ஆதாரம் வேண்டும்

சஞ்சார் சாத்தி மொபைல் செயலியைத் தொடங்கி வைத்தும், 'தேசிய அலைவரிசை மிஷன் 2.0' திட்டத்திற்கான கையேட்டையும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் செல்போன் டவரில் இருந்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் எழும்பூரில் உள்ள தொலைத்தொடர்பு சிறப்பு தலைமை இயக்குநர் அலுவலகத்தில் சியாம் சுந்தர் சந்தக், எம்.சந்திரசேகர், ஸ்ரீகாந்த் வேதபள்ளி ஆகியோர் இது தொடர்பான நிகழ்வில் பங்கேற்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் துணை இயக்குநர் சந்திரசேகர், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நோக்கத்துடன் ‘சஞ்சார் சாதி’ செயலி (Sanchar Saathi Mobile App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர், "செல்போன்களுக்கு வரும் போலி அழைப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலியில் பதிவுசெய்வதன் வாயிலாக, அந்த செல்போன் எண் தொடர்பான அனைத்து புகார்களும் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த செல்போன் எண்ணைத் தடைசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார். மேலும், அதேபோல் நமது பெய...