அரசியல்


புதிய ஓய்வூதிய கொள்[ளை]கை,,,,
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறை ஆங்கிலேயர்களின் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது.  1935-இல், காலனிய ஆட்சிக் காலத்திலேயே அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பது சட்டபூர்வமாக்கப்பட்டது.  1947க்குப் பின், ஓய்வூதியம் என்பது தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமை என்பதை உறுதிசெய்து, உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.  எனினும், ‘சுதந்திர’ இந்தியாவில் இந்திய உழைக்கும் மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் அளிக்கும் கொள்கையோ, சட்டங்களோ நடைமுறையில் இருந்ததே இல்லை.  மைய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ரயில்வே துறை, இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசு வங்கி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள்  தொழிலாளர்கள் ஆகியோருக்கு மட்டும்தான் ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தது.  1990  களில்தான் அரசு வங்கிகள், எல்.ஐ.சி., பாரத மிகுமின் நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்கள்  தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அவற்றுள் சில நிறுவனங்கள் மட்டும்தான் தமது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன.  ஆனால், அந்நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டபூர்வ உரிமையாகக் கோர முடியாது.  சிறுசிறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் எதுவும் கிடையாது என்பது ஒருபுறமிருக்க,  அவர்களுக்கு முதலாளிகள் தம் பங்காக அளிக்க வேண்டிய வருங்கால வைப்பு நிதியைக்கூட முறையாகச் செலுத்துவது கிடையாது.  உதிரித் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், கடைச் சிப்பந்திகள் போன்ற அடிமட்டத் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கான எந்தவிதமான சமூக நலத் திட்டங்களும் நடைமுறையில் இருந்ததில்லை.  பல கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்கள் தங்களின் முதுமை காலத்தில் எவ்வித சமூகப் பாதுகாப்பும் அற்ற அவல நிலையில் இன்றும் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் சித்திரம் இதுதான்.

புதிய ஓய்வூதியத் திட்டம் : இருப்பதையும் பறிக்கும் சாத்தான்!

இருப்பதையும் பறிப்பது என்பதையே நோக்கமாகக் கொண்ட தனியார்மய  தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தி வரும் இந்திய அரசு, ஏற்கெனவே ஓய்வூதியம் பெற்று வரும் அரசு ஊழியர்களிடமிருந்து அந்த உரிமையை 2003 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரேயொரு நிர்வாக உத்தரவின் மூலம் பறித்தது.  ஜனவரி 1, 2004 க்குப் பிறகு மைய அரசுப் பதவிகளில் சேரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.  அதற்குப் பதிலாக அந்த ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீத வருங்கால வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் மைய அரசு தன் பங்காகச் செலுத்தும் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை பா.ஜ.க.வின் தலைமையிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தது.
எனினும், இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து இந்திய இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும் எனச் சலுகை காட்டப்பட்டது. தனியார்மயம் என்ற கொள்ளையைப் பாதுகாக்கும் சட்டபூர்வ குண்டர்படைக்கு எஜமானர்கள் வீசியெறிந்துள்ள எலும்புத் துண்டுதான் இந்தச் சலுகை.  மைய அரசைப் பின்பற்றி பெரும்பாலான மாநில அரசுகளும் ஜனவரி 1, 2004க்குப் பிறகு சேரும் தமது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது எனக் கைவிரித்தன.
ஓய்வூதியத் திட்டத்தில் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதிலும் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன.  அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் என்ற மைய அரசு நிறுவனத்திடமும், அந்த நிதியை முதலீடு செய்யும் பொறுப்பு இந்திய அரசு வங்கியிடமும் இருந்து வந்தது.  இந்நிறுவனங்கள் இந்த நிதியைத் திறம்பட முதலீடு செய்யும் ஆற்றல் கொண்டதாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்யும் பொறுப்பில் ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களையும் நுழைய அனுமதித்தது, பா.ஜ.க. கூட்டணி அரசு.
புதிய ஓய்வூதியத் திட்டம் : சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை !இந்தியாவில் ஏறத்தாழ 46 கோடி தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.  இதோடு ஒப்பிடும்பொழுது அரசுத்துறை மற்றும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுண்டைக்காய்தான்.  2004 ஜூனில் ஆட்சிக்கு வந்த தேசிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்தப் பல கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களையும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில்  இழுத்துப் போடும் நோக்கத்தோடு அத்திட்டத்தை விரிவுபடுத்தி, அதற்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் என்ற கவர்ச்சிகரமான பெயரையும் சூட்டியது.  மைய  மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்வது கட்டாயமென்றும், மற்ற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தம் விருப்பப்படி இதில் இணைந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசின் பத்திரங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் மட்டும்தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது.  இதன்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசு நிறுவனங்கள் மற்றும் பத்திரங்களில் மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் முதலீடு செய்யும் தாராளமயம் சேமநல நிதி நிர்வாகத்தில் புகுத்தப்பட்டது.
இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் சட்டபூர்வமாக்கும் நோக்கத்தோடு, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.  இம்மசோதாவை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைக்க முயன்று வரும் மன்மோகன் சிங் கும்பல், இன்னொருபுறம் இத்துறையில் தற்பொழுது 26 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும்; நாடாளுமன்றத்தின் ஒப்பதலைப் பெறாமலேயே, ஒரு நிர்வாக ஆணை மூலம் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரித்துக் கொள்ளவும்;  இத்துறையில் அந்நியக் கூட்டோடு நுழையும் தனியார் நிதி முதலீட்டு நிறுவனங்கள் பல்வேறு விதமான ஓய்வூதியத் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.  இவையனைத்தும் நிறைவேறும்பொழுது, தொலைபேசித் துறையில் தனியாரை அனுமதித்த பிறகு அரசின் தொலைபேசி நிறுவனத்திற்கு எந்தக் கதி ஏற்பட்டதோ, அதே போன்ற நிலை  தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களையும், அவர்களின் வருங்கால வைப்பு நிதியையும் பாதுகாத்து வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்திற்கும் ஏற்படும்.

பற்றாக்குறை என்ற பழைய பல்லவி

மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை வெட்டுவதற்கு என்ன காரணத்தை அரசு முன்வைத்து வருகிறதோ, அதே காரணத்தைத்தான், அதாவது அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது என்பதைத்தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவதற்கும், ஓய்வூதிய நிதித் துறையில் தனியார்மயத்தைப் புகுத்துவதற்கும் காரணமாக அரசு முன்வைத்து வருகிறது.  ஆனால், ஆறாவது ஊதியக் கமிசனின் சார்பாக அமைக்கப்பட்ட காயத்ரி கமிட்டி, “மைய அரசினால் வழங்கப்படும் மொத்த ஓய்வூதிய நிதியில் 54 சதவீதம் இராணுவச் சிப்பாய்களுக்கும் அதிகாரிகளுக்கும் செல்லுகிறது.  அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும்பொழுது, அரசின் ஓய்வூதியச் செலவு எப்படிக் குறையும்?” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.  மேலும், இந்தியாவிலேயே மிகப் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே, தனது தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் தனது பட்ஜெட்டிலேயே தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வரும்பொழுது, அரசிற்கு ஓய்வூதிய நிதிச் செலவு கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதற்கு வாய்ப்பில்லை; அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கி வரும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் 1960  இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாக இருந்தது.  இது, 200405  இல் 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது.  பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்திவந்தால்கூட, இச்செலவு 202728  இல் 0.54 சதவீதமாகக் குறைந்துவிடும் என்றும் காயத்ரி கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.
எனவே, அரசின் பற்றாக்குறையை குறைப்பது என்பது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கமல்ல.  அரசு தனது சட்டபூர்வ பொறுப்பைக் கைகழுவுவதும்;  தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்க வருங்கால வைப்பு நிதியைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உரிமை அளிப்பதும்தான் இதன் பின்னுள்ள காரணம்.

வருங்கால வைப்பு நிதி சேமிப்பு பறிபோகும் அபாயம்

இப்புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளத்திலிருந்தும் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி தனியார் முதலீட்டு நிறுவனங்களிடம் செலுத்தப்படும்.  அந்நிறுவனங்கள் இச்சேமிப்பை அரசின் பத்திரங்களில் மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் முதலீடு செய்யும்.  இதன் மூலம் கிடைக்கும் இலாபமோ/நட்டமோ, அது ஒவ்வொரு தொழிலாளியின் சேமிப்புக் கணக்கிலும் சேர்க்கப்படும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்வது என்பது குறித்து கருத்துக் கூறும் உரிமை தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.  புதிய ஓய்வூதியத் திட்டத்திலோ ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அறிவிக்கும் முதலீட்டுத் திட்டங்களில் ஏதாவதொன்றைத் தொழிலாளி தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்; அல்லது, அவர்களின் சார்பில் முதலீட்டு நிறுவனங்களே முதலீடு செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.  அதாவது, தன்னுடைய ஓய்வூதிய நிதியைக் கொள்ளையிடும் உரிமையை எந்த முதலாளிக்கு வழங்குவது என்று தீர்மானிக்கும் உரிமை தொழிலாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்தக் கொள்ளையிலிருந்து தப்பிக்கும் உரிமையோ, தனது ஓய்வூதிய நிதியை வேறுவிதமாகப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையோ தொழிலாளிக்கு கிடையாது.
இலாபம் கிடைத்தாலும், நட்டமடைந்தாலும், ஒவ்வொரு தொழிலாளியும், தான் ஓய்வு பெறும் வரை மாதாந்திர நிதியைச் செலுத்திக் கொண்டேயிருக்க வேண்டுமே தவிர, இத்திட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட முடியாது.  திட்டத்திலிருந்து விலகுவது மட்டுமல்ல, ஒருவர் தனக்குத் தேவைப்படும் நேரத்தில் தனது வருங்கால வைப்பு நிதி சேமிப்பிலிருந்து பணத்தை எடுப்பதுகூட அவ்வளவு எளிதான விவகாரமல்ல. மேலும், ஒரு தொழிலாளி வேலையிழந்து, அதனால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய சந்தா தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் அவரின் சேமிப்பு முழுவதையும் கம்பெனியே முழுங்கிவிடும் அபாயமும் இத்திட்டத்தில் உள்ளது.
தொழிலாளர்கள் ஓய்வுபெறும்பொழுது, அவர்களின் சேமிப்பு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஈட்டித் தந்திருக்கும் வருமானத்திலிருந்து 60 சதவீதம் மொத்தமாகத் திருப்பித் தரப்படும்; மீதி 40 சதவீதம் அவர்களுக்குக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்காக காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.  அதேசமயம், ஒரு தொழிலாளி தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இத்திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள நேர்ந்தால், அவரது சேமிப்பிலிருந்து 80 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.  இந்தக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் என்பது சந்தை நிலவரத்தைப் பொறுத்து மாறக்கூடியதே தவிர, உத்தரவாதமானது அல்ல.  சந்தை நிலவரம் குறைந்தபட்ச ஓய்வூதியம் தரக்கூடிய நிலையில் இல்லை என்றால், ஓவ்வொரு தொழிலாளியும் தனக்குக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் அளிப்பதற்காகப் பிடிக்கப்படும் முதலீட்டை அதிகரித்துக் கொண்டே செல்ல நேரிடும்.
இவையெல்லாம், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைச் சந்திக்காமல் நிதானமாக வளர்ந்து கொண்டிருந்தால்தான் கைக்குக் கிட்டும்.  பங்குச் சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்துவிட்டாலோ, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி கடலில் கரைத்த பெருங்காயமாகக் காணாமல் போகும்.  இப்படிப்பட்ட அபாயம் நடக்குமா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.  இப்படி நடப்பது தவிர்க்க முடியாதது என்பதைத்தான் முதலாளித்துவத்தின் குருபீடமான அமெரிக்காவின் அனுபவங்கள் நிரூபித்திருக்கின்றன.
அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் கொட்டியதால்,  1980க்கும் 2007க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்கப் பங்குச் சந்தை எக்குத்தப்பாக வீங்கியது.  இந்த வீக்கத்தால், தொழிலாளி வர்க்கத்தைவிட, வேலியிடப்பட்ட நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தரகு நிறுவனங்கள் போன்றவைதான் பலனடைந்தன.  குறிப்பாக, தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மட்டும் 2000 க்குப் பிந்தைய பத்து ஆண்டுகளுக்குள் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்தி 1,700 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக (85,000 கோடி ரூபாய்) இலாபம் ஈட்டின.  சப்  பிரைம் நெருக்கடியால் அமெரிக்கப் பங்குச் சந்தையின் வீக்கம் வெடித்தபொழுது, ஏறத்தாழ 3 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (ஒரு கோடியே ஐம்பது இலட்சம் கோடி ரூபாய்) பெறுமானமுள்ள அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின், நடுத்தர வர்க்கத்தின் ஓய்வூதியச் சேமிப்பு சுவடே தெரியாமல் மறைந்து போனது.
இது போன்ற நிலைமை இந்தியாவிலும் உருவாகும் என்பதை எதிர்பார்க்கும் ஆளும் கும்பல், அதற்கேற்றபடியே புதிய ஓய்வூதியச் சட்டத்தில், “தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம் வழங்க முடியாது; சந்தையில் திடீர் இழப்புகள் ஏற்பட்டால், சேமிப்புத் தொகையில் ஒரு சிறு பகுதியைத் திருப்பித் தருவதற்குக்கூட உத்தரவாதம் தர முடியாது” என நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதியைப் பிடித்தம் செய்து, அதனை அரசிடம் கட்டாமல், அந்நிதியில் பல்வேறு முறைகேடுகளையும் கையாடல்களையும் தனியார் முதலாளிகள் செய்துவருவது ஏற்கெனவே அம்பலமாகிப் போன உண்மை.  இனி இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்படுவதற்கான வாய்ப்பை இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம் திறந்துவிட்டுள்ளது.
இத்தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கணக்கு வழக்குகளை ஒழுங்காக வைத்திருப்பார்களா, தொழிலாளர்கள் ஓய்வு பெறும்பொழுது அவர்களின் சேமிப்பை முறையாகத் திரும்ப ஒப்படைப்பார்களா எனக் கேட்டால், அவர்களைக் கண்காணிப்பதற்குத்தான் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.  வேலிக்கு ஓணாண் சாட்சியாம்.  தொலை தொடர்புத் துறையிலும் காப்பீடு துறையிலும் மின் துறையிலும் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்காற்று ஆணையங்கள் அத்துறைகளில் நுழைந்துள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கும் திருப்பணியைத்தான் செய்து வருகின்றன.  ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியை ஒரு இருபது, முப்பது ஆண்டுகளுக்குத் தானே வைத்துக் கொண்டு, தமது விருப்பம் போலப் பயன்படுத்திக் கொள்ளத் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதை, 2 ஜி  ஐ விஞ்சும் ஊழலாகத்தான் சொல்ல முடியும்.

