வியாழன், 17 நவம்பர், 2016

மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்

ஒட்டு மொத்த  பணக்காரர்கள் அல்லாத மக்களனைவரையும்  வங்கி வாசலில் காத்திருக்க வைத்தது போதாது என்று கரும் புள்ளி,குத்தி அனுப்பி வைத்த மோடியின் செயல் எழுப்பும் அதிர்வுகள்,மோசமான விளைவுகள் விலக குறைந்தது மூன்று மாசமாவது ஆகும்.

காரணம் இந்த மோடி தலைமையிலான ஆட்சியாளர்கள்,பொருளாதார நிபுணர்களின்(?) குளறுபடிகள்தான்.

1,ஆறு மாத ஆலோசனையில் என்ன ஆலோசிக்கப்பட்டது?தடையினால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றா?பண முதலைகளும் மோடி நண்பர்களுமானவர்கள் பாதிக்கபபடக் கூடாது என்றா?

2, தடை செய்யப்படப் போவது 500,1000 தாள்கள்.ஆனால் அதை அச்சிட்டாமல் 2000 தாட்களை அச்சிட உத்திரவிட்டது எந்த பொருளாதர நிபுணர். அம்பானி,அதானிக்கு 1000 தாட்களை விட 2000 தாட்களை பதுக்குவது வசதி என்பதுதானே இதன் மூலக் காரணம்?

3,ஏடிஎம் களில் வைக்க முடியா அளவில் வடிவமைத்தது கூட பரவாயில்லை.அதை வைக்க ஏடிஎம்களை,மென்பொருளை தயார் நிலையில் வைக்காதது ஏன்?

4,தடை அறிவிக்கும் முன்னர் வங்கிகளில் புதிய பணத்தை தயாரக வைக்க வேண்டும் என்ற அடிப்படை ,கூட தெரியாதவர்களதான், பொது அறிவு இல்லாதவர்கள்தான் ஆட்சியாளர்கள்,அதிகாரிகளாக இருக்கிறார்களா?

அடுத்த நாட்டுக்காரன் பார்த்தா இந்தியாவை பற்றி என்ன நினைப்பான்.

5,ஒரு பொறுப்பான பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி இவ்வளவு பெரிய,மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் தடையை அறிவிக்கும் முன்னர் இதை எல்லாம் கேட்டு தெரிந்து ஆலோசித்திருக்க வேண்டாமா? மேலும் எடுத்தவுடனே இனி 500,1000 செல்லாது.

அவை வெறும் தாள்கள்.குப்பை காகிதங்கள் என்று பொறுப்பின்றி சொல்லலாமா?

அதனால் உடனே 6 பேர்கள் மாரடைப்பிலும்,இதுவரை 32 பேர்கள் இறந்திருக்கிறார்கள்.இதெல்லாம் உங்கள் சர்ஜிக்கள் ஸ்டரைக்  கொலை கனக்கில்தான் சேரும்.

தடையினால் உண்டாகும் நிலமையை முன்கூட்டியே திட்டமிடாததால் தினசரி ஒரு அறிவிப்பு.கடைசியில் மைவைப்பதுவரை வந்து விட்டது.முதலில் 4000.பின் படிப்படியாக பணம் மாற்றும் தொகை கூடும் என்று கூறிவிட்டு தற்போது 4000ம் ,2000மாக குறைக்கப்படடுள்ளது.

சாமான்யனிடம் கூட திருமணம்,விவசாயம் என்கிறபோது கடன் வாங்கிய பணம் பல லட்சங்களில் இருக்கும் என்பது 10 லட்சத்தில் சட்டை போடும் பிரதமருக்கு தெரிந்திருக்க வேண்டாமா.அவன் பணத்தை அவன் எடுக்க அவன் மீது கரும்புள்ளை,செம்புள்ளி குத்துவது ஒரு நல்ல,மக்கள் அரசுக்கு அவாமானமில்லையா?

இது நம் நாட்டையே உலக அளவில் தலை குனிய வைக்கும் என்பது தெரியாதா.இதுதான் மோடி,பாஜக,ஆர்.எஸ்.எஸ் ஆட்சி முறையா?

தற்போதைய பணமுடக்கம் விவகாரத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கப்போகிற மத்திய அரசு தனது பட்ஜட் கூட்டத்தொடரை ஜனவரி மாதமே ஆரம்பிக்கும் என்றும் பிப்ரவரி 1ம் தேதியே பட்ஜட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பது பலவித சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

வழக்கம் போல வழ,வழ  பட்ஜட்டாக இல்லாமல் மோடி,அருணஜெட்லீ கொண்டுவரப்போகும் இப்  பட்ஜட் கடுமையான பட்ஜட்டாக இருக்கப்போகிறது என்ற எண்ணம் பொதுவாக உண்டாகியுள்ளது.

