யோகாதான்.
மேகி நூடுல்சில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளுட்டாமேட் ரசாயன பொருள் அதிகம் பயன்படுத்தி விவகாரத்தை தொடர்ந்து, இந்தியாவில் இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேகி நூடுல்ஸ் மட்டுமின்றி அனைத்து பாக்கெட் உணவுகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நொறுக்குத்தீனிகள் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கின்றன. அதிலும், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் உடல் பருமன் பிரச்னையை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்னைகளுக்கு ஆளாகும் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் வேண்டாத நோய்களை வரவேற்கும் வாயிலாக தங்கள் உடலை ஆக்கி விடுகின்றனர். இதுதொடர்பான வழக்கு ஒன்றில் டெல்லி உயர் நீதிமன்றம் பள்ளிக் குழந்தைகள் விரும்பி உண்ணும் நொறுக்கு தீனிகளில், உப்பு, சர்க்கரை, கொழுப்பு அளவு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதன்படி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) உணவு பொருட்களில் இருக்கும் கொழுப்பு அளவு குறித்து ஆராய உள்ளது....