போதை அது அழிவு பாதை .
நவீன மருத்துவ முன்னேற்றம் காரணமாக ஆண்களின் ஆயுட்காலம் 67 வயதாக உயர்ந்திருக்கிறது. ஆனால், தகாத பழக்கங்களால் 50 வயதுக்குள்ளேயே தங்களை அழித்துக் கொள்கிற ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வேதனையானது. போதை பொருட்கள் பயன்படுத்தாத ஆண்களே இல்லை என்கிற அளவுக்கு இன்று பலரும் ஏதோ ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள். தவறான நண்பர்கள், பார்ட்டி கலாசாரம், திடீரென ஏற்படும் வேலை இழப்பு, காதல் தோல்வி, விவாகரத்து, பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம் என்று பல்வேறு காரணங்களால் தகாத பழக்கங்களுக்கு ஆளாகி, அதற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களே வெளியேற வேண்டும் என்று ஒரு கட்டத்தில் நினைத்தாலும் முடிவதில்லை. கொலைகள், தற்கொலைகள், விபத்துகள் என்று பெரும்பாலான ஆண்கள் இளவயதிலேயே உயிரிழப்பதன் பின்னாலும் இந்த போதை வஸ்துக்களே இருக்கின்றன. உடல்ரீதியான, மனரீதியான பல்வேறு பாதிப்புகளையும் ஆண்கள் இதனால் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தில் நன்மதிப்பும் கெட்டுப்போவதுடன், அவருடைய குடும்பத்தார் சந்திக்கும் துயரங்களும் வார்த்தைகளால் விவரிக்கக் கூடியதல்ல. போதைப் பொ...