பாழான பால்!

அமைச்சரே அந்த பால்தயாரிப்புநிறுவனங்கள் நெஸ்லே,ரிலையன்ஸ் என்று அதிகாரப்பூர்வமாகக் கூறி விட்டார்.

ஆனால் தினமணி போன்ற அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் நெஸ்லே,ரிலையன்ஸ் என்று அவற்றின் பெயர்களை கூற என் தயங்குகிறது.பெயர்களை எழுதினால்தான் பொது மக்கள் அவற்றை வாங்கி உடல் நலம் கெடுவதை தவிர்ப்பார்கள்.

தினமணிக்கு காசு கொடுத்து தனது பத்திரிகையை வாங்கும் வாசகர், மக்கள் நலனை விட நெஸ்லே,ரிலையன்ஸ் தரும் விளம்பரக் காசுதான் மேல் என்பதை காட்டி விட்டதே.இதில் நேர் கொண்ட நடை,யாருக்கும் அஞ்சாத ....வாசகங்கள் வேறு.



இவைகள் தரும் செய்திகள் உண்மை என்று நம்பி வரும் வாசகர்களுக்கு இந்த ஊடகங்கள் தரும் உண்மை செய்திகளின் லட்சணம் இவைதான்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடுத்த பேட்டிதான் இந்த குமுறலுக்கு காரணம்.

''தனியார் பால் பவுடரில், 'காஸ்டிக் சோடா' கலந்திருப்பது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. பாலில் கலப்படம் உள்ளதாக கூறியதால், எனக்கு மிரட்டல்கள் வருகின்றன,'''நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ்' நிறுவனங்களின் பால் பவுடரில், 'காஸ்டிக் சோடா, பிளிச்சிங் பவுடர்' கலந்திருப்பதாக, சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன  . 

பத்திரிகை குழுமம் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில், சோதனை செய்த போது, இந்த முடிவு வந்துள்ளது.

அமிலம் அதிகமாகி, கெட்டுப்போன பாலில், அமிலத் தன்மையை குறைப்பதற்காக, காஸ்டிக் சோடா சேர்க்கின்றனர். அமிலத் தன்மை குறைந்ததும், பாலாக்காமல் பால் பவுடராக்குகின்றனர். "என்று குமுறி யுள்ளார் .

நெஸ்லே,ரிலையன்ஸ் பெரிய உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் தயாரிப்பு என்ற நம்பிக்கையில்  மக்கள் வாங்கி, சுடுதண்ணீரில் கலந்து பாலாக்கி  குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். 

அந்த நம்பிக்கையை இந்த கலப்படம் பாழாக்கி மக்கள் நலனை,குறிப்பாக குழந்தைகள் நலனை கெடுக்கிறது.


இதை குடித்தால்  ஊட்டம் உண்டாகாது பலகீனமானவர்களுக்கு  வயிற்றுப்போக்கு, காலரா  போன்றவைதான்  ஏற்படும்.சற்று ஆரோக்கியமானவர்களுக்கு இந்த பால் தயாரிப்புகள் சிறுக,சிறுக உடல் நலத்தை கெடுக்கும்.

இதனை தடுக்க தமிழக அரசு என்ன செய்கிறது?முதல்வரிடம் இதனை முன்பே தெரிவித்தும் அவர் டெல்லி பதிலுக்காக காத்திருந்து வாயை திறக்காததால் பால் வளத்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களை கூட்டி செய்தியை வெளியிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட நெஸ்லே ,ரிலையன்ஸ் என்ற இரு நிறுவனங்களுமே பன்னாட்டு பணம் கொழிக்கும் நிறுவனங்கள்.

ஆனால் அரசு விதிகளை மீறுவது மக்கள்,சமூக விரோத போக்குகளை செய்வதிலும் இரண்டுமே பெயர் பெற்றவை.


நெஸ்லே கலப்படம் ,விதிமுறைகள் மீறல்,ரசாயன பொருட்கள் கலப்பு என்ற குற்றங்களை ஏற்கனவே தனது தயாரிப்புகளால் மக்களிடம் கெட்டபெயர் சம்பாதித்தவைதான்.ஆனால் இந்திய அரசு ஆதரவு ,விளம்பரங்களுக்கு கோடிகளை அள்ளி  வீசுவதன் மூலம் ஊடகங்களில் தனது கெட்ட  பெயர் அடிபடாமல் பார்த்துக்கொண்டது.

ரிலையன்ஸ் பற்றி சொல்ல வே வேண்டாம் .அதன் செயல்பாடுகள் எல்லாமே சட்டவிரோத அத்து மீறல்கள்தான்.அம்பானி,அதாணிகள் கையில்தான் இன்றைய பாஜக அரசே.

இதை சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால், அவர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு. வாய்ப்புண்டு என்ன அரசு மூலமாகவும்,நீதிமன்றம் மூலமாகவும் அவர்கள் புனிதர்களாக தப்பிப்பார்கள்.

மேலும் அமைச்சரே சொல்லியுள்ளார்.குற்றசாட்டுகள்,ஆய்வுக்குப்பின்னர் கலப்படம் செய்வதை நிறுத்தி விட்டனர்.அதற்கு நல்ல உதாரணம் நெஸ்லே எவ்ரிடே ,ரிலையன்ஸ் பால் பொருட்கள் விநியோகம் தற்போது மிகக்குறைவு.காரணம் கெட்டுப்போன பாலை உபயோகிக்காததுதான்.

