ஹிட்லரை விட ஒரு மோசமான
கொ ல்லைப்புறம் வழி கடந்த 23 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும் போது, நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அவற்றையெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு, தேவையில்லாமல் என்னைப் பற்றி பேசும் போது, இந்த தொகுதிக்கு சம்மந்தமில்லாத சென்னையில் யாரோ ஒருவர், எங்கிருந்தோ வந்தார் என்றும், தெரியாமல் வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள் என்றும் பேசியது, தொடர்ந்து சமுதாய மக்களால் தோற்றுவிக்கப்படுகின்றபோதும் உங்கள் விரக்தியையும், வயிற்றெரிச்சலையும் உணர முடிகிறது. ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் நக்கல், நையாண்டித்தனமாக பேசியதன் மூலம் நீங்கள் யார், நீங்கள் பெண்களை எந்த அளவிற்கு மதிக்கிறாய் என்பதை அனைவரும் அறிவார்கள் இதுதான் உங்களது பண்பும் கூட. சென்னையில் பிறந்து வளர்ந்த உங்கள் மனைவி சௌமியா அன்புமணி மற்றும் நீங்கள் தர்மபுரியில் நிற்கலாம். சென்னையில் வசிக்கும் இன்று மயிலாடுதுறையில் நிரந்தரமாக குடியேறிய நான் மயிலாடுதுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் பெரும் குற்றமா? உங்கள் வீட்டு பெண்களுக்கு ஒரு நீதி, அடுத்தவர் வீட்டு பெண்களுக்கு ஒரு நீதியா ? இதுதான் நீங்கள் கற்று...