தனிமனிதம் தனித்துவம்

தனிமனித தனித்துவம்(சுதந்திரம்) குறித்த அழுத்தமான கருத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அமர்வின் முன் வந்த ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பில், ‘‘தனிநபரின் சுதந்திரமானது மதிப்பு மிக்கதும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள தவிர்க்க இயலாத உரிமையும் ஆகும். அந்தச் சுதந்திரம் பறிக்கப்படும் போது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பொறுப்பையும் கடமையையும் உச்சநீதிமன்றம் தவறாமல் நிறை வேற்றும். அவ்வாறான பிரச்சினைகளில் நீதிமன்றங்கள் தலையிடவில்லை என்றால் குரல் நசுக்கப்பட்டு சுதந்திரம் பறிக்கப்படும். தனிமனிதசுதந்திரத்தைக் காக்க வேண்டும் என்பது அரசமைப்புச் சட்டத்தின் 136 ஆவது பிரிவால் உச்சநீதி மன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புணர்வு ஆகும். அவ்வாறான வழக்குகளில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்வு வழங்கவில்லை என்றால் நாங்கள் இங்கு இருப்பதற்கே பொருள் ...