அரக்கான்
மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் அமைக்கப்பட்ட ஆங்சாங் சூகி தலைமையிலான ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிநாடு கோரியும் மியான்மரில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழு உருவானது. இந்த குழுக்கள் தொடர்ந்து ராணுவத்திற்கு எதிராக போராடி வருகிறது.
தொடர்ந்து ராணுவத்தை வீழ்த்தி அரக்கான் ஆர்மி உட்பட கிளர்ச்சியாளர்கள் குழு முன்னேறி வருகிறது. குறிப்பாக வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மியாமரின் பகுதிகள் அரக்கான் ஆர்மியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனால் வங்கதேசத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரக்கான் ஆர்மியின் கட்டுப்பாட்டில் உள்ள மியன்மாருடனான டெக்னாஃப் எல்லைப் பகுதியை வங்கதேசத்தின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி பார்வையிட்டார்.
செ ன்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஜனவரி 18) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 7 சென்டிமீட்டரும், காக்காச்சி (திருநெல்வேலி) 5 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
ஜனவரி 19 - கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.ஜனவரி 20 - தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, ஜனவரி 21 மற்றும் 22 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், ஜனவரி 23 ஆம் தேதிவ் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை
இன்று (ஜனவரி 17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (ஜனவரி 18): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள் - இன்று முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரையில், தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள் - இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரையில் அரபிக்கடல் பகுதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்," இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.