ஞாயிறு, 21 ஜூன், 2015

யோகாதான்.

மேகி நூடுல்சில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளுட்டாமேட் ரசாயன பொருள் அதிகம் பயன்படுத்தி விவகாரத்தை தொடர்ந்து, இந்தியாவில் இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 
மேகி நூடுல்ஸ் மட்டுமின்றி அனைத்து பாக்கெட் உணவுகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நொறுக்குத்தீனிகள் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கின்றன. அதிலும், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் உடல் பருமன் பிரச்னையை ஏற்படுத்துகிறது. 
இந்த பிரச்னைகளுக்கு ஆளாகும் குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் வேண்டாத நோய்களை வரவேற்கும் வாயிலாக தங்கள் உடலை ஆக்கி விடுகின்றனர். 
 இதுதொடர்பான வழக்கு ஒன்றில் டெல்லி உயர் நீதிமன்றம் பள்ளிக் குழந்தைகள் விரும்பி உண்ணும் நொறுக்கு தீனிகளில், உப்பு, சர்க்கரை, கொழுப்பு அளவு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) உணவு பொருட்களில் இருக்கும் கொழுப்பு அளவு குறித்து ஆராய உள்ளது. 
அனைத்து இந்திய உணவு தயாரிப்புகளிலும் இடம்பெற வேண்டிய உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் வெளியிட உள்ளது.  
இதுகுறித்து எப்எஸ்எஸ்ஏஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது: நொறுக்குத்தீனிகளில் பொதுவாகவே கொழுப்புச்சந்து அதிகம் உள்ளது. உப்பு, சர்க்கரையும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவதற்கு முன்பு, இவை குறித்து நன்கு ஆராய வேண்டும்.
 இதற்காக நிபுணர் குழுவை அமைக்க வேண்டியது அவசியம். அவர்கள் மூலமாகத்தான் நொறுக்கு தீனிகளில் உள்ள சேர்க்கைகள் விகிதத்தை துல்லியமாக அறிய முடியும். 
எனவே, 11 உறுப்பினர்கள் கொண்ட குழு விரைவில் அமைக்கப்படும். 
இதில், டாக்டர்கள், உணவு கட்டுப்பாடு நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸ், ராம் மனோகர் லோகியா மருத்துவனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிறுவனங்களில் உள்ளவர்கள் இடம்பெறுவார்கள். 

இவர்கள், பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், ஓட்டல்கள், கேட்டரிங் நடத்துபவர்கள் என அனைத்தையும் ஆராய்வார்கள். 
இதில் பயன்படுத்தப்படும் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அளவை கண்டறிவார்கள். உடல் நலக்கேடு ஏற்படாத வகையில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அளவுகள் அதிகபட்சமாக இவ்வளவுதான் இடம்பெற வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். 
இவ்வாறு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரி தெரிவித்தார். எனவே, அதிகமாக கொழுப்பு, சர்க்கரை, உப்பு உள்ள உணவு தயாரிப்பு களுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது.

உணவுப்பொருட்களில் உள்ள அதிக கொழுப்பு, கார்போஹைட்ரேட், சர்க்கரை ஆகியவை இருதய நோய்களுக்கு வழி வகுக்கும்.
 உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கும் இதுவே காரணமாகி விடுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளும் நொறுக்குத்தீனிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகின்றன. எப்எஸ்எஸ்ஏஐ மட்டுமின்றி நொறுக்குத்தீனிகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகமும் தனியாக நெறிமுறைகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.
========================================================================
இன்று,
ஜூன்-21.
  • உலக  யோகா தினம்
  • உலக  இசை தினம்
  • உலக மனிதநேய தினம்
  • க்ரீன்லாந்து தேசிய தினம்
  • ஆப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் ஐபுக்கினை வெளியிட்டது(1999)

========================================================================
""'உயிரினங்கள் பெரிய அளவில் அழியும் ஒரு காலகட்டம் பூமியில் உருவாகி வருகிறது என்றும், இந்த காலகட்டத்தில் மனித இனமும் அழியும் வாய்ப்பு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்'.
விலங்கினங்கள் அதிர்ச்சியளிக்கும் அதிக வேகத்தில் அழிந்துவருவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
மனிதத் தலையீடு இல்லாமல் சாதாரணமாக விலங்கினங்கள் அழியும் வேகத்தோடு ஒப்பிடுகையில், தற்போது நூறு மடங்கு அதிக வேகத்தில் உயிரினங்கள் அழிந்துவருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
விலங்கினங்களுடைய வாழ்விடங்கள் மாறிப்போவதும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும், காலநிலை மாற்றமும் இந்த அழிவிற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இத்தனை உயிரினங்கள் அழியக் காரணமாக இருப்பதால், தனக்கு வாழ்வாதாரமாக விளங்கிவரும் கட்டமைப்பையும் மனித இனம் தானாகவே அழித்துக்கொள்கிறது என இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவர் கூறுகிறார்.
ஆறரை கோடி வருடங்களுக்கு முன்னால், பெரும் விண்கல் பூமியில் விழுந்து டைனோசர்கள் உட்பட ஏராளமான உயிரினங்கள் அழிந்த காலகட்டத்துக்குப் பிற்பாடு, மிக அதிக வேகத்தில் உயிரினங்கள் அழிவது தற்போதுதான் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
========================================================================
உலகம் .
மிஸ்ட் கால் பார்ட்டி.
செல்பியை மறுக்கும் செல்பி புகழ் பிரதமர்.
ஒன்றுமில்லை.யோகாதினம்.
யோகாதான்.
இனிமே கேமராவையே பார்க்க மாட்டேன்.
இன்னும் எத்தனை நாள்.ரியல் எஸ்டேட் ஆக?
=============================================================================================
யோகாதான்.