"ஒ” பட் ஸ்மேன்"
இப்போது யாரும் வங்கி சென்றுவரிசையில் நின்று காசு வாங்கும் வழக்கம் இல்லை.போகிற வழியில் கண்ணில் கண்ட எடிஎம் மில் நுழைந்து அட்டையை சொருகி 100 வரையில் செலவுக்கு எடுத்து கொண்டு போய்க் கொண்டே இருக்கும் காலம் இது. ஆனால் அப்படி இருக்கையில் அட்டையை சொருகி பணம் எவ்வளவு தேவை என்று கொடுத்தப்பின்னர் பணம் வராமல் ஆனால் பணம் வழ ங்கப்பட்டு விட்டது என்று பணத்தை கழித்து செய்தி வரும் நிகழ்வை பலர் எதிர் கொண்டு அலறி அடித்து வங்கி சென்று அங்குள்ளோரிடம் தொங்கிக் கொண்டிருப்பதை யும் சந்தித்திருக்கலாம். அப்படி பட்ட நேரங்களில் வங்கியில் உள்ள சிலர் நம்மை கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்துவதையும் கண்டிருக்கலாம். வேறு வங்கி தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டு வங்கிகள் சேவை உங்களுக்கு எதிராக இருந்தால் அல்லது அப்படி பட்ட சூழல் எற்பட்டால் அதை சமாளிக்க இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்ட...