நன்றி:வினவு,

__________________________________________



பகத்சிங் -விடுதலையின் வெளிப்பாடு
         பி.ஸ்ரீராமகிருஷ்ணன்
தமிழில்: இரா.சிந்தன்
ஒவ்வொரு இந்தியப் புரட்சியாளனும் பகத்சிங்கை மனதில் ஏந்துகையில், அவர் காலத்தில் நாமும் பிறக்கவில்லையே என்று ஏங்குவான். ஆம், எக்காலத்திலும் ஒடுக்குமுறைகளையும், சுரண்டலையும், அநீதியையும் எதிர்த்துப் போராடுவது, ஒவ்வொரு புரட்சியாளனுக்கும், கம்யூனிஸ்டுக்குமான கடமைதான். இருந்தாலும், அந்தப் புரட்சியாளர்கள் இந்திய சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்வையே அற்பனிப்பு செய்திட்ட காலத்தில் நாமும் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் எப்போதும் இருக்கிறது. இன்றைக்கு நமது போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது, இந்திய இளைஞர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்தே செயல்படுகிறோம். இப்போதும், 75 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதிய அந்தத் தியாகமே, நம்மைப் போர்க்களங்களில் உந்தித் தள்ளுவதாக அமைந்துள்ளது.
பகத்சிங்குறித்த நினைவுகள் நமக்கு இன்னொரு இழப்பையும் நினைவூட்டுகின்றன - அது இந்திய புரட்சிகர இயக்கத்தின் தொட்டிலாக இருந்த - லாகூரின் இழப்பு. புதிய எல்லைகளை ஏற்பதற்காக ஒரு நாட்டின் எல்லைகளில் மாற்றம் உருவாகும்போது, அந்தப் பகுதியின் அரசியலிலும் மாற்றம் வந்துவிடுகிறது. லாகூர் எப்போது பாகிஸ்தானின் பகுதியாக மாறியதோ, அப்போதே அது புரட்சிகர நடவடிக்கைகளின் மையம் என்ற தகுதியையும் இழந்துவிட்டது.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மகத்தான பங்கைச் செலுத்திய லாகூர் தான் பகத்சிங்கையும் வார்த்தெடுத்தது. அங்கே மாணவர்களிடையே நடந்துவந்த அரசியல் விவாதங்கள், எழுச்சியை உண்டாக்கிடும் புரட்சிகர நடவடிக்கைகளாக மாறியது அது, பகத்சிங்கின் மனதிலும் உத்வேகத்தை உண்டாக்கியது. தனக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்திடும் தன் தந்தையின் முடிவை எதிர்த்து வீட்டிலிருந்து வெளியேறிய பகத்சிங், கான்பூரில் சுகதேவையும், ராஜகுருவையும், சந்திரசேகர ஆசாதையும் சந்தித்து அவர்களின் புரட்சிகர சிந்தனைகளினால் கவரப்பட்டார். பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களின் நடவடிக்கைகள் இந்திய அரசியல் அரங்கில் ஏற்படுத்திய மாற்றம் பலமுறை ஆராயப்பட்டும், விவாதிக்கப்பட்டும் உள்ளது. ஆனால், 23 வயதில், அவரது அரசியல் சிந்தனையில் காணப்பட்ட பல்நோக்குதான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நான் தூக்கு மேடையை நோக்கிச் செல்லும்போது நீங்கள் இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என முழக்கமிட வேண்டுமென தன்னை சிறைச்சாலையில் சந்திக்க வந்த தாயாரிடம் அவர் அறிவுரை கூறினார். 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் நாள் லாகூர் சிறைச்சாலையில் கேட்ட அந்த முழக்கம், இன்றைக்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த முழக்கத்தின் பொருள் புரட்சி ஓங்குக என்பதாகும், அதுவே இந்திய புரட்சிகர இயக்கங்களுக்கு முடிவற்ற உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது.
                
