பாழான பால்!
அமைச்சரே அந்த பால்தயாரிப்புநிறுவனங்கள் நெஸ்லே,ரிலையன்ஸ் என்று அதிகாரப்பூர்வமாகக் கூறி விட்டார். ஆனால் தினமணி போன்ற அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் நெஸ்லே,ரிலையன்ஸ் என்று அவற்றின் பெயர்களை கூற என் தயங்குகிறது.பெயர்களை எழுதினால்தான் பொது மக்கள் அவற்றை வாங்கி உடல் நலம் கெடுவதை தவிர்ப்பார்கள். தினமணிக்கு காசு கொடுத்து தனது பத்திரிகையை வாங்கும் வாசகர், மக்கள் நலனை விட நெஸ்லே,ரிலையன்ஸ் தரும் விளம்பரக் காசுதான் மேல் என்பதை காட்டி விட்டதே.இதில் நேர் கொண்ட நடை,யாருக்கும் அஞ்சாத ....வாசகங்கள் வேறு. இவைகள் தரும் செய்திகள் உண்மை என்று நம்பி வரும் வாசகர்களுக்கு இந்த ஊடகங்கள் தரும் உண்மை செய்திகளின் லட்சணம் இவைதான். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடுத்த பேட்டிதான் இந்த குமுறலுக்கு காரணம். ''தனியார் பால் பவுடரில், 'காஸ்டிக் சோடா' கலந்திருப்பது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. பாலில் கலப்படம் உள்ளதாக கூறியதால், எனக்கு மிரட்டல்கள் வருகின்றன,' ' 'நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ்' நிறுவனங்களின் பால் பவுடரில், ' காஸ்டிக் சோடா, பிளிச்சிங் பவுடர் ...