்கும் துறையையும் அதிமுக அமைச்சர் பெருமக்கள் விட்டு வைக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் புதிய தகவல். தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அரசு செயல்படுத்தும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தான் அதிநவீன முறையில் ஊழல் நடைபெற்றுகிறது. முந்தைய ஆட்சியில் காப்பீடு திட்டத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி, அதற்கு பதிலாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் கடந்த 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் உள்பட 769 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 650க்கும் மேற்பட்டவை தனி...