அவரது 23 வருட வாழ்க்கையில், விவாதித்திடாத விசயங்கள் இல்லை. தர்க்கவியல் பொருள்முதல்வாதத்திலிருந்து, ஏகாதிபத்திய அழித்தொழிப்பு வரை நாத்திகம் முதல் காதல் வரை அவர்கள் விவாதித்தனர். மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒவ்வொரு அரசியல், சமூக, உளவியல் கூறுகளையும் கற்றுத் தேர்ந்தனர். இந்தியாவில் மார்க்சையும், ஏங்கல்சையும், லெனினையும் ஆழ்ந்து படித்த முதல் கம்யூனிஸ்ட் அவரே என்று நாம் கூற முடியும். அக்டோபர் புரட்சியும், இத்தாலிய புரட்சியாளர்களும் அவருக்கு உற்சாகமூட்டினர்.
அவர் மார்க்சிய நூல்களை சிறைச்சாலையிலேயே படித்தார், தன்னைத் தூக்கிலிடும் கடைசி நொடியிலும் கூட அவர் படித்துக் கொண்டும் கற்றுக் கொண்டும் இருந்தார்.
சுதந்திரத்திற்கான போராட்டத்தில் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டோரும் சங்கமித்தனர். பகத்சிங்கும் அவரது நண்பர்களும், நாங்கள் காந்தியின் சிந்தனைகளுடன் ஒத்துப்போகவில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்தனர். இந்தியர்களின் ஒற்றுமையும், வலிமையும் பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு ஓடச்செய்ய வேண்டும் என்ற கருத்தையே அவர்கள் கொண்டிருந்தனர். பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய், இந்திய மக்களால் அறியப்பட்ட, மதிக்கப்படுகிற தலைவராக இருந்தார். ஆனால் அவரும் பிரிட்டிஷ் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர், இந்தியாவை இந்து இந்தியாவாகவும், முஸ்லிம் பாகிஸ்தானாகவும் பிரிக்க வேண்டும் என்ற கொள்கையையே லஜபதிராய் ஆதரித்தார். பகத்சிங்கும் நண்பர்களும் இந்தக் கொள்கைகளை கடுமையாக எதிர்த்தனர். இதனால், லஜபதிராய் இந்த இளம் கன்றுகளை பொறுப்பற்றவர்கள் என்றும், ரஷ்ய உளவாளிகள் என்றும் தவறாக மதிப்பிட்டார். ஆனால், இந்த இளம் கன்றுகள் லாலா லஜபதிராய்-க்காகவும், இந்திய சுதந்திரத்திற்காகவும் தூக்குக் கயிற்றை முத்தமிட்டனர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடைபெற்றபோது பகத்சிங்குக்கு 12 வயதுதான் இருக்கும். சுமார் 400 இந்தியர்களின் சூடான இரத்தத்தால் நனைக்கப்பட்ட பிடி மண்ணை அள்ளியெடுத்தபோது அவரின் இதயம் முழுவதும் பிரிட்டிஷாருக்கு எதிரான தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அடுத்த பத்தாண்டுகளில் அவர் ஒரு புரட்சியாளராக மாற்றம்பெற்றார். லாலா லஜபதிராய் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், அவரை பிரிட்டிஷாரோடு நேருக்கு நேர் மோதிடத் தூண்டுகோலாய் அமைந்தது.
1928 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி பிரிட்டிஷ் போலீசாரால் லஜபதிராய் தாக்குண்டார். லாகூர் ரயில்நிலையத்தின் அருகில், சைமன் கமிசனுக்கு எதிரான போராட்டத்தில் திரண்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு அவர் தலைமையேற்றிருந்தார். சர் ஜான் அல்ஸ்புரூக் சைமன் தலைமையிலான 7 நபர் கமிசன் லாகூரை வந்தடைந்தபோது அவர்கள் மக்கள் திரளால் தடுக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரி ஏ.ஜே.ஸ்காட் தலைமையிலான காவலர்கள் தடியடி நடத்தினார்கள். முதலில் அந்தக் கூட்டம் சிதறி ஓடினாலும், லஜபதிராயின் குரலைக் கேட்டுத் திரும்பியது. இதைப் பார்த்தை அதிகாரி தனது லத்தியால் கொடூரமான முறையில் அவரைத் தாக்கினான். தனது நினைவு மங்கும் தருணத்திலும் லஜபதிராய், தன்னைத் தாக்கிய போலீஸ் அதிகாரியைப் பார்த்து என் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், பிரிட்டிஷ் சம்ராஜ்ஜியத்தின் சவப்பெட்டியின் மீது அறையப்பட்ட ஆணியாக மாறும் என்று முழங்கினார்.
தங்களின் மதிப்புக்குரிய தலைவர், பொது இடத்தில் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டதை அறிந்து தேசமே அதிர்ச்சியடைந்தது. இது இந்தியாவுக்கு நேர்ந்ததொரு பேரவமானமாகக் கருதப்பட்டது. காயங்களின் காரணமாக லஜபதிராய் நவ.17 அன்று மரணமடைந்தார். காங்கிரஸ் எப்போதும்போல தன் போராட்டத்தை நடத்தியது. ஆனால் பகத்சிங்கும் அவரது நண்பர்களும், இந்த மரணத்திற்கு பழிதீர்க்க முடிவு செய்தனர். தவறுதலாக அவர்கள் சாண்டர்சனைக் சுட்டபோதும், பெரும்பாலானவர்கள் இது லஜபதிராயின் மரணத்திற்கு கொடுக்கப்பட்ட பதிலடியே என்பதைப் புரிந்துகொண்டனர். இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்துப் பேசும்போதெல்லாம், காங்கிரஸ் கட்சி, தானே அதில் பெரும் பங்காற்றியதாக தம்பட்டமடிக்கத் துவங்கும். காந்திஜி எப்போதும் ஒரு தேசியத் தலைவர்தான். ஆனால், காந்தியின் அகிம்சை வழிமுறையை எதிர்த்துக் கொண்டே, சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய தலைவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தனர்.
எழுதப்பட்ட இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில், அவர்களின் இரத்தத்தையும், கண்ணீரையும் யாராலும் மறுதலிக்க முடியாது. காந்தியின் சிந்தனைகளை பகத்சிங் வலுவாக நிராகரித்தார். இந்திய மக்களின் போராட்ட வலுவையும், சுய திடத்தையும் கண்டு, வேறு வழியே இல்லாத நிலையில் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு ஓட வேண்டும் என அவர் விரும்பினார். நாங்கள் மனித உயிருக்கு மதிப்பளிக்கிறோம், ஆனால் பெருமை மிகு தேசத்தின் அடிமைத்தனத்தை விரட்டியடிக்க சில மரணங்கள் தவிர்க்க இயலாதவை என்ற செய்தியுடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் மூலம் பகத்சிங்கும் அவரது நண்பர்களும் (சாண்டர்சனின் கொலைக்கு) தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர். சில காலத்திற்குப் பின்னர், மத்திய சட்டப் பேரவையில் (நாடாளுமன்றம்) இரண்டு மக்கள் விரோத சட்டங்கள் குறித்த விவாதம் நடந்துகொண்டிருந்தபோது பகத்சிங், தனது நண்பர் பட்டுகேஷ்வர் தத்துடன் இணைந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அவை, பிரிட்டிஷாரின் கேளாக் காதுகளைக் கேட்கச் செய்திடும் பொருளிலேயே வெடிக்கப்பட்டது.
ஒத்துழையாமை இயக்கம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைக் காட்டிலும் கூடுதல் வலுவுடன் நடந்தது. ஆனால் சௌரி சௌரா சம்பவத்திற்குப் பின்னர் தனது போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக காந்தி அறிவித்தார், அது அவரது எதேச்சதிகார நடைமுறைக்கு உதாரணமாகவே கொள்ளப்பட்டது. போலீசாரை திருப்பித் தாக்கியதும், காவல் நிலையத்திற்கு தீ மூட்டியதும் தற்காப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக நடந்தவை. காந்தி தான் விரும்பும் முறையிலான போராட்டத்தை வலியுறுத்துவதற்காக, மக்களின் இயல்பான எதிர்ப்புகளையும், சண்டையிடும் திராணியையும் காண மறுதலித்துவிட்டார் என்று விமர்சகர்கள் கூறினர். அகிம்சையை வலியுறுத்திய காந்தி, எப்போதும் தனது சிந்தனைகளை மக்கள் மீது வலியத் திணித்தே வந்தார். எப்போதெல்லாம் மக்களிடையே போராட்ட வேட்கை கொழுந்துவிடுகிறதோ, அப்போதெல்லாம் காந்தி அதன் மீது நீரை ஊற்றிவந்தார். எந்த ஒரு போராட்டமும் அவரது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை அவர் அனுமதிக்கவில்லை. ஹதிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், காந்தி முன்நிறுத்திய பட்டாபி சீத்தாராமையாவை தோற்கடித்து சுபாஸ் சந்திர போஸ் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திவந்த போசை, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளித்தள்ளுவதில் காந்தி முக்கியப் பங்காற்றினார். சுபாஸ் சந்திரபோசுடன், அவரது சிந்தனைகளும் வெளித்தள்ளப்படும் என்று காந்தி நம்பினார்.
காந்தி அகிம்சையை ஒரு கொள்கையாக ஒப்புக் கொண்டபோதிலும், சூழலின் தேவைக்கு ஏற்ப அதிலிருந்து விலகியும் சென்றார். இரண்டாம் உலகப் போரின்போது, போரில் பங்கேற்று பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு உதவிட வேண்டுமென அவர் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டார். பிரிட்டிஷ் ராணுவத்துடன் சேர்ந்து ஏராளமான இந்தியர்களும் யுத்தம் செய்தார்கள். அது பாசிசத்திற்கு எதிரான போர் என்கிற அளவில் இது அவசியமானதே. கம்யூனிஸ்டுகளின் நிலையும் அதுதான். பாசிசத்தை வீழ்த்துவதற்காக, சோவியத் யூனியனுடனும், அமெரிக்காவுடனும் இணைந்து நின்று போராடிய பிரிட்டிஷ் அரசாங்கத்தை அவர்கள் ஆதரித்தனர். தொடர்ந்து அவர்கள் ஜெர்மனியும், சோவியத் யூனியனும் தொடர்ந்து சண்டையிட்டபோது கம்யூனிஸ்டுகள் சோவியத் யூனியனை ஆதரித்தனர். மீண்டும் பாசிசத்திற்கு எதிராக. ஆனால், இதனைக் கணக்கிலெடுக்காமல், கம்யூனிஸ்டுகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை புறந்தள்ளிவிட்டனர் என காங்கிரஸ்காரர்கள் சொல்கின்றனர். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்காக சண்டையிடவும், சுபாஷ் சந்திரபோசை வெளித்தள்ளுவதிலும் காந்தி எடுத்த தந்திர நிலைப்பாடுகளை காங்கிரசின் வரலாற்றில் குறிக்காமல் இருக்க முடியது. அவர்கள் இதனை மறைத்துவிட விரும்புகின்றனர். இந்த நடவடிக்கையே, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக காங்கிரஸ்காரர்கள் அவிழ்த்துவிடும் தவறான பிரச்சாரத்தை அம்பலப்படுத்திவிடும்.
பகத்சிங்கும் அவரது நண்பர்களும் இத்தகைய இரட்டை நிலையை என்றுமே எடுத்ததில்லை. வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்குப் பின் இந்தியா சுதந்திரமடைய பல ஆண்டுகள் பிடித்தன. இரண்டாம் உலக யுத்தத்தில் நேச நாடுகளின் வெற்றியை சோவியத் யூனியனாலேயே பெறமுடிந்தது. ஏகாதிபத்தியத்தை முன்னிறுத்திய பிரிட்டன் முழங்காலிட்டதும், காலனி ஆட்சிமுறை உலகம் முழுவதும் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் இந்தியாவின் பல பகுதிகளிலும் மக்கள் எழுச்சிகளுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கினர். புன்னப்புரா-வயலார், தெலுங்கானா மற்றும் பம்பாய் கப்பற்படை எழுச்சி ஆகியவை அவற்றில் சில. 1942 இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் எதையும் செய்திடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எல்லா வாய்ப்புகளையும் இழந்தபின்னர், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிட முடிவு செய்தது. சுதந்திரத்தின்போது காந்தியின் நிலையை நாம் வரலாற்றில் அறிந்துகொள்கிறோம்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமான தீரமிகு இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். காந்தியின் உயர்வையும் தியாகத்தையும் சிறுமைப்படுத்தாத அதே நேரத்தில், அந்த தீரர்களின் தியாகம் இல்லாமல் இந்திய சுதந்திரத்தைச் சாதித்திருக்க முடியாது என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். பகத்சிங்கிற்கு மரணதண்டனை வழங்கப்பட்ட நேரத்தில், இந்தியா முழுவதும், மரண தண்டனையை திரும்பப் பெற்றிட வலியுறுத்தி மக்கள் வீதியில் இறங்கினர். ஆனால், காந்தி இந்தப் போராட்டங்களிலிருந்து விலகி நின்றார். அவர் சொன்னதெல்லாம் கோடைகாலம் துவங்குவதற்கு முன்பாக, அவர்களைத் தூக்கிலிட்டிட வேண்டும் என்பதைத்தான் !புரட்சியாளர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்திடாத காந்தி, சுதந்திரத்தின் போது காங்கிரஸ் கட்சியால் ஒதுக்கப்பட்டார். சுதந்திரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரங்களின் முன்னாள் காந்தி கையாலகாதவராக நின்றார். கடைசி நாட்களில் மிகுந்த வருத்தத்துடன், காங்கிரஸ் கட்சியை கலைத்திடவும் அவர் விரும்பினார்.
பகத்சிங்கும் அவரது நண்பர்களும் தூக்கு மேடையின் மீதேறி, தூக்குக் கயிற்றை முத்தமிட்டனர், இன்குலாப் ஜிந்தாபாத் என முழக்கமிட்டபடியே மரணத்தை நோக்கி நடைபோட்டனர். காந்தி ஒரு மத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பகத்சிங்கும் அவரது நண்பர்களுக்கும் சமமான முக்கியத்துவமும், அவசியமும் உள்ளது. சிறிது காலதாமதமானாலும், இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியின் சிலை அமைந்துள்ள இடத்திலேயே பகத்சிங்கின் சிலையும் நிறுவப்பட்டது. மேலும் ருசிகரமான தகவல் என்னவென்றால், இதே வளாகத்தின் பார்வையாளர் அரங்கில் இருந்துதான் பகத்சிங்கும் அவரது நண்பர் பட்டுகேஷ்வர் தத்தும், பிரிட்டிஷ் அரசை விழிக்கச் செய்யும் முகமாக இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசினர் என்பது தான்.                                                                                                             “இளைஞர் முழக்கம்” இதழில் இருந்து,நன்றியுடன்,
--------------------------------------------------------------------------------

புத்தகப் பார்வை
1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மாசே துங் தலைமையில் செம்படையினர் அணிவகுத்த நெடும்பயணம் 370 நாட்கள் தொடர்ந்தது. சீன வானில் தோன்றிய சிவப்புக் கீற்று, பெரும் பரிதியாய் ஒளிர்விடத் துவங்கிய மாபெரும் வீர சரித்திரம் அந்தப் பயணம். நெடும்பயணத்தின் 77வது ஆண்டு துவங்கும் இந்தத் தருணத்தில், புரட்சியாளர் மாவோவை, பிரம்மைகளற்று உள்வாங்க வேண்டிய அவசியம் உணரப்பட்டிருக்கிறது.

மாவோ குறித்து எத்தனை புத்தகங்கள் வாசித்திருந் தாலும், இந்த புத்தகத்தை தவறவிட்டுவிடாதீர்கள். ஏனெனில், ஒரு எளிய மனிதன், மாவோ என்ற ஆளுமையை எந்தக் கண் கொண்டு பார்த்தான் என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளப் போகிறீர்கள்.

