பிளாஸ்டிக் அரிசி வதந்தியா
நேற்று பிளாஸ்டிக் அரசி பற்றிய இடுகையை படித்திருப்பீர்கள். நமக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் அப்படி ஒரு இடுகை இயல்பான சமூக எதிர்ப்பில் பதிவிட்டோம். இப்போது அதே பிளாஸ்டிக் அரிசியை பற்றி மாற்று தளத்தில் ஒரு மாறுபட்ட கருத்துடன் கட்டுரை வெளியாகியுள்ளது. அது பிளாஸ்டிக் அரிசி என்பதே போய் புனைவு என்கிறது. மரவள்ளி,சர்க்கரை வெள்ளைக் கிழங்குகளினால் தயாரிக்கப்பட்ட வியட்நாமிய உணவுப் பொருள் தான் இன்று பல்வேறு வடிவங்களில் பிளாஸ்டிக் என்ற பெயர் கொண்டு உலகை பயமுறுத்துகிறது என்கிறது அக்கட்டுரை. பிளாஸ்டிக் அரிசியின் ஒரு பக்கத்தை பார்த்த நாம் இப்போது அதன் வரலாறாகக் கூறப்படும் இப்பக்கத்தையும் பார்த்து விடுவோம். ஆனால் உண்மையில் இது பிளாஸ்டிக் அரிசியின் உண்மையான மறுபக்கமா என்பதில் எந்த உறுதியும் இல்லை. காரணம் உலக கார்ப்பரேட்கள் தங்கள் லாபத்துக்காக எந்த அளவும் செல்வார்கள்.அவர்களுக்கு லாபம் எள்ளளவும் குறைந்து விடாமல் நாம அரசியல்வியாதிகள் பார்த்துக்கொள்வார்கள் என்பது நாம் உணர்ந்த கண் கூடான மெய். மக்கள் குடங்களை தூக்கிக்கொண்டு குடிநீருக்கு மைல் கணக்கில் அலைந்து 20 ரூபாய்க்கு ஒரு ...