இடுகைகள்

டா வின்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டா வின்சியின் சுய ஓவியம்

படம்
டா வின்சி வரைந்த இயேசுவின் கடைசி விருந்து ஓவிய மீட்கப்படவுள்ள டா வின்சியின் சுய ஓவியம் 1998ம் ஆண்டு முதல் டுரின் நகரில் இருக்கும் ராயல் லைப்ரேரியில் இருக்கும் வெப்பமும், ஈரப்பதமும் கொண்ட நிலவறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஓவியர் லியானார்டோ டா வின்சியின் ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் டா வின்சி தனது உருவத்தைத் தானே வரைந்த ஓவியம் என்று கருதப்படுகிறது. காகிதத்தில் சிகப்பு சுண்ணாம்பால் வரையப்பட்ட இந்த ஓவியம் தற்போது மங்கி வருகிறது. டா வின்சி தனது சுய உருவத்தை 1510 முதல் 1515க்குள் வரைந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளின் அழிவுக்கும் தேய்வுக்கும் ஆளான இந்த ஓவியம் வரையப்பட்ட காகிதம் பழுப்படைந்து விட்டது. இதைப் பதனப்படுத்த விரும்பும் நிபுணர்கள் ஓவியத்துக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடத் தொடங்கியுள்ளனர். பின்னர் அவருடைய அற்புதமான ஓவியத்தை மீட்பதற்கு தேவையான நுட்பத்தைத் தீர்மானிப்பார்கள் என்று என்பிசி நியூஸ் கூறுகிறது.போலந்து, இத்தாலி நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் காகிதங்களில் பழுப்பை ஏற்படுத்தும் குரோமோபோர்ஸின் அடர்த்தியை அழிவ...