சீனப் புரட்சிக் காலத்தில் மாவோவிற்கு ஒரு மெய்க்காப்பாளர் குழுவை கட்சி ஏற்படுத்துகிறது. அந்தக் குழுவிற்கு தளபதியாக இருந்தவர் லீயின் கியாயோ. அவரது தகவல்களைத் தொகுத்து குவான் யான்சி என்ற எழுத்தாளர் எழுதிய “மா சேதுங்: ஒரு மனிதர், கடவுளல்லர்!” என்ற புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

லீயின் கியாயோ, மாவோவின் மெய்க்காப்பாளராகத் தேர்வானதே மிக அலாதியான அனுபவம். மெய்க்காப்பாளர் பணியை மறுத்திடும் லீயின், நான் போர் முனைக்குச் செல்லவே விரும்புகிறேன், “வழிபடுவதை விட கிளர்ந்தெழுவது மேலானது” என்கிறார். இதன் பின்னர் மாவோவும் அவரும் ஒரு ஆறு மாதத்திற்கு ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.மெய்க்காப்பாளர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் பின்வருமாறு அறியலாம். ஒருமுறை விமானங்கள் குண்டுகள் பொழிய வட்டமிட்டு, பின்னர் சென்றுவிட்டதை வர்ணிக்கும் அந்த மெய்க்காப்பாளர் போகிற போக்கில் இப்படிச் சொல்கிறார், “எனது பிரார்த்தனைக்கு செவிசாய்த்த மார்க்ஸிடம் நன்றியுணர்வு பொங்க நான் மகிழ்ச்சியில் கிட்டத்தட்டகுதித்திருப்பேன்.” என்கிறார். மார்க்ஸிடம் பிரார்த்தனை மேற்கொண்ட அவரது நடவடிக்கை எத்தனை எளிய மனிதர் என்பதை நமக்கு காட்டுகிறது.அத்தகைய எளியவரின் பதிவுகள், சாதாரண மக்களின் கண்களில் மாவோவின் சித்திரத்தை விவரிக்கிறது. புரட்சியின் உச்சகட்டத்திலும், நவ சீனம் நிறுவப்பட்ட பின்னரும் மாவோவிற்கு உதவியாளராக, அவரின் குடும்பத்தில் ஒருவராக வசித்த அவரின் பதிவுகள் மாவோ குறித்த சித்திரத்தை மிக எளிதாக்குகின்றன.

இப்புத்தகத்தை வாசிக்கும் எவரும் ஒரு நாளிற்கு 24 மணி நேரம்தான் என்ற உண்மையை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். முழு நேரப் புரட்சியாளர்களாக, ஒரு கம்யூனிஸ்டாக தன்னை வடித்துக்கொள்ள விரும்பும் எவருக்குமே மாவோ ஒரு நட்சத்திரமாக அமைந்திருக்கிறார். “உங்களுடைய பணி, உங்களிடமிருந்து இன்னும் கூடுதல் தியாகங்களைக் கோருகிறது....” (ஊழல் என்னும்) சர்க்கரை தடவிய தோட்டா உன்னைத் துளைத்துவிடாமல் பார்த்துக்கொள்... எளிமையாக இரு; நீ ஊழலில் ஈடுபடாமலிருந்தாலும், ஏதாவது வீணடித்திருக்கிறாயா?, விரயமும் தீங்கானது; அதுதான் ஊழலை நோக்கிய முதல் அடி; சிக்கனமாக இரு, அதைப் பழக்கமாக ஆக்கிக்கொள்” இதுதான் புரட்சியாளர்களுக்கு அவர் முன் வைக்கும் கோரிக்கை. இந்த அறிவுரையை மாவோவும் பின்பற்றினார். அவர் அணிந்த உடைகள் பெரும்பாலும் ஒட்டுப்போட்டவை என்ற செய்தியை லீயின் கியாயோ பதிவு செய்கையில் நம் புருவங்கள் மேலே உயர்கின்றன. போர்க்களமாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் முன்னணியில் நிற்கும் மாவோ தன் நடவடிக்கைகளில் அச்சத்தை வெளிப்படுத்தவேயில்லை. மாறாக எந்த சவாலையும் முன்னணியில் நின்று எதிர்த்தார்.

அதற்கு காரணமிருந்தது. ஒரு தலைவரின் சொற்கள் அல்ல, நடவடிக்கைகளே மக்களைக் கவ்விப் பிடிக்கின்றன என்ற உண்மையை அவர் உணர்ந்துவிட்டிருந்தார். மாவோவின் மகள் லீ நே தனது பள்ளிப் படிப்பின்போது, எல்லா மாணாக்கரையும் போலவே நடத்தப்பட்டார். அவரது பசிக்கு போதுமான உணவு என்றைக்கும் கிடைத்திட்டதில்லை. எல்லா மக்களுக்கும் என்ன கிடைக்கிறதோ அதுவே அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். மாவோவின் குழந்தைகள் குறிப்பாக லீ நே குறித்த சில பக்கங்கள் நம்மை நெகிழச் செய்யும். மாவோவின் மகளுக்காக சிலர் கண்ணீர் விடலாம். “வாழ்க்கையின் கடுமையைக் கண்டு அஞ்சுகிறவர்களுக்கானதல்ல இந்த உலகம்.” என்ற வாக்கியத்துடன் அந்தத் தருணத்தைக் கடந்துசெல்கிறார் மாவோ.

அதே நேரத்தில், மாவோ கண்ணீர் விட்டழுத நிமிடங்கள் வேறு. நவ சீனம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நாட்டின் உண்மை நிலை குறித்து அறிந்திட மாவோவால் முடியவில்லை. அவர் மீதான மதிப்பே, அவரை மக்களிடம் நெருங்க விடாமல் செய்தது. அந்த நேரத்தில் தனது உதவியாளரை அனுப்பி கிராம மக்களின் அன்றாட உணவைச் சேகரித்த அவர், அந்த காய்ந்த பெரிய தவிட்டு ரொட்டிகளைச் சாப்பிட முடிவு செய்தார். “நம் நாட்டின் விவசாயிகள் இதைத்தான் உண்கிறார்கள்” என்று அவர் சொல்லியபோது சொந்தக் காரணங்களுக்காக சற்றும் கலங்கிடாத அவரது நெஞ்சம், குழுங்கியது, கண்கள் கசிந்தன.

“மாவோ அழுதார், தனது லட்சியங்களுக்கும் கொடூரமான உண்மைக்கும் இடையில் இருந்த இடைவெளியைப் பற்றிய எண்ணங்கள் ஓடியிருக்க வேண்டும்.” என்று சொல்கிறார் மெய்க்காப்பாளர்.

ஒரு கடுமையான 15 ஆண்டுகாலப் பதிவுகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம், மாவோவின் புத்தகக் காதலைப் பற்றி தனி அத்தியாயமே கொண்டிருக்கிறது.

“நாம் கொண்டுசெல்ல முடியாத இந்தப் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வையுங்கள். மார்க்சிய லெனினியத்தைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் ஹூவின் துருப்புகளுக்கு நன்மையளிக்கக் கூடும்” தோழர்களுக்கு மட்டுமல்லாது, பகைவர்களுக்கும் மார்க்சிய லெனியத்தின் வழிகாட்டுதல் கிடைக்கச் செய்திட விரும்பியவர் மாவோ.


எல்லா சமயங்களிலும் அவர் புத்தகங்களை இவ்வாறு விட்டுச் சென்றதில்லை. மாறாக அவர், தான் செல்லுமிடத்திற்கெல்லாம், சிறந்த புத்தகங்களோடே பயணத்தை மேற்கொண்டார்.

அதைப்போல, நாமும் கையில் வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகம் இது. மிகச் சுவாரசியமான நடையைக் கண்டிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் மிலிட்டரி பொன்னுசாமி. ஒரு தலைவரை மதிப்பீடு செய்வதை யுத்தகாலச் சவால்கள் சுலபமாக்கிவிடுகின்றன என்றார் ரிச்சர்டு நிக்சன். இந்தப் புத்தகம் அத்தகைய சவால்கள் நிறைந்த தருணங்களை நம்மிடம் பதிவு செய்கிறது.

-இரா.சிந்தன்

மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்
குவான் யான்சி | தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி 
பக்: 288 | ரூ.140 | பாரதி புத்தகாலயம்


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்

இன்றைய தேதியில் இந்தியாவில் ஊழல் தான் செல்லுபடியாகும் சரக்கு. அதனால் தான் அன்னா ஹஸாரே முதல் அத்வானி வரை அதைக் கொண்டு கல்லா கட்ட துடிக்கிறார்கள்.  இவர்களின் ஊழல் ஒழிப்பு நாடகங்களில், ஊழல் ஒழிப்பைத் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது.  ஏற்கனவே அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்ட ரத யாத்திரை நடத்தி பலருக்கு கல்லறை கட்டிய அனுபவம் இருப்பதால் இப்போது ஊழலுக்கு கல்லறை கட்ட ரத யாத்திரை நடத்தி அதற்கு கோவில் கட்டி எழுப்புவார் என எதிர்பார்க்கலாம்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப் பயணம் நடத்தி சில ஊர்களில் பேசிவிட்டால் அது ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாகிவிடும் என்றால், இந்தியாவில் ஊழல் என்ற வார்த்தையே யாருக்கும் தெரியாதவாறு அழிந்து போயிருக்கும். அந்த அளவுக்கு எந்தவித பேதமும் இல்லாமல் அனைத்து ஓட்டுக் கட்சி அரசியல் வியாதிகளும் பாகம், பாகமாக ஊழல் ஒழிப்பு குறித்து பேசியிருக்கிறார்கள்.  ஆனால் நாற்பதுகளில் சில ஆயிரங்களில் இருந்த ஊழல் இன்று பல லட்சம் கோடிகளாக வளர்ந்திருக்கிறது.  இந்த ஜன் சேத்னா ரத் யாத்ரா தன் 38 நாள் உழவை முடித்ததும் ஊழல் பயிர் எவ்வளவு மகசூல் காணுமோ.

இப்போதே இந்த யாத்திரைக்கு பாஜக தலைவர்கள் அதிக அக்கரை காட்ட வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ் உத்தரவு போட்டிருக்கிறது.  ஏற்கனவே ஊழல்களால் காங்கிரஸ் சரிவை கண்டிருக்கும் வேளையில், மோடி மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன்னை தேசிய அளவில் உயர்த்தி காட்ட முயன்றிருக்கிறார். செய்தி ஊடகங்கள் குஜராத்தை உள்நோக்கத்துடன் கொண்டாடி வருகின்றன.  இந்தநிலையில் தாம் ஏதாவது செய்யாவிட்டால் பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் தம் கனவுகள் திரிசங்கு வானத்தில் தான் மிதக்கும் என்று தெரியாதவரா அத்வானி. அதனால் தான் கிளம்பிவிட்டர் ரதத்திலேறி. ஆனால் மக்கள் முட்டாள்களல்லவே.