ஏற்கனவே நொந்து போயுள்ள பொதுமக்கள்  இந்த பட்ஜட்டில் மேலும்  பிழிந்து எடுக்கப்பட்டு நோக வைக்கப்படுவார்கள் .
அதற்கு இந்தியா வல்லரசாகிறது,ஜெய்ஹிந்த் என்று கரணம் சொல்லப்படும்.

வழமை போல் நடுத்தட்டு மக்களுக்கு மேலானவர்கள் மேன் மேலும் உயரவும்,நடுத்தட்டு வர்க்கம் கீழே போய் ஏழைகளாக்கக்ப்படுவதும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா இனி ஏழை,பணக்காரன் என்ற இரு தட்டுதான் நடுத்தர வர்க்கம் இனி இராது.என்று  ஒரு மெல்லிய அச்சுறுத்தல் உருவாகி  இருக்கிறது.

மோடி க்கு முந்தைய பாஜக அரசு வாஜ்பேயினால் இயக்கப்பட்டது.அப்போது பொது மக்கள் நலன் கண்காணிக்கப்பட்டது.
அதற்கு அது கூட்டணி கட்சிகளால் தாங்கப்பட்டது காரணம் ஆகும்.

ஆனால் இன்றைய மோடி அரசுக்கு போதிய பெரும்பான்மை இருக்கிறது.மேல் சபையிலும் ஆட்களைஅவரவர் சொந்த தேவைகளை பூர்த்தி செய்து அதிமுக போன்றவர்களை  கையில் வைத்துள்ளது.
எனவே மோடியின் வெறியாட்டம் தவிர்க்க முடியாது.கடிவாளம் கைநழுவி விட்டது.

இதன் மூலம் இந்திய மக்கள் இரண்டு பாடம் பிடித்துக்கொள்ள வேண்டும்.

1,இனி எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கொடுக்கக் கூடாது.கூட்டணி ஆடசி இருந்தால்தான் பொது மக்கள் கொஞ்சமாவது பலன்களை பேர் முடியும்.

2,இனி எந்த கிறுக்கனை தேர்ந்தெடுத்தாலும் மோடி யையோ ,அவரை முன்னிறுத்தும் கட்சியையோ காப்புத்தொகையை இழக்கும் அளவு மரண அடி தோல்வியை தர வேண்டும்.

#மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்#

=====================================================================================
ன்று,
நவம்பர்-17.
சூயஸ் கால்வாய் 


  • உலக  மாணவர் தினம்.
  • எக்குவேடார் மற்றும் வெனிசுவேலா ஆகியன கொலம்பியாவில் இருந்து பிரிந்தன(1831)
  • எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது(1869)
  • புடாபெஸ்ட் நகரம், ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது(1873)
  • டக்லஸ் யங்கெல்பர்ட் முதலாவது கணினி மவுஸ்க்கான காப்புரிமம் பெற்றார்(1970)
  • =====================================================================================
. “ ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் துன் புறுத்தப் படுவதாக முதலைக் கண்ணீர் வடிக்கும் இந்தியாதான்  மாட்டுக் கறி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது .”


. “ தங்க முலாம் பூசப்படும் முக் கோண (கிரானைட்) கற்களை வச்சா தான் பிரமிடு கட்டு மானம் நிறைவு பெறும் என்று எண்ணினார்கள் .” 


. “ சிலந்திகள் ஒரே மாதிரி கூடு கட்டுவதில்லை.மனிதர்களின் கைரேகைகள் ஒருவருக்கு ஒருவர் மாறு படுவதைப் போல! சிலந்தி வலையும் கூட்டிற்கு கூடு மாறுபடும்!  .” 


 “ 1963ல இன்னும் 2வருசத்துல ஸ்டீபன் ஹாக்கிங் இறந்து விடுவார் என்றனர் மருத்துவர்கள் ஆனால்  அவர்  51வருடங்கள் கூடுதலாக  வாழ்ந்து வருகிறார்,காரணம் அவரின்  மன உறுதி.ஸ்டீபன் ஹாக்கிங் கடவுள்  நம்பிக்கையற்றவர்.
. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கல்வி கடன் தள்ளுபடி கிடையாது,கறுப்புப்பணம் பறிமுதல் கிடையாது,கடன் வாங்கிய பணக்காரன் சொத்துக்கள் பறி முதல் கிடையாது,வாங்கிய கடனை திருப்பி தராமல் டிமிக்கி கொடுத்தவன் கைது செய்யப்படாமல் கடன் தள்ளுபடி.
இங்கு 500,1000 இரண்டு தாள் வைத்திருந்தவன் பணம்  செல்லாது.மாற்ற வந்தால் கரும்புள்ளி குத்தி அனுப்புகிறான்.
#மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்.#