இடுகைகள்

அலைபேசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாக்களுக்கு டாஸ்மாக்-அம்மாக்களுக்கு அலைபேசி?

படம்
மகளிர் சுய உதவிக் குழுவினர்களுகெல்லாம் அம்மா அலை பேசியாம் . தமிழ் நாடு மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறது. இரண்டு நாள் முதலீட்டாளர் மாநாட்டில் 2 .5 லட்சம் கோடி முதலீடு. தமிழ் நாட்டில் மின் மிகை மாநிலமாகி மூன்று ஆண்டுகளாகி விட்டது.  பிள்ளைகளுக்கு மடிக்கணினி கொடுத்தாகி விட்டது. அம்மாக்களுக்கு  பாலூட்ட தனி இடம். இப்போது அலை  பேசி  ஏற்கனவே அப்பாக்களுக்கு டாஸ்மாக் அரசு  உற்சாகப் பானம் கொடுத்தாகி விட்டது. மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு சுழல் நிதியோ ,வங்கிக்கடனோ கொடுக்காத  அம்மா அரசு இப்போது அலைபேசி கொடுக்க காரணம்? அப்போது இல்லாத பணம் 13000கோடிகளில் அலை பேசி கொடுக்க எங்கிருந்து வருகிறது? சுய உதவிக் குழு பெண்கள் எல்லோரும் அலை பேசியில் தன்னிடம் குறைகளை உடனுக்குடன் சொல்லவா? தமிழகத்தை வாட்டும் மின் வெட்டை நீக்க  இதுவரை 100 கூட செலவிடாத ஜெயலலிதா அரசு கோடிகளில் இலவசம் கொடுக்க பணம் உள்ளது. அமைச்சர்களும்,அதிகாரிகளும் கால்கடுக்க போயஸ் தோட்டத்தில் தவம் இருந்த பின்னர் இன்டர்காம் மூலம் மட்டுமே பேசும் முதல்வரை அவர்கள் அப்படி...

அதிவேக ஸ்மார்ட் போன்கள்

படம்
ஸ்மார்ட் போன்களின் செயல்திறனைக் கணக்கிடுவதும் மதிப்பிடுவதும் சிக்கலான வேலை. ஆனால், உலகின் அதிவேகமான ஸ்மார்ட் போன் எது எனும் கேள்விக்குப் பதில் சொல்வதில் இந்தச் சிக்கல் எல்லாம் இல்லை. பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் வேகமான ஸ்மார்ட் போன்களைப் பட்டியலிட்டுள்ளனர். சும்மாயில்லை, உலகம் முழுவதும் உள்ள 4,500 ஸ்மார்ட் போன்களைப் பல்வேறு செல்போன் நெட்வொர்க்கில் பயன்படுத்திப் பார்த்து இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளனர். டவுண்லோடு வேகப்படி பார்த்தால் முதல் 10 ஸ்மார்ட் போன்கள் பட்டியலில் சாம்சங் காலெக்ஸி நோட் 3 முதலிடத்தில் உள்ளது. இதன் வேகம் 137.8Mbps. அடுத்த இடத்தில் இருப்பது சீனத் தயாரிப்பான ஒன் பிளஸ் ஒன். இதன் வேகம் 137.4Mbps. மூன்றாமிடத்தில் ஐபோன் 6 இருக்கிறது. சாம்சங் காலெக்ஸி எஸ் 4, எஸ் 5 ஆகியவை அடுத்த 2 இடங்களிலும் அதை அடுத்து எல்ஜியின் ஜி3, ஜி 2 ஆகியவையும் உள்ளன. நோக்கியா லூமியா 1520 க்கு எட்டாமிடம். பதிவேற்றும் (அப்லோட்) வேகத்தின் படி பார்த்தால் சாம்சங் காலெக்ஸி எஸ்5 முதலிடத்தில் உள்ளது. காலெக...

மூடப்படும் சர்க்கஸ் அகாடமி

படம்
சிரக்குணி சர்க்கஸ் அகாடமி இந்தியாவின் ஒரே சர்க்கஸ் அகாடமியும் மூடப்படவுள்ளது. இதை அகாடமி என்று கூறுவது கூட ஒரு நக்கல் என்று அதை நேரில் பார்த்தவர்கள் கூறுவார்கள். இதன் கூரையில் பதிக்கப்பட்டிருந்த ஓடுகள் கூட கீழே விழுந்து நொறுங்கி பலகாலம் ஆகி விட்டது. இந்த அகாடமி கண்ணூர் மாவட்டத்தில் தலசேரி அருகே சிரக்குணி எனும் ஒரு தூங்குமூஞ்சி கிராமத்தில் உள்ள ராஜ்கமல் டாக்கீஸில் இந்த அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு இப்போது ஒன்பது மாணவர்கள் தான் பயிலுகிறார்கள். அவர்களும் நேபாளம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய இடங்களில் இருந்து வந்த சர்க்கஸ் குடும்பத்து குழந்தைகள். அவர்களுக்கு பாடம் கற்பிக்க ஒரு ஆசிரியர்தான் உள்ளார். இந்த அகாடமியை மூட தீர்மானித்துள்ளனர். தலசேரியை இந்திய சர்க்கஸின் தொட்டில் என்று கூறுவார்கள். தலசேரி பிரிட்டிஷ் அரசின் எல்லைச்சாவடியாக இருந்தது. இந்தியாவில் சர்க்கஸ் முதன்முதலாக அரங்கேறியதும் இங்குதான். சர்க்கஸ் ஆர்வலர் விஷ்ணு பந்த் சாட்ரே என்பவரால் 1880ம் ஆண்டு பிரபல கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிறுவப்பட்டது. அது தலசேரிக்கு வந்தது. இந்திய சர்க்கஸின் முன்னோடியான இவர் உள்ளூர் பேசல...

சாம்சங் -மோட்டோரோலா

படம்
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்வெளியிட்ட, "கேலக்ஸி' வரிசை  ஸ்மார்ட் போன்களின் விற்பனை,இப்போது  ஒரு கோடியை தாண்டியுள்ளது. இந்நிறுவனம், கடந்த, 2010ம் ஆண்டு ஜூன் மாதம், முதன் முதலாக, "கேலக்ஸி' வரிசையில் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, "கேலக்ஸி எஸ்', "கேலக்ஸி எஸ் 2' மற்றும் "எஸ் 3', "கேலக்ஸி நோட்', "கேலக்ஸி நோட் 2', "கேலக்ஸி ஒய்' உட்பட, 13 வகையான ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிறுவனத்தின் அலைபேசி சாதனங்கள் விற்பனையில், "கேலக்ஸி' பிரிவின் பங்களிப்பு, 50 சதவீதமாக உள்ளது. 2012 ஜனவரி முதல், ஜூன் வரையிலான அரையாண்டில்இந்தியாவில்   10.24 கோடி அலைபேசி சாதனங்கள் விற்பனையாகி உள்ளன.  ஸ்மார்ட் போன்வகைகள்  விற்பனை 55 லட்சம்ஆகும் .  சாம்சங் 41.6%,  நோக்கியா 19.2 %,ரிம் 12.1% ஆக விற்பனை விகிதம் உள்ளது . இப்படி அலை பேசிகள் விற்பனை இருக்கும் போது இந்த அலைபேசி துறையில் முதலிலேயே கால் பதித்த  மோட் டரொலோ  நிறுவனமோ தனது சென்னை தயாரிப்பை கட்டுபடியாகாமல் மூடுகிறது . ம...