என்ன சொல்ல வருகிறார்கள் இந்த ரத யாத்திரை மூலம்?  சில நாட்கள் ரத யாத்திரை நடத்தி ஊழலை ஒழித்து விடுமளவுக்கு ஊழல் என்பது சதாரணமானது தான் என்கிறார்களா? அல்லது ஊழல் குறித்து மக்களுக்கு என்ன விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறார்கள்? ஊழல் செய்து கொண்டிருக்கும் ஊழல்வாதிகள் அந்த ஊழல்களால் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து நிற்கும் மக்களிடம் ஊழலுக்கு எதிராக என்னவிதமான பரப்புரை செய்வார்கள்?  ரதமாக மாற்றப்பட்டபேருந்தில் லிப்ட் உதவியுடன் கூரையில் ஏறி நின்று ஸ்விஸ் வங்கிகளில் இருக்கும்பணத்தை கொண்டுவந்தால் இந்தியக் கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தலாம், சாலை போடலாம், பள்ளிக் கூடம் கட்டலாம்.  ஆனால் இன்றைய காங்கிரஸ் அரசு ஆதர்ஸ், காமன்வெல்த், 2ஜி என ஊழல் செய்து கொண்டிருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.  சரி, பாஜக ஆளும்போது என்ன செய்தது? சவப்பெட்டி ஊழல் தொடங்கி எதியூரப்பாவின் நிலபேர ஊழல் வரையான கல்வெட்டுக்களை என்ன செய்வது?  மைய அரசிலோ, மாநிலங்களிலோ ஊழல் செய்யாத ஆட்சி எது? ஊழல் செய்யாத கட்சி என்று ஏதாவது உண்டா? இங்கு இருப்பதெல்லாம் இரண்டே வகை. ஒன்று, ஊழல் செய்து மாட்டியவர்கள், இன்னொன்று, இன்னும் மாட்டாதவர்கள். இதில் யாருக்கு யார் படம் காட்டுவது?

2ஜி, ஆதர்ஸ், காமன்வெல்த், சவப்பெட்டி, போபர்ஸ் இவை மட்டும் தான் ஊழலா?   இது வரை ஊழலுக்காக தண்டிக்கப் பட்டவர்கள் எத்தனை பேர்? கையூட்டு பெற்றதாய் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அதை ஊழலாக கொள்வதற்கு நமக்கு கற்றுத் தருகிறார்கள் இவர்கள். பொதுச் சொத்தை கொள்ளையடிக்கும் அத்தனையும் ஊழல் தான். அந்த வகையில் இந்த அரசும், இந்த அரசின் கொள்கையுமே ஊழல்தான்.  தமிழகத்தில் நோக்கியா நிறுவனத்திற்கு, குஜராத்தில் நானோ கார் தொழிற்சாலைக்கு தொழில் தொடங்க அந்தந்த நிறுவனங்கள் முதலீடாக போட்ட தொகையைவிட அதிகமாக மக்கள் வரிப்பணம் சலுகையாக கொட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதை முன்னேற்றம் என்பவர்கள் திட்டம் போட்டோ, சட்டம் போட்டோ, ரதயாத்திரை நடத்தியோ ஊழலை என்ன செய்வார்கள்? 2ஜியில் நாட்டுக்கு இரண்டு லட்சம் கோடி இழப்பு என்று கூறியவர்கள் இதுவரை இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டதில் எத்தனை லட்சம் லட்சம் கோடிகள் நாட்டிற்கு இழப்பு என்பதை கணக்குப் பார்க்கட்டும். இவைகளை ஏன் ஊழலாக காண மறுக்கிறார்கள். கடந்த ஓரிரு ஆண்டுகளில் மட்டும் நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளபடி ஐந்து லட்சம் கோடி முதலாளிகளுக்கு சலுகையாக கொடுத்திருக்கிறார்கள். இவைகளை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

இன்னும் சாலை காணாத கிராமங்களுக்கு, மின்சாரம் பாயாத கிராமங்களுக்கு, கல்விக் கூடங்கள் நுழையாத கிராமங்களுக்கு ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கொண்டுவந்தால் தான் முடியும் என்றால் தனியார் கல்லூரிகளும், தொழிற்சாலைகளும் மின்சாரத்தில் குளித்து பளபள சாலைகளில் தலை வாருவது எப்படி? ஸ்விஸ் வங்கிகளில் பணத்தை கருப்பாக பதுக்கி வைத்திருப்பவர்கள் யாவர்? நாட்டின் வளங்களை சுரண்டிக் கொள்ளையடிக்கும் தனியார் முதலாளிகளும், அவர்கள் வீசி எறிவதற்காய் காத்துக் கொண்டிருக்கும் ஓட்டுப் பொறுக்கிகளும் தானே. இவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் சேர்த்து வைத்திருப்பது கருப்பு வண்ணமென்றால் இங்கு குவித்து வைத்திருப்பதை என்ன வண்ணம் என்பது? நினைவிருக்கிறதா, கணக்கில் வராமல் வைத்திருக்கும் பணத்திற்கு கணக்கு காட்டுங்கள்,உங்கள் அபராதம் தள்ளுபடி செய்யப்படுவதோடு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என அறிவித்ததற்காக ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்று போற்றப்பட்டார் சிதம்பரம். ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்களை அறிவித்தால் சட்டச் சிக்கல் வரும் என்றார் மன்மோகன் சிங். பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பதற்காகவே தனி அமைச்சரவையை ஏற்படுத்தியது பாஜக. பங்குச் சந்தையை வீழச் செய்வோம் என்று லேசாக மிரட்டியதற்கே வைப்பு நிதியை சந்தையில் கொட்டினார் வாஜ்பாய்.  இவர்கள் ஊழலை ஒழிப்போம் என்று கூறினால், நாம் எந்த வாயால் சிரிப்பது?

இந்த ஓட்டுப் பொறுக்கிகள் பொழுதுபோகாமல் நடத்தும் கூத்துகளில் ஊழல் ஒழிந்துவிடும் என நம்பினால் இருக்கும் கோமணமும் களவாடப்படுவது தெரியாமல் போய்விடும்.  இவர்களை ஓட்டுப் போடாமல் தண்டித்துவிட்டால் திருந்தி விடுவார்கள் என்று நம்பினால் அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் கொள்ளி.  இவர்களை ஓடுமொத்தமாய் விரட்டியடிக்காதவரை ஊழல் ஒழியப் போவதும் இல்லை.  மக்களுக்கான வாழ்வு மலரப் போவதும் இல்லை.



________________________________________________________________
           

புதிய அமைப்புகள் உதயமான வேளை...                            
1936 ஏப்ரலில் தேசிய காங்கிரஸ் லக்னோவில் கூடியது. இந்த மாநாடு ஜவஹர்லால் நேரு வின் தலைமையில் நடை பெற்றது. அன்று சோஷலி சம் பேசிவந்த நேருஜியின் தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது என்பது காங் கிரசிலிருந்த சோஷலிஸ்டு களுக்குப் பெரிதும் உற்சா கம் தருவதாய் இருந்தது. அவரும் தனது தலைமை யுரையில் பாசிச எதிர்ப்பு உணர்ச்சியை வெளிப்படுத் தினார். தொழிலாளர் மற் றும் விவசாயிகள் அமைப்பு களைக் கூட்டாக காங்கிர சிலே இணைக்க வேண்டும் எனும் தீர்மானத்தை நேருஜி கொண்டு வந்தார். ஆனால் காங்கிரஸ் காரியக் கமிட்டி யில் இத்தீர்மானத்திற்கு ஆத ரவாக 16 வாக்குகளும், எதி ராக 35 வாக்குகளும் விழுந்து அது தோற்கடிக்கப்பட்டது. எனினும் இப்பிரச்சனையை மேலும் பரிசீலிப்பதற்காக மக் கள் தொடர்புக்குழு ஒன்றை அமைக்க கமிட்டி ஒப்புக் கொண்டது. காங்கிரஸ் காரி யக் கமிட்டியில் ஜெயப்பிர காஷ் நாராயண், ஆச்சார்யா நரேந்திரதேவ், அச்சுத் பட்வர்தன் போன்ற காங்கி ரஸ் சோஷலிஸ்டுகள் சேர்த் துக் கொள்ளப்பட்டனர்.

இந்த லக்னோ மாநாட் டின்போதுதான் ‘அகில இந்திய விவசாயிகள் சங்கம்’ (ஹடட ஐனேயை முளையn ளுயbாய) உரு வானது. அங்கே நடைபெற்ற அதன் முதல் மாநாடு ஏகாதி பத்திய எதிர்ப்புப் புரட்சிக் குத் தனது ஆதரவைத் தெரி வித்தது. ‘பொருளாதாரச் சுரண்டலிலிருந்து முழு விடுதலை பெறுவது, விவசா யிகளுக்கும் தொழிலாளர் களுக்கும் அரசியல் அதிகா ரத்தைப் பெற்றுத் தருவது என்பது சங்கத்தின் குறிக் கோள்’ என மாநாட்டு அறிக்கை கூறியது. ஜமீன்தாரி முறையை ஒழித் துக் கட்டுவது என்பது உள் ளிட்ட அதிகபட்ச திட்ட மும், கடன் வசூல் நிறுத்தி வைப்பு, நிலத்தீர்வை ஒழிப்பு, குத்தகை குறைப்பு, விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலி, கரும்பு போன்ற பணப்பயிர்களுக்கு நியாயவிலை போன்றவை உள்ளிட்ட குறைந்தபட்ச திட்டமும் மாநாட்டில் ஏற் கப்பட்டன.

தேசிய விடுதலை இயக் கத்தில் பங்கு கொண்டிருந்த சுவாமி சகஜானந்த சரஸ்வதி 1929இல் பீகாரில் விவசாயி கள் சங்கத்தை உருவாக்கி யிருந்தார். வங்காளத்தில் கம்யூனிஸ்டுகளாகிய முசா பர் அகமதுவும், பங்கிம் முகர் ஜியும் விவசாயிகள் சங் கத்தை ஏற்படுத்தியிருந்தனர். ஐக்கிய மாகாணத்தில் நரேந் திர தேவாயும், குஜராத்தில் இந்துலால் யக்னிக்கும் இப் பணியை ஆற்றியிருந்தனர். என்.ஜி. ரங்கா ஆந்திரத்தில் விவசாய இயக்கத்தினை ஸ்தாபித்த தலைவர்களுள் ஒருவராயிருந்தார். இவர்க ளின் முன்முயற்சியினால் உருவானதுதான் அகில இந் திய விவசாயிகள் சங்கம். இந்த அமைப்பு மாநாட்டில் இ. எம்.எஸ். நம்பூதிரிபாடும் கலந்துகொண்டார். ஏகாதி பத்தியத்திற்கும், நிலப்பிரபுத் துவத்திற்கும் எதிராக கிரா மப்புற மக்களைத் திரட்ட வேண்டும் என்கிற உணர்வு இவர்களை எல்லாம் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்திருந்தது.

கிட்டத்தட்ட இதே காலத் தில்தான் ‘அகில இந்திய மாணவர் சம்மேளனமும்’ பிறப்பெடுத்ததாய்த் தெரிகி றது. இந்த அமைப்புகளில் எல்லாம் கம்யூனிஸ்டுகளும், பல காங்கிரஸ் சோஷலிஸ்டு களும் ஆர்வமாய்ப் பணி யாற்றத் துவங்கினர். இந்திய கம்யூனிஸ்டுகள் சமுதாயத் தின் பல துறைகளிலும் இறங் கிப் பணியாற்றத் துவங்கி விட்டதை இவையெல்லாம் உணர்த்துகின்றன.

லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ‘தேசிய காங்கிரஸ் மாநாட்டுப் பிரதி நிதிகளுக்கு வேண்டுகோள்’ ஒன்றும் ‘ஏகாதிபத்திய எதிர்ப் புப் போராட்ட வீரர்களுக்கு கம்யூனிஸ்டு கட்சியின் வேண்டுகோள்’ ஒன்றும் விநியோகிக்கப்பட்டது. அவ்வமயம் லக்னோவில் கம்யூனிஸ்டு கட்சியின் மத் தியக் குழுக் கூட்டமும் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவது மாநாட்டு முடிவு களை இந்திய நிலைமைக்கு ஏற்ப எப்படி நடைமுறைப் படுத்துவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இயல் பாகவே தத்-பிராட்லே ஆய் வறிக்கை தீவிரமாக ஆராயப் பட்டது. தேசிய காங்கிரசில் சேருவது என முடிவு செய் யப்பட்டது. காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சி பற்றியும் மறுமதிப்பீடு செய்யப்பட் டது. லக்னோ காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த அக்கட்சித் தலைவர்களு டன் கம்யூனிஸ்டுகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து எஸ்.வி. காட்டே கூறியிருக்கிறார்.

‘அங்கு (லக்னோவில்) நானும் பி.சி. ஜோஷியும் ஜெயப்பிரகாஷ் நாராய ணனைச் சந்தித்தோம். காங் கிரஸ் சோஷலிஸ்டு கட்சி யும், எங்கள் கட்சியும் ஒன் றாக வேலை செய்வது என் றும், காங்கிரஸ் சோஷ லிஸ்டு கட்சி இருக்கும் இடங் களில் அதனை நாங்கள் ஊக் கப்படுத்துவது என்றும் ஒப் புக்கொண்டோம்’.

இதே 1936இல் ஏஐடியுசி யும் அப்பொழுதுதான் உரு வாகியிருந்த அகில இந்திய விவசாயிகள் சங்கமும் காங் கிரசிலே ஒரு குழுவாகச் சேரு வது என முடிவு செய்தன. ஆனால், ஏற்கெனவே சுட் டிக் காட்டியிருப்பது போன்று காங்கிரஸ் தலைமை குழுவாகச் சேர்த் துக் கொள்வதிலே தயக்கம் காட்டியது. எனவே, பெரும் பாலான கம்யூனிஸ்டுகள் தனிப்பட்ட முறையில் காங் கிரசிலே இணைந்தனர். காங் கிரஸ் சோஷலிஸ்டு கட்சி யினை மாகாணங்களில் வளர்க்கப் பாடுபடத் துவங்கினர்.

இதன் பொருள் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கலைக் கப்பட்டுவிட்டது என்ப தல்ல. அது இருந்தது; இயங் கியது. கட்சி தடை செய் யப்பட்டிருந்த அந்த நிலை யில் மக்களை அணுகவும், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தி களையும் சோஷலிச சிந்த னையாளர்களையும் ஒன்று திரட்டவும் இப்படி காங்கி ரஸ் சோஷலிஸ்டு கட்சியில் இணைந்து பணியாற்றியது கம்யூனிஸ்டுகளுக்குப் பேருதவியாக இருந்தது.

நன்றி: இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு.[தீக்கதிர்]

---------------------------------------------------------------------------------------------------------------------------------
செல்வச்செழிப்பில் அமைச்சர்கள்
                                                                                                 -பி. சாய்நாத்
ஏர் இந்தியா விமான நிறுவனம் நாம் விரும்பிய வண்ணம் செயல்படாமல் இருக்க லாம். ஆனால் கடன் மேகங்களுக்குள் அதனை அச்சமின்றி பறக்கவிட்டவர்களின் நிலை நன்றாகவே இருக்கிறது. விமானப் போக்குவரத்துத்துறையின் அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேலின் சொத்துக்கள் 2009 மே மாதம் முதல் 2011 ஆகஸ்டு வரை யிலான 28 மாதங்களில் தினமும் சராசரியாக ரூ.5லட்சம் என்ற அளவில் அதிகரித்திருக் கிறது. இது அவரே கொடுத்துள்ள கணக்கின் படி அறியப்படும் விபரம். இதுபோன்றவிஷயங் களில் நமது அமைச்சர்களெல்லாம் மிகவும் தன்னடக்கத்துடன் செயல்படக்கூடியவர்கள் என்பதால், இது உண்மை மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கக் கூடும். ஆனாலும் அதிகாரப்பூர்வ விபரங் களின்படி கணக்கிடவேண்டும் என்பது தவிர்க்கமுடியாதது.

2009 தேர்தலின் போது பிரபுல் பட்டேல் அளித்த பிரமாண வாக்கு மூலத்தின்படி அவரது சொத்து மதிப்பு ரூ.79 கோடி. தேர்தல் நடைபெற்றது மே மாதத்தில் என்பதால் ஏப்ரல் மாதம் வரை அவர் சேர்த்து வைத் திருந்த சொத்துக்களின் மதிப்பை அளித் திருப்பார் என்று நம்புவோம். இந்த மாதத்தில் பிரதமர் அலுவலகம் தனது இணைய தளத் தில் அவரது சொத்துக்களின் மதிப்பாக கொடுத்துள்ள தொகை ரூ.122 கோடி. இந்த அதிகரிப்பு 28 மாதங்களில் நிகழ்ந்துள்ளது என்பதால் எனது கணக்கின் படி அவர் சரா சரியாக தினமும் ரூ.5லட்சம் சேர்த்துள்ளார்.

இதற்கிடையே பிரபுல் பட்டேல் பொறுப் பில் இருந்த ஏர்இந்தியா விமானக்கம்பெனி தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இந்த விமானக் கம்பெனியின் 40 சதவீத ஊழியர் களின் ஓராண்டு சம்பளத்தை பிரபுல் பட் டேல் என்ற ஒரு நபரே சம்பாதித்துள்ளார். எனவே விமானக்கம்பெனி தரை தட்டிப் போனாலும் பட்டேல் விண்ணில் உயரப் பறந்து கொண்டிருக்கிறார். தனியார் நிறுவனங் கள் நலிவடைந்தாலும் அதன் உடைமை யாளர்கள் செழிப்பாகத்தான் இருக்கின்றனர் என்று தொழில் மறுசீரமைப்பு வாரியத்தின் தலைவர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் னர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. (இந்த சமன்பாடுகளுக்குள் தொழில் நிறு வனத் தலைவர்களையும் கொண்டுவந்தால் அது மலைப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆனால் அது வேறு கதை)பிரபுல் பட்டேல் ஆற்றிய மிகச்சிறந்த பணிகளுக்காக அவ ருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டு, கனரகத் தொழில் துறை அமைச்சர் என்ற பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக மத்திய அமைச்சர் களின் சொத்துக்களை எடுத்துக்கொண்டால் ஒரு அமைச்சரின் சராசரி சொத்து ரூ. 7.3 கோடியிலிருந்து ரூ10.6 கோடியாக அதி கரித்துள்ளது. அதாவது மாதத்துக்கு அதிக மில்லை வெறும் பத்து லட்சம் தான். பட்டேல் தான் அமைச்சர்களுக்குள் எல்லாம் மிகவும் பணக்காரர். ஆனால் வேகமான வளர்ச்சி பெற்றவர் என்ற புகழுக்கு சொந்தமானவர் திமுகவின் ஜெகத்ரட்சகன்தான். பட்டேலின் சொத்து மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு 53 சதவீதம் என்ற அளவில் தான் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஜெகத்ரட்சகனோ 1092 சதவீதம் அளவில் மின்னல் வேக வளர்ச்சியைப் பெற் றுள்ளார். 2009ல் அவரது சொத்துக்களின் மதிப்பு ரூ.5.9 கோடி. அது தற்போது ரூ.70 கோடியாக அதாவது பன்னிரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. சொத்து சேர்ப்பதில் இளைய தலைமுறையைச்சேர்ந்த அமைச்சர்கள் சற்றும் பின்தங்கிவிடவில்லை. தகவல் தொடர்புத்துறை அமைச்சரான மிலின்ட் தியோரா என்ற இளைஞரின் சொத்து மதிப்பு 2004ல் ரூ.8.8 கோடி. 2009ல் இது ரூ.17 கோடி யாக அதிகரித்தது. இப்போது அது ரூ.33 கோடியாக உயர்ந்துள்ளது. ஏழு ஆண்டுகளில் அவரது சொத்துக்கள் சராசரியாக தினம் ஒரு லட்சம் அளவில் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் மொத்தமாகக் கணக்கிட்டால் ஏழு ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரித்துள்ளது. இது ஒன்றும் மோசம் என்று கூறமுடியாது. இவரோடு ஒப்பிட்டால் விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் வளர்ச்சி திருப்திக ரமாக இல்லை. அவரது சொத்து 28 மாதங் களில் வெறும் ரூ.4 கோடி தான் அதிகரித்து ரூ.12.5 கோடியை எட்டியுள்ளது. ஆனால் அவரது மாநிலத்தில் வேறுவிதமாகப் பேசிக்கொள்கிறார்கள். எந்த கணக்கை கொடுப்பது என்பதில் அவருக்குக் குழப்பம் ஏற்பட்டதால், மொத்த சொத்துக் கணக்கைக் கொடுப்பதற்கு பதிலாக அவர் மாதாந்திர வருவாய்க் கணக்கைக் கொடுத்துவிட்டார் என்று பேசிக் கொள்கிறார்கள்.

மிதமான அளவில் சாதனை நிகழ்த்தியுள் ளார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான விலாஸ்ராவ் தேஷ்முக். 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வெறும் ரூ1.73 கோடி சொத்துக்களைத்தான் இவர் சேர்த்துள்ளார். மன்மோகன் அமைச் சரவையில் கிரிக்கெட் விளையாட்டுடன் சம் பந்தப்பட்ட கும்பலின் நிலை மிகச்சிறப் பாகவே உள்ளது. ஐபிஎல் அமைப்பின் புதிய தலைவரான ராஜீவ் சுக்லாவின் சொத்து மதிப்பு இக்காலத்தில் ரூ.7கோடியிலிருந்து 30 கோடியாக அதிகரித்துள்ளது.

இப்போது அமைச்சர்களாக இருப்பவர் கள் மற்றும் மத்திய அமைச்சர்களாக இருப் பவர்களின் சொத்துக்கள் மட்டுமே அதிகரித் துள்ளதாகக் கருதக்கூடாது. வேறு சிலரும் மேல் நோக்கி உயர்ந்துள்ளனர். இது போன்ற விஷயங்களில் எனது சொந்த மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா போன்றவை கின்னஸ் சாதனையை நிகழ்த்தக்கூடியவை. (தமிழ் நாடும் ஒரு விதத்தில் எனது சொந்த மாநிலமே. எனவே ஜெகத்ரட்சகனையும் சேர்த்துக்கொண்டால் எனது சொந்த ஊர்க் காரர்களின் பெருமையை சொல்லிமாளாது)

ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரத் தில் இல்லை. ஆனால் இது அவரது முனைப் பான செயல்பாட்டுக்கு இடைஞ்சலாக இருக்கவில்லை. 2009 ஏப்ரலில் ரூ.72 கோடிக்கு சற்று குறைவாக இருந்த சொத்து மதிப்பு 24 மாதங்களில் ரூ.357 கோடியாக அதி கரித்துள்ளது. தினமும் சராசரியாக ரூ. 50 லட்சத்தை இவர் சேர்த்துள்ளார். பலமுனைத் தாக்குதல்களுக்கு தொடர்ந்து உள்ளாகி வரும் நிலையிலும் இவர் நிகழ்த்தியுள்ள சாதனை அற்பமானதல்ல. அடுத்த தலைமுறை அரசி யல்வாதிகளெல்லாம் கூடுதல் விசையியக் கம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று அரசியல் பண்டிதர்கள் கூறுவதை நிரூபிப்ப தாக இது இருக்கிறது அல்லவா. ஐயோ பாவம் சந்திரபாபு நாயுடுதான் ஏழையாகிவிட்டார். அன்னா ஹசாரே ஏற்படுத்திய புதிய சூழலில் முன்னாள் ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு தானே முன்வந்து தனது சொத்து விபரங்களை அறிவித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 40 லட்சம் கூட தேறாது. அதனால் சாப்பாட்டுக்கே அவர் கஷ்டப் படுவதாக நினைத்துவிடாதீர்கள். அவரது மனைவியின் சொத்துமதிப்பு ரூ.40 கோடியை எட்டியுள்ளது. அவரது ஆடிட்டர்கள், அவரது ஜூபிலி வீட்டின் மதிப்பை அதை வாங்கிய விலையான ரூ.23.20 லட்சம் என்றே குறிப்பிட்டுள்ளனர். 10000 சதுரஅடி கொண்ட அந்த மாளிகையின் மதிப்பை அவரே 2009 தேர்தலின் போது ரூ.9 கோடி என்று தெரிவித் துள்ளார்.

