ஒரு லட்சம் கோடி.,
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலங்களையும் விட தமிழகத்தில்தான் ஒரு லட்சம் கோடி அளவுக்கு தாது மணல் கொள்ளை நடந்து இருக்கிறது. இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எனினும், இந்த விஷயத்தில் மத்திய அரசு மவுனம் காத்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் கிரானைட் முறைகேடுகளை சென்னைஉயர் நீதிமன்றம் நியமித்துள்ள ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரித்து வருகிறார். ஆனால், கிரானைட் கொள்ளையைவிட தாதுமணலில் நடந்துள்ள கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ஒரு லட்சம் கோடி அளவுக்கு இந்த கொள்ளை நடந்து இருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் சிபிஐ இதை முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், வலியுறுத்தியுள்ளா ர். ஆனால், மத்திய, மாநில அரசுகள் தாதுமணல் கொள்ளை விவகாரத்தில் மவுனமே காக்கின்றன. இந்திய பொருளாதாரம், கடலோர கிராமங்களின் பாத...