தாத்தா தொலை பேசி
இன்று அங்கிங்கில்லாமல் எங்கும் இருக்கும்,எல்லோர் கையிலும் இருக்கும் அலைபேசியின் தாத்தா தொலை பேசி இன்றுதான் அதாவது இதே தேதியில்தான் 1882 இல் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது 131 ஆண்டுகளாகி விட்டது. அதன் வளர்ச்சி இன்று "விஸ்வரூபத்"தில் இருக்கிறது.தனியாக ஒரு இடத்தில் பொறுத்தி பேச ஒரு குழாய் கேட்க ஒரு குழாய் என்று இருந்து பின்னர் மேசையில் ஒரு இடத்தை அடைத்து வெறுமனே எடுத்து காதில்வைத்து தொலைபேசி அலுவலகத்தில் இருந்து ஹலோ சொன்னபிறகு வேண்டிய எண்ணை அல்லது பெயரை சொல்லி இணைப்பு கேட்டு பேசியது போய் ,நாமே எண்ணை சுழற்றி உள்ளூர்களிலும் வெளியீர்களுக்கு டிரங்க்காலும் போட்டு பேசியதும் போய் இன்று எல்லாரும் சட்டைப்பையில் வைக்கும் அளவிற்கு வாமன த்தில் இருந்து" விஸ்வரூபம் "[விஸ்வரூபம் என்று எழுத தடை கிடையாது அல்லவா?]எடுத்துள்ள தொலை பேசியின் ஆரம்ப கால கதையை கொஞ்சம் பார்ப்போம். கிரகாம்பெல் தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய் பேசவும் இயலாதவர். எனினும், உதட்டி...