ஊடக ஒழுங்கு முறை வரைவு
-மார்க்கண்டேய கட்ஜு [முன்னாள் நீதிபதி] |
நாடாளுமன்றத்தில் கொண்டுவரஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீனாட்சி நடராஜனின் ஊடக ஒழுங்குமுறைகள் குறித்த தனி நபர் மசோதாவினை நான் வாசிக்கவில்லை. ஆத லால் அது குறித்து விரித்துரைக்கும் நிலை யில் நானில்லை. ஆனால் நிச்சயமாக ஊட கத்தை (அச்சு மற்றும் மின்னணு சேர்த்து) ஒழுங்குபடுத் தும் தேவையுள்ளது என்பது எனது கருத்து. இந்த விசயம் மீதான எனது கருத்துக்கள் சர்ச்சைகளை உருவாக்கியுள்ள தால் அவற்றை தெளிவாக்க வேண்டிய தேவையுள்ளது.
ஊடகம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட அல்ல என விரும்பு கிறேன். ஒழுங்குபடுத்தலுக்கும் கட்டுப்படுத் தலுக்கும் வேறுபாடு உள்ளது. கட்டுப்படுத்த லில் சுதந்திரம் இல்லை. ஆனால் ஒழுங்குப் படுத்தலில் சுதந்திரம் உண்டு. அச்சுதந்திரம் பொது நலன் கருதி நியாயமான வரையறை களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இந்தியா வில் ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அதனால் மக்கள் வாழ்க்கையில் பெரிய தாக் கத்தை ஏற்படுத்த முடியும். எனவே பொது நலன் கருதி அது ஒழுங்கு படுத்தப்பட வேண் டும்; அரசமைப்பு விதி 19(1) (சி)ல் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள பேச்சு மற்றும் எண்ணங் களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் குறித்து ஊடகவியலாளர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றனர். இந்தியாவின் இறை யாண்மை மற்றும் நேர்மை, அரசின் பாதுகாப்பு, பொது அமைதி, நாகரிகமான நடத்தை, ஒழுக்க நெறி அல்லது அவமதிப்பு அல்லது குற்றத் தூண்டுதல் காரணமாக மேற்கூறப்பட்ட சுதந்திரம் நியாயமான வரையறைகளுக்கு உட்பட்டது எனக்கூறும் அரசமைப்பு விதி 19(2)-ஐ ஊடகவியலாளர்கள் வேண்டு மென்றே புறக்கணிக்கின்றனர். அல்லது குறைத்து மதிப்பிடுகின்றனர்.
ஊடகத்திற்கான சுதந்திரம் அரசின் பாது காப்பு, பொது அமைதி, ஒழுக்க நெறி முதலிய வற்றை பாதிக்காத வகையில் செயல்படுத்தப் பட வேண்டும். எந்த சுதந்திரமும் முழுமை யானதல்ல. ஒவ்வொரு சுதந்திரமும் பொது நலன் கருதி நியாயமான வரையறைகளுக்கு உட்பட்டதாகும். காரணம் என்னவெனில், மனி தர்கள் சமூகத்தின் படைப்புயிர்கள். எந்த வொரு மனிதரும் தனித்து வாழ முடியாது. ஒவ் வொருவரும் சமூகத்திற்குள்தான் வாழ வேண்டும். ஆகவே எந்த தனிநபரும் அடுத் தவர்களுக்கு அல்லது சமூகத் திற்கு இடையூ றாக இருக்கும் வகையில் தனது சுதந்திரத் தைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு இல்லையெனில் உயிர் வாழ்வது கடினம். ஊடகவியலாளர்கள் அடிக்கடி சுய ஒழுங்கு முறை (ளுநடக -சநபரடயவiடிn) குறித்து பேசுகி றார்கள். ஆனால் இலாபத்தை விரும்பும் வணி கர்கள், ஊடக நிறுவனங்களின் உரிமை யாளர்களாக இருக்கின்றனர். இலாபம் ஈட்டு வது என்பதில் தவறேதுமில்லை. ஆனால் அது சமூகப் பொறுப்புகளுடன் இணைக்கப் பட வேண்டும். சமூகத்திலுள்ள மற்றவர்கள் பாதிக்கப்பட்டாலும் தாங்கள் இலாபம் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என ஊடக உரி மையாளர்கள் கூற முடியாது. இவ்வாறான போக்கு