ஆனால் இதற்கு மேல் என்ன நடக்கும்?


ஒன்றும் இராது.கொஞ்ச நாள் இதைப்பற்றி புலம்பி விட்டு மக்கள் இதையேதான் வாங்க வேண்டும்.
அதுதான் நெஸ்லே,பதஞ்சலி ,மேகி ,கோககோலா விவகாரங்களிலும் அரசு ,நீதி மன்றங்கள் மூலம் நாம் கண்ட உண்மை.
நிலத்தடி நீரின்றி குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மனிதர்கள் செத்தாலும்  கோககோள வுக்கு தண்ணிர் உறிஞ்ச தடை கிடையாது.மனிதர்கள்  உடல்நலம் கெட்டு செத்தாலும் ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு தடை இல்லை.

மழையே பெய்யாவிட்டாலும் ஸ்டெர்லை ரசாயனக்கழிவுகட்ட சுத்திகரிக்காமல் இருந்தால் நடவடிக்கை ஏதும் இல்லை.தடை.
டாஸ்மாக்,பான்பராக் எல்லாம் கண்  துடைப்பு தடைகள் பிடிபட்டால் விடுதலை.
மீத்தேன் எடுக்க தட்டி இல்லை.அதற்காக விவசாய நிலங்களை கைப்பற்றவும் தடை இல்லை.
ஆனால் கெல்மட் வைக்காவிட்டால் சிறை.குடித்து விட்டு ஆடினால் தண்டனை.

போக்குவரத்து தொழிலாளர்கள் சேமிப்புப்பணத்தை சூறையாட தடை இல்லை.அதை திரும்பி தொழிலாளர்களுக்கு கொடுக்க சொல்ல எண்ணம் இல்லை.சாப்பாட்டுக்கு வழி யின்றி அந்தப்பணத்தை கேட்டுப்போராடினால் மட்டும் எஸ்மாவில் நடவடிக்கை எடுக்க ஆணை.

நாம் வசிப்பது நமக்கான நாடு இல்லை.
நமக்கான சட்டத் திட்டங்களும் இல்லை.
மொத்தத்தில் இது மக்களுக்கான அரசு இல்லை.
பின்னே அமைச்சர் பாலில் கலப்படம் என்று சொல்லி ஆதாரம் காண்பித்தும் அவர் கடசியின் செய்தி தொடர்பாளரே அந்த கலப்பட பால் நிறுவனங்களுக்கு தைரியமாக மானங்கெட்டுப்போய் வக்காலத்து வாங்கி உண்மையை  சொன்ன அமைச்சரையே மிரட்டுகிறாரே?
==========================================================================================
ன்று,
ஜூன்-28.
  • ஐரிய உள்நாட்டு போர் ஆரம்பமானது(1922)
  •  ஆப்ரிக்க அமெரிக்க ஒன்றியத்தை மால்க்கம் எக்ஸ் ஆரம்பித்தார்(1964)
  • கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)
==========================================================================================
கழனியூரன்
 நாட்டுப்புறவியல் எழுத்தாளர் கழனியூரன், சென்னையில் இன்று காலமானார்.
 உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கழனியூரன், சிகிச்சை பலினின்றி இறந்தார். இறுதி  வரை எழுதி வந்த இவருக்கு தற்போது வயது 63 ஆகிறது.
பள்ளி ஆசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கழனியூரனின்  இயற்பெயர் எம்.எஸ்.அப்துல்காதர். 
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 
திருநெல்வேலி மாவட்டத்தின் நாட்டார் வழக்காறுகள், நாட்டுப்புறக் கதைகள் என தொகுத்து 40-க்கும் அதிகமான நூல்களாக கொண்டுவந்துள்ளார்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், நல்லாசிரியர் விருதுபெற்றவர். அந்தப் பெருமைகளை விடவும் தமிழ் எழுத்துலகுக்கு அவர் அளித்த பங்களிப்பு மகத்தானது. கரிசல்காட்டு எழுத்தாளரான கி.ராஜநாராயணன் உடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாகத் தன்னையும் நாட்டார் வழக்காற்றுத் துறையில் ஈடுபடுத்திக்கொண்டதுடன், கழனியூரன் என்கிற பெயரில் எழுதத் தொடங்கினார்.
நெல்லை மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று நாட்டார் வழக்காறுகள், நாட்டுப்புறக் கதைகள் என அனைத்தையும் தொகுத்து 40-க்கும் அதிகமான புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். 
"கழனியூரன்' என்ற பெயரில் வலைப்பூ ஒன்றையும் நடத்தி வந்தார்.
’கதை சொல்லியின் கதை’, ’நெல்லை நாடோடிக் கதைகள்’, ’மண் மணக்கும் மனுஷங்க’, ’செவக்காட்டு மக்கள் கதைகள்’,  `நடை வண்டி’, `காட்டுப் பூவின் வாசம்’, ’நாட்டுப்புற நம்பிக்கைகள்’ எனப் பல நூல்களை எழுதி உள்ளார். இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக கழனியூரன் காலமானார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு நெல்லை மாவட்டம் கழுநீர்குளத்தில் நடைபெற உள்ளது.
==========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?