மாணவர் போராட்டத்தால் மட்டுமே
“1970ல் கேரளாவில் இந்திய மாணவர் சங்கத்தின் முதல் அகில இந்திய மாநாடு நடை பெற இருந்தது. அந்த மாநாட் டிற்கு செல்ல மேற்கு வங்கத்திலி ருந்து ரயில் மூலம் பிரதிநிதிகள் சென்னைக்கு வந்து, பிறகு கேரள செல்ல திட்டமிட்டிருந்த னர். அச்சமயம் மேற்குவங்கத் தில் இருந்து வந்த ரயில் கால தாமதமானது. கேரளாவிற்குச் செல்ல வேண்டிய ரயில் எழும்பூ ரில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. ரயில் நிலைய மேலா ளரிடம் 30நிமிடம் காலதாமத மாக ரயிலை இயக்குமாறு கோரினோம். அவர் மறுத்தார். இதனால் ரயில் மறியல் செய் தோம். எங்கள் மீது ரயில்வே போலீசார் தடியடி நடத்தினர். அந்த தடியடியில் கால் உடைந்து போனவர்தான் தற்போதைய திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக்சர்க்கார். இந்திய மாணவர் சங்கத் தின் முதல் 4 மாநாடுகளில் பிரதி நிதியாக கலந்து கொண்டேன். மாணவர் அமைப்பில் ஈடுபட்ட போது கிடைத்த சமூகப் புரிதல் தான் எனது எதிர்காலத்தை வழி நடத்த உதவியது. 1970களில் வேலையில்லாத் திண்டாட்டம் இருந்தது. இத னால் மாணவர் சங்கம் சென் னை பல்கலைக் கழக பட்ட மளிப்பு விழாவின் போது, ‘படித் தோருக்கு வேலை இல்லை; பட் டமளிப்பு...