மந்திரிகளின் செல்வம் மட்டுமல்ல, சட்ட மன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத் துக்களும் கூட தாறுமாறாக அதிகரித்துள் ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் 2004 ம் ஆண் டில் 108 ஆக இருந்த கோடீசுவரர்களின் எண்ணிக்கை 2009ல் 186 ஆக அதிகரித்துள் ளது. மத்திய அமைச்சர்களில் முக்கால் வாசிப்பேர் கோடீசுவரர்களே. இவர்கள் பதவி களில் இருந்த போதுதான் புதிய செல் வத்தை சேர்த்துள்ளனர். இவ்வாறு சொத்து விபரங்களை அறிவித்துவிட்டால் மட்டும் போதாது. அவர்கள் செலுத்தும் வருமான வரி விபரங்களும், அவர்கள் வருமான வரி அலு வலகத்துக்கு அளிக்கும் ஆண்டு வருமானக் கணக்குகளும் கூட இணையதளங்களின் மூலம் வெளியிடப்படவேண்டும். சொத்துக் கணக்குகளை முழுமையாக அளிக்காமல் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். கவனமான கணக்குத் தணிக்கை தேவைப்படுகிறது. பதவியில் இருக்கும்போது இவர்களால் தினமும் ரூ. 5லட்சத்தை எவ்வாறு சேர்க்க முடிகிறது. எனவே வெறுமனே சொத்து விபரங்களை அறிவிப்பது மட்டும் போதுமானதல்ல. ஒரு வரின் சொத்துக்கள் நம்ப முடியாத அளவுக்கு மிகவும் அதிகமாக இருந்தால், அது எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பது குறித்த விசாரணை யும் தேவைப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் நகர்ப்புற இந்தி யாவில் வறுமைக்கோட்டைத் தீர்மானிப் பதற்கு ரூ.20 தினச் செலவும் கிராமப்புறங் களில் ரூ.15 தினச்செலவும் போதுமானதாக திட்டக்குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித் தது. இதனை இப்போது 20லிருந்து 25 ஆக தாராளமாக உயர்த்துவதற்கு அது முன்வந்துள் ளது. முறைசாராத் தொழிலாளர் நிலை குறித்த அர்ஜூன் சென்குப்தா குழுவின் அறிக்கை யை நாம் அறிவோம். 83.6 கோடி இந்தியர்கள் தினமும் ரூ.20 அல்லது அதற்குக் குறைவாக செலவு செய்து வாழ்க்கை நடத்துகின்றனர் என்று அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோடீசுவரர் சங்க உறுப்பினர்கள் அந்த ஏழை மக்களின் பிரதிநிதிகளாக எப்படி செயல்படுகிறார்கள் அல்லது அவர்கள் துவக்கத்தில் அவ்வாறு செயல்பட்டுவிட்டு பின்னர் விரைவாக இணைப்பை இழந்து விடுகிறார்களா, இதனை எவ்வாறு கட்டுப் படுத்துவது, இதுகுறித்து சிந்திக்க வேண்டி யுள்ளது. அதேபோல கடந்த 20 ஆண்டு களில் ஏற்பட்ட ஆழமான மாற்றங்கள் இந்த கோடீசுவரர்களைத் தவிர மற்றவர்களைத் தேர்தல்களில் போட்டியிடக்கூட முடியாத படி (வெல்வதைப்பற்றி பேசவேண்டாம்) செய்துவிட்டதா
.

ஆதாரம் : தி இந்து (21.9.2011) 

தமிழில்: கி.இலக்குவன்

==========================================

பலவீனமாகும் 2ஜி வழக்கு- யாரைக் காப்பாற்ற?


ஆறு மாதங்களுக்கு முன் 2 ஜி (இரண்டாம் தலைமுறை) அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒருகோடியே 76 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த குற் றச்சாட்டு நாட்டை ஓர் உலுக்கு உலுக்கியது. காரணம், அந்தக் குற்றச்சாட்டை பொது அரங் கில் வைத்தது எதிர்க்கட்சிகள் அல்ல. ஊட கங்கள் அல்ல. அரசை விமர்சிக்கும் சமூக நல ஆர்வலர்கள் அல்ல. விக்கிலீக்ஸ் அல்ல. அந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டவர் தேர் தல் கமிஷன் போல அரசமைப்புச் சட்டத் தால் சுயாட்சி வழங்கப்பட்ட மத்திய கணக்கு மற்றும் தணிக்கை ஆணையர்(ஊஹழு).

அதையடுத்து அரசியல் அரங்கம் பரபரப் பானது. ஊடகங்கள் உரத்து முழங்கின. நாடா ளுமன்றம் செயல்பட முடியாமல் நாள் கணக் கில் முடக்கப்பட்டது. தொலைத் தொடர்புத் துறைக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குத் தொடர பிரதமர் அனு மதி அளித்தார். ராசா ராஜினாமா செய்தார். மத் தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத் தரவாயிற்று. ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். சாதிக் பாட்சா என்ற அவரது நண்பர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். சதியில் கூட்டு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி கைது செய்யப்பட்டார். இந்தியாவின் முக்கியமான தொலைத் தொடர்பு நிறுவனங் களின் முதல் நிலை அதிகாரிகள் கைது செய் யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டு அனைவரும் இன்னும் சிறையிலேயே இருக்கிறார்கள்.

இதையெல்லாம் இன்னும் நாடு மறந்து விடவில்லை. இதற்கெல்லாம் ஆதாரமான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறை கேடுகளால் அரசுக்கு கோடிக்கணக்கில் வரு வாய் இழப்பு ஏற்பட்டது என்பதையும் மறந்து விடவில்லை. அதிலும் முக்கியமாக, அரசுக்கு இழப்பு ஏற்பட்டதே தவிர அரசியல்வாதிகள், அவர்களது நிறுவனங்கள் ஆதாயம் அடைந் தன என்பதையும் மக்கள் மறந்து விடவில்லை.

ஆனால்- வரும் செப்டம்பர் 15ம் தேதி சிபிஐ 2 ஜி வழக்கில் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிருக்கும் நேரத்தில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம் (டிராய்) ஓசைப்படாமல் ஒரு குண்டை வீசி இவை அனைத்தையும் அர்த்தமில்லாத தாகச் செய்திருக்கிறது.

அது என்ன அணுகுண்டு?

‘அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்று துல்லிய மாகச் சொல்வதற்கில்லை’ என்கிறது டிராய். அது மட்டுமல்ல, ராசா அரசின் கொள்கை களைத்தான் கடைப்பிடித்தார் என்றும் சொல்கிறது.

அ ப்படி நினைப்பதற்கான காரணங்கள் என்ன?

ஒருவர் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதைச் சட்டம் இரண்டு அம்சங்களின் அடிப்படை யில் தீர்மானிக்கிறது. குற்ற நோக்கம் (அநளே சநய), குற்றச் செயல் (யஉவரள சநரள) என்பவை அந்த அம் சங்கள். இந்த இரண்டையும் சந்தேகத்திற்கு இடமில்லாத சாட்சியங்கள் மூலம் நிரூபித் தால் தான் சம்பந்தப்பட்டவர் குற்றம் புரிந்தார் எனக் கருதப்பட்டு தண்டனை அளிக்கப்படும். ராசா, அரசின் கொள்கைகளைத்தான் பின்பற் றினார் என்றால் அவருக்கு குற்ற நோக்கம் இல்லை என்று கருதப்பட வாய்ப்புண்டு. ஏனெனில் அவரது நோக்கம் அரசின் கொள் கைகளை நடைமுறைப்படுத்துவது. குற்றம் செய்வதல்ல. அப்படி நடைமுறைப்படுத்திய தன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏதும் இல்லை என்றால் அங்கே குற்றச் செயலும் நடைபெறவில்லை என்று தான் கருதப்படும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதைத்தான் ராசா, தான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ராசா மற்றும் கனிமொழியின் வழக்கறிஞர் சுஷீல் குமார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன் வைத்த வாதங்கள் இவை: 2 ஜி அலைக் கற்றையை ஏலம் விட வேண்டாம் என்பது அரசின் கொள்கை முடிவு; அதனால் தான் ஏலம் விடவில்லை; எனவே ஏலம் விட்டிருந் தால் இவ்வளவு பணம் வந்திருக்கும், விடாத தால் அது அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை; இழப்பு இல்லை என்னும் போது மோசடி என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரது இன்னொரு வாதம்: அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் டெலி காம் பிரைவேட் லிமிட்டெட், யூனிடெக் வயர் லெஸ் (தமிழ்நாடு) பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனங்கள் தங்கள் உரிமங்களை விற்கவில்லை, தங்கள் நிறுவனங்களின் பங் குகளை அரசின் அனுமதி பெற்று அயல் நாட்டு நிறுவனங்களான எடிஸாலட், டெலி னார் நிறுவனங்களுக்கு விற்று தங்கள் மூல தனத்தை விரிவுபடுத்திக் கொண்டன. இதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை.
                                                     
ஏறத்தாழ இதே குரலில் பேசுகிறது டிராய். தவறேதும் நடக்கவில்லை, இழப்பேதும் ஏற்படவில்லை என்றால் அன்று ஏன் அரசு, ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கொடுத் தது? ஏன் அவரைப் பதவி விலகச் சொன் னது? அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டது? அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது? அவரது ஜாமீன் மனுவை எதிர்த்து வழக்காடியது? இதையெல்லாம் செய்த அரசு இப்போது ஏன் குரல் மாற்றிப் பேசுகிறது?

அதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இன்னொரு செய்தியைக் கவனிக்க வேண்டும்.

ராசாவும் கனிமொழியும் ஏலம் விட வேண் டாம் என்ற முடிவை எடுத்தது நாங்களல்ல என்ற வாதத்தை மட்டும் வைக்கவில்லை. அதை எடுத்தது பிரதமரும் மற்ற அமைச்சர் களும் தான் என்று பிரதமரையும் வழக்கிற்குள் இழுத்தனர். “நான் உங்களுக்குக் காண்பிப்பது பிரதமர், அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்ட கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்பு (அiரேவநள) இந்தக் கூட்டத்தில் 2 ஜி அலைக்கற்றையை ஏலம் விடவோ, விற்க வோ கூடாது என்று முடிவெடுக்கப்பட்டிருப் பதைப் பாருங்கள்” என்று நடவடிக்கைக் குறிப்பை நீதிபதி முன் வைக்கிறார் சுஷீல் குமார். “உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அயல்நாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் விஷயம் பிரதமருக்கும் நிதி அமைச் சருக்கும் தெரியும். அன்றைய நிதி அமைச்சர், இன்றைய உள்துறை அமைச்சர், பங்குகளை விற்பது 2ஜி உரிமங்களை விற்பதாகாது என்று பிரதமரின் முன்னிலையில் கூறினார். முடிந் தால் இதை பிரதமர் மறுக்கட்டும்” என்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏதே னும் முறைகேடுகள் இருந்தால் அதை பிரத மர் ஒரு அமைச்சர் குழுவை அமைத்து விசா ரித்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை என்பது இன்னொரு வாதம்.

