இடுகைகள்

சிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்" மம்மி"க்கு சிலை?

படம்
சிலையாகிறார் "அம்மா" பிள்ளையை கிள்ளி  விட்டு தொட்டிலையும் ஆட்டும் பழமொழிக்கு இப்போதைய உதாரணம்  தமிழக முதல்வர்ஜெயலலி தாதான் . நடந்து கொண்டிருக்கும் அரசுப்பள்ளிகளில் மறைந்து வரும் தரத்தை மீட்க வழி செய்யாமல் அந்த பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை திணிக்கிறார். அதனால் யாருக்கும் பயன் இல்லை. காரைக்குடியில் உள்ள தமிழ்த் தாய் சிற்பம்  தாய் மொழிக்கல்விதான் ஒரு மாணவனை புரிந்து படிக்க செய்யும். ஆங்கிலம் வழி என்றால் வரும் மனனம் மட்டும்தான் செய்து மதிப்பெண்களை வாங்கி வருகிறார்கள். சுய புரிதல் அங்கு இல்லாமல் போய் விடுகிறது. உலகெங்கும் உள்ள கல்வியாளர்கள், மொழியில் வல்லுநர்கள், மக்கள் நல கல்வி இயக்கங்கள் தாய்மொழிவழி பயிற்சியே சுயமான சிந்தனை வளர்ச்சிக்கும் சரியான புரிதலோடு கூடிய கல்வி மேம்பாட்டிற்கும் ஏற்றது அறிவியல்பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.  தாய்மொழி அல்லாத வேறு மொழி வழியாகப் பயில்வது, திறமையான அடிமைகளை உருவாக்குமேயன்றி சுயமான அறிவியல் ஆராய்ச்சியாளர்களையோ, கண்டுபிடிப்பாளர்களையோ உருவாக்காது என்பதையும் அவர்கள...