இது ஆதிக்கப் பிரச்சினை
மொழிஅல்ல "உங்களுக்கு நான் பணிவன்போடு தெரிவித்துக் கொள்வேன். இதுமொழிப் பிரச்சினை அல்ல இது ஆதிக்கப் பிரச்சினையே தவிர மொழிஅல்ல... நாம் எந்த அளவிற்குப் பணியத் தயாராக இருக்கிறோம் என்பதை அளவிடுவதற்காக, அரசியல் ஆதிக்கக்காரர்கள், அரசியல்சூழ்ச்சிக்காரர்கள், ஏகாதிபத்திய வெறி கொண்டவர்கள், தங்களுடையமொழியைத் திணித்து 'இதைத்தான் நீ ஆட்சி மொழியாகக் கொள்ளவேண்டும். இதிலே தான் பாடங்கள் நடக்கும். இதி லேதான் தேர்வுகள் நடக்கும். இதிலேதான் சட்டங்கள் இயற்றப்படும். இந்த மொழியில்தான் நாடாளுமன்றத்தில் பேசுவார்கள். இது தெரிந்தால் இங்கெல்லாம் வா இது தெரியாவிட்டால் நீலகிரித் தோதுவர்களைப் போல், குருவிக்காரர்களைப் போல், ஆப்பிரிக்க நாட்டு நீக்ரோக்களைப் போல், நீயும் உன்னுடைய நாட்டோடு, கூட்டோடு, இரண்டாந்தரக் குடிமகனாய், மட்டரகமான மனிதனாய், ஏனோ தானோவாய், எடுப்பார் கைப்பிள்ளையாய் அடங்கிக் கிட' என்பதுதான் இதன் உட்பொரு ளாகும்" என்று - பேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார் ஒன்றிய பா.ஜ.க. அரசு. 'நாம் எந்த அளவுக்கு அடிபணியத் தயாராக இருக்கிறோம்' என்...