ராசாவும் கனிமொழியும் சிதம்பரத்தை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக விசாரிக்க வேண் டும் எனவும் கோரியுள்ளனர்.

இதெல்லாம் நடந்தது ஆகஸ்ட் 23ம்தேதி. பிரதமர், சிதம்பரம் ஆகியோரது பெயர்கள் இழுக்கப்பட்டதற்கு ஒரு வாரத்திற்குப் பின் டிராய், அணுகுண்டைப் போடுகிறது.

டிராய் அறிக்கை வெளியான அதே செப் டம்பர் 1ம் தேதி சிபிஐயிடமிருந்து வேறு மூன்று தகவல்கள் வெளி வருகின்றன.

ஒன்று, உச்சநீதிமன்றத்தில் 2 ஜி அலைக் கற்றை வழக்கின் தற்போதைய நிலவரம் பற்றி அது தாக்கல் செய்த அறிக்கை. அதில் ஏர் செல் நிறுவனத்தை மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு தயாநிதிமாறன் வற்புறுத்தியதாக வோ, நெருக்கடி கொடுத்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை எனச் சொல்லியிருக்கிறது.

மற்ற இரண்டு தகவல்களும் அலைக்கற் றை வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டவை அவை: அம்பானி யோடு தொடர்புடையதாகச் சொல்லப்படும், உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் - ஏடிஏஜிக்கு எந்தச் சதியிலும் பங்கில்லை என்பது ஒன்று. மற்றொன்று, அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பலனடைந் ததாகக் கூறப்படும் யூனிடெக் நிறுவனம் லஞ் சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது.

லஞ்சம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மையானால் லஞ்சம் பெறப்படவில்லை என்பதும் உண்மையாகி விடுமல்லவா?

இவை எல்லாம் எதைக் காட்டுகிறது?

2 ஜி வழக்கில் இன்று குற்றம் சாட்டப்பட் டுள்ளவர்களில் பலர் எந்தவிதத் தண்டனை யும் இன்றி விரைவிலேயே வெளியில் வந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என் பதைத்தான். வேறு வார்த்தைகளில் சொல்வ தானால் 2 ஜி வழக்கு தீபாவளிக்கு முன்னரே கூட புஸ்வாணமாகலாம்.

ஆனால், இன்னொரு புறம் உச்சநீதிமன் றத்தின் கண்காணிப்பு இருப்பதால், அரசு இந்த வழக்கில் தீவிரமாக இருப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறது. 2 ஜி ஊழல் புகாரில் தொடர்புள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அன்னியச் செலா வணி விதிகளை மீறியிருப்பதாக அமலாக்கப் பிரிவு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கி றது. இதில் 200 வங்கிக் கணக்குகள் சம்பந் தப்பட்டிருப்பதாகவும், ஆறு கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும், கள்ளப் பணத்தை ‘சலவை’ செய்வதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் சொத்துக்களை முடக்கப் போவதாகவும் அது தெரிவிக்கிறது. சைப்ரஸ், சிங்கப்பூர், சானல் தீவுகள், மொரீஷியஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பணம் பதுக்க/முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவதாகவும் அது கூறியிருக்கிறது.

அதாவது, அரசின் ஒரு துறையான டிராய் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று சொல்கிறது. அதே நேரம் இன்னொரு அரசுத் துறையான அமலாக்கப் பிரிவு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்தி ருப்பதாகச் சொல்கிறது!

அன்னா ஹசாரேயின் அறப்போராட்டம் அரசுக்குப் பல விதங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. கூச்சல் குழப்பங்களுக்கு நடுவே நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டி ருந்த விவாதம், மக்கள் மன்றத்திற்கு வருவ தற்கு அந்தப்போராட்டம் காரணமாயிற்று. அந் தப் போராட்டம் அத்தனை பெரிய அளவில் எழுச்சி பெற, ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் குறித்த செய்திகள் மக்கள் மனதில் இருந்தது ஒரு மறைமுகக் காரணம் என்று அரசியல் ஆய்வா ளர்கள் சொல்லி வருகிறார்கள்.
                 
ஸ்பெக்ட்ரம் வழக்கை ஒரு புறம் நீர்த்துப் போகச் செய்து கொண்டிருக்கும் வேளை யில், அன்னா ஹசாரேவையும் கட்டுக்குள் வைக்க அரசு முனைந்திருக்கிறது. அவருக்கு வலதுகரமாக இருந்து போராட்டத்தை கட்டமைக்க உதவிய கிரண்பேடி, பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மீது நாடாளுமன்றத்தின் உரிமைகளை மீறியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நாடாளு மன்ற உறுப்பினர்களைப் பற்றித் தரக்குறை வாகப் பேசியதாகப் புகார். உரிமை மீறல் நிகழ்த் தப்பட்டதா இல்லையா என்று முடிவு செய் வது நீதிமன்றம் அல்ல. நாடாளுமன்றம் தான். எனவே அந்த முடிவு என்னவாக இருந்தா லும் அவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங் கிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு புறம் தன் மகன் பிரசாந்த் பூஷன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு வரை விலைக்கு வாங்கலாம் என சாந்தி பூஷன், அமர்சிங்கிடம் நடத்திய உரையாடல் கொண்ட சிடி போலியானதல்ல என தில்லி போலீஸ் தெரிவித்திருக்கிறது. ‘இந்த உரை யாடல் போலியானது. வெட்டி ஒட்டப்பட்டது’ என பிரசாந்த் பூஷன் முன்பு மறுத்திருந்தார்.

முன்பு ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக வரு மான வரித்துறையில் பணியாற்றியபோது சில விதிமுறைகளை மீறிவிட்டார் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வருமானவரித்துறை நோட் டீஸ் அனுப்பியிருக்கிறது.

சமூக ஆர்வலர்களுக்கு சங்கடங்கள் ஏற் படுத்தும் அதே நேரம், கவனத்தை எதிர்க் கட்சிகள் மீது திருப்பவும் முயற்சிகள் நடக் கின்றன. செப்டம்பர் 1ம் தேதி சிபிஐயின் வழக் கறிஞர் கே.கே.வேணுகோபால், “மத்தியில் ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்ற போதும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விதி மீறல்கள் நடந்துள்ளன. அது தொடர்பாக அந்த அரசில் நிதி அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த அருண்ஷோரி ஆகியோர் விரைவில் சிபிஐ யால் விசாரிக்கப்படுவார்கள்” என்று தெரி வித்திருக்கிறார்.

இன்னொரு புறம் இன்றைய அமைச்சர்க ளின் கைகள் சுத்தமானவை எனக்கூறாமல் கூறுவதற்காக மத்திய அமைச்சர்களின் சொத்துக் கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளன. (பார்க்க : பெட்டிச் செய்தி)

ஒருபுறம் 2 ஜி வழக்கின் அடிப்படையை யே ஆட்டம் காணச் செய்யும் தகவல், இன் னொரு புறம் குற்றச்சாட்டுக்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள், மற்றொரு புறம் சமூக ஆர்வலர்களைக் களைத்துப் போகச் செய்யும் முயற்சி, வேறொரு புறம் கவனத்தை எதிர்க்கட்சிகள் மீது திருப்புதல் என மிகச் சாமர்த்தியமாக 2 ஜி விவகாரத்தில் காய்களை நகர்த்தி வருகிறது அரசு. இவற்றைப் பார்க்கும் போது நம் மனதில் எழும் கேள்வி ஒன்றுதான்.

இதெல்லாம் யாரைக் காப்பாற்ற?



சொத்து விஷயமும் சொந்த விஷயமும்

கடந்த வாரம் பிரதமர் அலுவலக இணையதளத்தில் மத்திய அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர்களில் பணக்கார அமைச்சர் கமல்நாத். அவருக்கு 263 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. ஏழை அமைச்சர் அந்தோணி. இவர் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் வங்கி டெபாசிட்டாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஆறுபேரில் சொத்து மதிப்பில் முதலிடத்தில் இருப்பவர் அழகிரி. இவருக்கும் மனைவி காந்தி அழகிரிக்கும் சேர்த்து சொத்து மதிப்பு 30 கோடி ரூபாய். இரண்டாவதாக இருப்பவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். சொத்து மதிப்பு 25 கோடி. நெப்போலியன் 13 கோடி. ஜி.கே.வாசன் 2.30 கோடி. பழனிமாணிக்கம் 1.53 கோடி. மிகக்குறைந்த சொத்து வைத்திருப்பவர் காந்தி செல்வன் 72.02 லட்சம்.

மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதால் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சொத்துப்பட்டியலை வெளியிடவேண்டும் எனச் சொல்லியிருந்தார். மூன்று முறை பிரதமர் வலியுறுத்திக் கேட்டபின் அமைச்சர்கள் விவரங்களைத் தெரிவித்துள்ளனர். அப்படியும் விவரம் தெரிவிக்காத சிலர் இருக்கிறார்கள். விலாஸ்ராவ் தேஷ்முக், ஜெயந்தி நடராஜன், ஜித்தேந்தர் சிங், ஜெகத்ரட்சகன் ஆகியோர் தவிர மற்றவர்களின் சொத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பலர் வீடு, நிலம் இவற்றின் சந்தை மதிப்பைக் குறிப்பிடாமல் அவர்கள் வாங்கின விலையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாக பிரபுல் படேல் மத்திய மும்பையில் உள்ள தனது இரண்டு ஃபிளாட்களின் மதிப்பு 6 லட்ச ரூபாய் என்று கொடுத்துள்ளார். ஆனால் இந்த விலைக்கு மும்பையில் குடிசைப் பகுதியில் கூட வீடு வாங்க முடியாது.

சிலர் சந்தை மதிப்பைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அதை மிகக்குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாக, பிரதமர் மன்மோகன் சிங் தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள தனது அபார்ட்மென்ட்டின் மதிப்பு 88.77 லட்சம் என்று கூறுகிறார். இந்த விலைக்கு அதை விற்க அவர் தயாராய் இருந்தால் வாங்குவதற்கு நீண்ட வரிசை காத்திருக்கும்.

இன்னும் பல அமைச்சர்கள் மதிப்புமிக்க சொத்துக்களை தங்கள் பெயரில் காட்டாமல் தங்களின் மனைவியின் பெயரில் காட்டியுள்ளனர். உதாரணமாக, அவர்களிடம் இரண்டு கார்கள் இருந்தால் அவற்றில் விலை உயர்ந்த கார் மனைவியினுடையதாக இருக்கும்.

இவற்றைவிட சுவாரஸ்யமான விஷயம்; நாட்டில் தனியார்மயத்தையும், தாராளமயக் கொள் கையையும் அறிமுகப்படுத்தியவர் மன்மோகன் சிங். அந்நிய முதலீடுகளைப் பற்றி அடிக்கடி பேசுபவர். அவர் தனது சொந்தப்பணமான 3.5 கோடி ரூபாயை எந்த வங்கியில் டெபாசிட்டாகப் போட்டிருக்கிறார் தெரியுமா? பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்
நன்றி;புதிய தலைமுறை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?