ஸ்பாட் பிக்சிங்
'மேட் ச் பிக்சிங் " அடிக்கடி அடிபடும் வார்த்தை. இப்போது இந்த "ஸ்பாட் பிக்சிங்' பற்றி கொஞ்சம் விபரம். புக்கிகளின் உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட வீரர், குறிப்பிட்ட ஓவரில் "நோ-பால்; வைடு அல்லது பவுன்சர்' வீசுவது, அல்லது அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பர். பேட்ஸ்மேன்கள் என்றால் சரியாக விளையாடாமல் விரைவில் அவுட்டாவது, பவுண்டரி, சிக்சர் அடிப்பது என, சூதாட்டத்தில் ஈடுபடுவர். இதில், "மேட்ச் பிக்சிங்' போல, போட்டிகளின் முடிவு நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக, ஏதாவது ஒரு ஓவரில் மட்டுமே தவறு நடக்கிறது. தங்களது செயலை செய்யும் முன், மைதானத்தில் அல்லது வேறிடத்தில் உட்கார்ந்து, தங்களை பார்த்துக் கொண்டிருக்கும் புக்கிகளுக்கு, ஏற்கனவே செய்யப்பட்ட முடிவின் படி, "சிக்னல்' கொடுக்கின்றனர்.இதற்காக, வீரர்கள் லட்சக்கணக்கில் பணம் பெறுகின்றனர். கடந்த ஆண்டு, பிரீமியர் தொடரில் சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஷ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய, ஐந்து வீரர்கள் பிடிபட்டனர். இப் போது ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் சிக்கினர். ஆறாவது தொடரில் மட்டும், 40 ஆய...