கடல் தினம்
கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களையும் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 8ம் தேதி, உலக கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைவரும் இணைந்து கடலை பாதுகாப்போம்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. பூமி, ஒரு பங்கு நிலத்தாலும் மூன்று பங்கு நீராலும் சூழப்பட்டுள்ளது. பூமியில் 70 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. பூமியில் உள்ள மொத்த தண்ணீரின் அளவில், 97 சதவீதம் கடல் நீராக உள்ளது. இதனால் வானில் இருந்து பார்த்தால், பூமி ஊதா நிறத்தில் காணப்படும். உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும், ஆதாரமாக கடல் விளங்குகிறது. கடலில் இருந்து வளிமண்டலத்துக்கு தண்ணீர் பயணித்து, பின் மழையாக நிலப்பகுதியில் விழுகிறது. ஆறுகள் வழியாக சென்று மீண்டும் கடலில் கலக்கிறது. கடலால் மனிதர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கிறது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70 ----முதல் 80 சதவீதம் கடல் மூலமாக கிடைக்கிறது. நமக்குத் தேவையான குடிநீரும் கடல் மூலம் தான் கிடைக்கிறது. கடல் மூலம் அதிகமான வணிகத் தொடர்பு நடந்து வருகிறது. ...