அஞ்சலை அம்மாள்.

கடலூர் முதுநகரில், 1890 ஆம் ஆண்டில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள். 1921ம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து அஞ்சலை அம்மாள் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி இவர். பெண்கள் ஒடுக்குமுறையில் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் இவர் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது. தனது குடும்ப சொத்துக்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தை இந்திய சுதந்திர போராட்டத்துக்காக செலவிட்டார். இதற்காக மகாகவி சுப்பிரமணிய பாரதியால் பாராட்டப்பட்டார். ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், சென்னை மவுண்ட் சாலையில் இருந்த ஜேம்ஸ் நீல் என்ற ஆங்கிலேயப் படைத்தளபதியின் சிலை அகற்றும் போராட்டம், காந்தியின் மது ஒழிப்புக் கொள்கைக்கு ஆதரவாகப் பொதுமக்களை திரட்டிக் கள்ளுக்கடை மறியல், 1933 சட்டமறுப்பு மறியல், அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் என தியாகி அஞ்சலை அம்மாள் பங்கேற்ற போராட்டங்களின் எண்ணிக்கை மிக நீளம். இந்த போராட்டங்களில் ஈடுபட்டதற்காக பல ஆண்டுகள் கடுங்...