இடுகைகள்

பணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைக்கவே பகீரென்கிறதே!.

படம்
நாள் முழுவதும் மின்வெட்டு; அதைத் தாங்க முடியாத ஒருவன் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கிடம் சொன்னானாம்: ""ஐயா, ஏழெட்டு மணி நேரமா "பவர்' இல்லை; இருக்க முடியலை''. மன்மோகன் சிங் சொன்னாராம்: ""எனக்கு ஏழெட்டு ஆண்டுகளாகவே "பவர்' இல்லை; இருக்க முடியாமலா போயிருச்சு?'' தலைமையமைச்சரின் நிலைக்கு இன்று இந்திய ரூபாயும் வந்துவிட்டது. அதற்கும் "பவர்' குறைந்துவிட்டது. அரசின் நிதி தொடர்பான பொருளாதாரத்தை பேரளவுப் பொருளாதாரம் என்று கூறுவார்கள். அது கடந்த இரு வாரங்களுக்குள்ளாக பேரழிவுப் பொருளாதாரமாக காங்கிரஸ் கூட்டணி அரசின் கைங்கர்யத்தால் மாறிக் கொண்டிருப்பது இந்தியாவைப் பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைமையமைச்சரும் நிதியமைச்சரும் விழுந்து விட்ட ரூபாய்க்கு முட்டுக் கொடுக்க நாள் ஒன்றுக்கு மூன்று தடவை ஆலோசனை நடத்துகிறார்களாம். வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்கலாம் என்றிருந்தது ஒரு தூரத்துக் கனவு. விடுதலை அடைந்து 65 ஆண்டுகளுக்குள் ரூபாய் 65 மடங்கு விழுந்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் எழுபதைத் ...