புதிய ஆயுதங்கள்
வெற்றிக்காக நரேந்திர மோடியை மட்டுமே நம்பியிருப்பதை ஹரியானா தேர்தலிலிருந்தே பாஜக நிறுத்திவிட்டது. பிரதமர் இப்போது நட்சத்திரப் பிரச்சாரகர்களில் ஒருவர் என்பதோடு சரி. பழைய பிரச்சார உத்திகள் போய் இப்போது நுண் அளவிலான செயல்திட்டங்கள் வந்துவிட்டன. பாஜகவின் புதிய ஆயுதக் கிடங்கில் உள்ள முக்கியமான ஆயுதங்கள் இவைதான்: அமலாக்க இயக்குநரகத்தையும் மத்தியப் புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களின் நற்பெயரைக் கெடுத்தல், லெப்டினன்ட் கவர்னர் அல்லது ஆளுநரின் தலையீட்டின் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை மூச்சுத் திணறச் செய்தல், ஒன்றிய நிதியை நிறுத்தி வைத்தல் அல்லது மறுத்தல், வாக்காளர் பட்டியல்களை மாற்றுதல், பொறுப்பற்ற இலவசத் திட்டங்களை அறிவித்தல் ஆகிய செயல்திட்டங்கள் அரங்கேறுகின்றன. இவை அனைத்தும் மாபெரும் தேர்தல் நிதிகளால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தத் திட்டம் ஹரியானாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் மகாராஷ்டிரத்தில் பயன்படுத்தப்பட்டது. இப்போது தில்லியில் மத்திய அரசில் மிகவும் சக்தி வாய்ந்த இரண்டாவது நபர் தனது வடக்குத் தொகுதி அலுவலகத்திலிருந்து இவ...