ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு
ரஜினிக்கு, ரஜினி ரசிகன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் துரை எழுதுவது தங்களோடு நேரில் பேசிப் பழகியவன் என்ற முறையில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்! வீட்டில், படப்பிடிப்பில் விழாக்களில், எப்போதுமே தாங்கள் பதற்றம் நிறைந்தவராகவே காணப்பட்டீர்கள். கொடி பறக்குது, படப்பிடிப்பின் போது வெள்ளை பேண்ட்டில் இருந்து, காக்கி பேண்ட்டிற்கு மாறியபடி என்னிடத்தில் பேசினீர்கள். அந்த எளிமை எனக்கு பிடித்திருந்தது. "ரஜினி ரசிகன்" பத்திரிகை ஆசிரியர் துரை தங்களது இமேஜை காப்பாற்றி கொள்ளக்கூட பொய் சொல்லத் தெரியாதவர்கள் நீங்கள். என்னை பொறுத்தவரை அடிப்படையிலேயே ‘யூவார் எ டிஸ்டர்ப்டு சைல்டு’ எப்போதுமே பதற்றம் நிறைந்தது. தங்கள் நடவடிக்கை என்பது எனது பார்வை. தவிர்க்கவே முடியாமல் எம்.ஜி.ஆரை குறித்து சில விஷயங்களை பேசியாக வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே வறுமை, பசி, பட்டினியை அறிந்தவர் கஷ்டமறிந்து பலருக்கு உதவியவர். தனது 20 வயதிற்குள்ளாகவே அரசியல் குறித்து அவருக்கு ஒரு கனவு இருந்தது. அதற்காக திட்டமிட்டு கட்சியில் இணைந்தார். தனது படங்களில் வசனங்களில் பாடல்களில் கட்சி கொள்கையை பரப்பினார் அவரது...