சுய அழிவினை ஏற்படுத்தும். அவர் கள் இப்பொழுது தங்களைத் திருத்திக்கொள் ளாவிடில், இறுதியில் பாதிக்கப்படுவர். பெரும் பாலான ஊடகங்களின் நடத்தை வழிமுறை கள் பொறுப்பற் றதாகவும், கவலையற்றதாகவும் இரக்கமற்றதாகவும் உள்ளன. இன்றைய பெரும்பாலான ஊடகங் களின் சிறப்பியல்புகள் என்பவை சமூக - பொருளா தார விசயங்களான பரந்துபட்ட ஏழ்மை, வேலையின்மை, ஊட்டச் சத்தின்மை, விவ சாயிகளின் தற்கொலை, உடல்நலம் பேணு தல், கல்வி, வரதட் சணைச் சாவுகள், பெண் சிசுக்கொலை முதலியவற்றை புறந்தள்ளி, மஞ்சள் இதழியல், மலிவான மனக்கிளர்ச் சிகளை தூண்டுதல், மதிப்பற்ற விசயங் களுக்கு (திரை நட்சத்திரங்கள் மற்றும் கிரிக் கெட்காரர்களின் நேரடி ஒளிபரப்பு போன் றவை) அதிக முக்கியத்துவம் அளித் தல், மூட நம் பிக்கைகளை ஊக்கப்படுத்துதல் மற்றும் மக்களின் மதிப்புகளைக் குறைத்தல் போன்றவையாகும். சோதிடம், கிரிக்கெட் (பெரும்பான்மையினரின் அபின்) பொது மக்களை ஏமாற்றும் பாபாக்கள் என தொலைக் காட்சி அலைவரிசைகளில் நாம் அன்றாடம் காணும் காட்சிகளாக உள்ளன. செய்திகளை வெளியிட வைப்பதற்கு சில பத்திரிகைகளுக்கும், டி.வி. அலை வரிசை களுக்கும் பணம் கொடுத்தால் மட்டுமே வெளியிட முடியும் என்ற நிலை உள்ளது. அர சியல்வாதிகளின் செய்தியாளர் கூட்டங் களில் கலந்து கொள்ளும் இதழியலாளர்களுக் கும் சில இடங்களில் கலந்துகொள்ளாதவர் களுக்கும் பணம் கொடுக்கும் நிலையுள்ளதாக ஓர் மூத்த அரசியல்வாதி என்னிடம் தெரி வித்தார். சமீபத்தில் பாபா (தற்போது தொலைக் காட்சிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்) தொலைக்காட்சியில் அவருடைய கூட்டங் களை காண்பிப்பதற்கு மிகுந்த பணம் தரு வதாக ஒரு டி.வி.அலைவரிசை உரிமையாளர் என்னிடம் கூறினார். பெரும் பாலான இதழிய லாளர்கள் கையூட்டு பெறுபவர்களாகவும் நேர்மை இல்லாதவர்களாகவும் இருப்பதாக மூத்த இதழியலாளர் மது கிஷ்வர், ராஜ்ய சபா டி.வி.யில் தெரிவித்தார். ஊடகம் சுய ஒழுங்குமுறை குறித்து உரிமை கொண்டாடுகிறது. ஆனால் எந்த நெறிமுறையில் அவர்கள் உரிமை கொண் டாடுகிறார்கள்? இலாப நோக்கங்களாலும் மிகுந்த டி.ஆர்.பி. அளவிடல்களாலும் நடத்தப்படும் டி.வி. அலை வரிசை களை செய்தி தொலை பரப்புபவர் சங்கம் அல்லது தொலைபரப்பு பதிப்பாசிரியர்கள் சங்கம் ஆகியவற்றால் எவ்வாறு முறைப்படுத்த முடியும்? வழக்கு ரைஞர்கள் சுதந்திரமாக தொழில் செய்பவர்கள். ஆனால் தொழி லில் தீய நடத்தை காணப் படின் அவர் களது உரிமத்தை பார் கவுன்சிலி னால் இடைக்காலமாக நிறுத்தி வைக்கவோ அல்லது இரத்து செய்யவோ முடியும். அதே போல், மருத்துவர்கள், சாட்டர்டு அக்கவுண் டன்ட்கள் ஆகியோர்களின் உரிமங்களை அவர்களை ஒழுங்குபடுத் தும் குழுவினரால் இடைக்காலமாக நிறுத்தி வைக்கவோ அல் லது இரத்து செய்யவோ முடியும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீய நடத்தை களுக்காக நாடாளுமன்றத்தினால் பழிச்சாட் டிட முடியும். ஆனால் இதழியல் நெறிமுறை களை மீறும் ஊடகத்தின் மீது எந்த நட வடிக்கையும் எடுக்கக்கூடாது என ஊடகம் உரிமை கோருகிறது ஏன்? ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் பதில் அளிக்க வேண் டிய பொறுப்புண்டு. ஆனால் தனக்கு மட்டும் பதில் அளித் தால் போதும் என ஊடகம் கருது கிறது. தொலை பரப்பு ஊடகம் தன் சுய ஒழுங்கு முறைக்கு உரிமை கோரினால், அதே வாதத் தின் அடிப்படையில் தன் சுய ஒழுங்கு முறைக்காக ஒவ்வொருவரையும் அனுமதிக்க வேண்டியிருக்கும். பின்பு சட்டங்கள் எதற்கு? திருட்டு, கற்பழிப்பு அல்லது கொலைக்கு எதிரான சட்டங் களை நாம் ஏன் வைத்திருக்க வேண் டும்? இந்திய தண்டனைச் சட்டத்தை ஏன் ஒழிக்கக்கூடாது? ஒழித்துவிட்டு, ஒவ் வொருவரும் சுயஒழுங்குமுறையை பழகுமாறு கேட்டுக் கொள்ளலாமா? உண்மை என்ன வெனில், சுயஒழுங்கு முறை மட்டும் போதாது. சில புற ஒழுங்கு முறைகளும் தண்டனை குறித்த அச்சமும் இருத்தல் வேண்டுமென சட்டங் கள் நிரூபிக்கின்றன. இவ்விடத்தில் நான் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். ஊடகத்தின் ஒழுங்கு முறை அரசின் கையில் இருக்க வேண்டு மென்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அதன் ஒழுங்குமுறை இந்திய செய் தியாளர் மன்றம் போன்ற தனித்த சட்டமுறை யான அதிகாரக்குழு வின் கையில் இருத்தல் வேண்டும். இந் திய செய்தியாளர் மன்றத்தின் தலைவர் அரசினால் தேர்ந்தெடுக்கப்படுவர் அல்ல. ராஜ்ய சபைத் தலைவர் (இந்திய துணை ஜனாாதிபதி), மக்களவை சபா நாயகர் மற்றும் செய்தியாளர் மன்றத்தைச் சார்ந்த ஒரு பிரதிநிதி ஆகிய மூன்று உறுப் பினர் அடங்கிய தேர்வுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்ப டுகிறார். செய்தியாளர் மன்றம் 28 உறுப்பினர் களைக் கொண்டது. அவற்றுள் செய்தியா ளர் சார்பாக 20ம், நாடாளுமன்றத்தின் ஐந்து உறுப் பினர்களும் மற்றும் இந்திய பார் கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சாகித்ய அகாடமி சார்பாக தலா ஒரு உறுப் பினர் வீதம் மூன்று உறுப் பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பெரும்பா லான ஓட்டுகளின் அடிப்படையில் செய் தியாளர் மன்ற முடிவுகள் தீர்மானிக்கப்படு கின்றன. மற்றவர்களின் கருத்துக்கள் மீது முரட்டுத்தனமாக சவாரி செய்யும் சர்வாதிகாரி அல்ல நான். என்னு டைய பல கருத்துக்கள் பெரும்பான்மையின ரால் புறந்தள்ளப்பட்டுள்ளன. எனினும் நான் அவர்களுடைய முடிவை மதித்துள்ளேன். மின் னணு ஊடகம், இந்திய செய்தியாளர் மன் றத்தின் கீழ் கொண்டுவரப்படுமானால் (ஊடக மன்றம் என பெயர் மாற்றம் செய்து கொள்ள லாம்) மின்னணு ஊடகத்தின் பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெறுவர். அது முழுக்க முழுக்க ஜனநாயகத் தன்மை கொண்டதாக இருக்கும். பின்பு ஏன் கடுமையாகவும் சினத் தோடும் என்னுடைய முன்மொழிவுகளை மின்னணு ஊடகவியலாளர்கள் எதிர்க்கின் றனர்? ஏனெனில் அவர்கள் இந்தியாவில் தாங் கள் விரும்புவதை செய்வதற்கான சுதந் திரத்தையும் வரைமுறையின்றி செயல்பட வும் விரும்புகின்றனர். இதுகுறித்து ஆரோக்கிய மான விவாதத்தினை நான் வரவேற்கிறேன்.
நன்றி : இந்து தமிழில் கோ.வெங்கட்ராமன்
__________________________________________________________________________________________
|
எத்தனை நாள் ஆனாலும் இன்றைக்கும் ஒத்துப்போகும் காணொளி.
நித்தியானந்தாதான் தலை மறைவாகி விட்டாரே.அவரை இதன் மூலம் பார்த்தாவது ஆறுதலடைவோம்.