அரக்கான்
மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் அமைக்கப்பட்ட ஆங்சாங் சூகி தலைமையிலான ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிநாடு கோரியும் மியான்மரில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழு உருவானது. இந்த குழுக்கள் தொடர்ந்து ராணுவத்திற்கு எதிராக போராடி வருகிறது. தொடர்ந்து ராணுவத்தை வீழ்த்தி அரக்கான் ஆர்மி உட்பட கிளர்ச்சியாளர்கள் குழு முன்னேறி வருகிறது. குறிப்பாக வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மியாமரின் பகுதிகள் அரக்கான் ஆர்மியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனால் வங்கதேசத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரக்கான் ஆர்மியின் கட்டுப்பாட்டில் உள்ள மியன்மாருடனான டெக்னாஃப் எல்லைப் பகுதியை வங்கதேசத்தின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மியான்மரின் அரக்கான் மாநிலத்தின் கணிசமான பகுதிகளை அரக்கான் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த சிக்கலான சூழ்நிலையில், வங்கதேசம், மியான்மர் ஜுண்டா அரசாங்கம் மற்றும் அரக்கான் இராணுவம் ஆகிய இரண்டுடனும...