காமராசரை நினைப்போம்,,,,,,,,,,,.
இன்று காமராசர் பிறந்த நாள், 1941 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு. இரண்டாம் உலகப் போரை முன்னிட்டு பொது மக்களிடம் வரி வசூலித்தது. வரி வசூலிப்பதை வன்மையாகக் கண்டித்ததால் காமராசர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் விடுதலை அடைந்தவுடன் தான் ஏற்றுக்கொண்ட பதவியில் நேர்மையாக முழுமையாக கடமையாற்ற முடியாத நிலையில் அந்தப் பதிவில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்று கூறி அந்தப் பதவியை துறந்தார் காமராசர் 1903 ஆம் ஆண்டு சூலை திங்கள் 15 ஆம் நாள் விருதுநகரில் குமாரசாமி சிவகாமி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் "காமாட்சி' நாளடைவில் காமாட்சி என்ற பெயர் "காமராசு' என்று ஆனது. ஏழ்மையின் காரணமாக தனது பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார் இருப்பினும் அரசியலிலும், சுதந்திர போராட்டங் களிலும் ஆர்வம் காட்டி வந்தார். அவர் 16ஆம் வயதில் காங்கிரசுக் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். 1924 ஆம் ஆண்டு கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அமைந்துள்ள வைக்கம் என...