தலையாய [முடிப்] பிரச்சினை?

கூந்தலை நான்காக பிரிக்கலாம். உங்கள் கூந்தல் எந்தவகையைச் சார்ந்தது என்று கண்டுகொண்டீர்களானால், அதைப் பராமரிப்பது சுலபம். 1. சாதாரண கூந்தல்(Normal hair) 2. வறண்ட கூந்தல்(dry hair) 3. எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல்(oil hair) 4. பலவீனமான கூந்தல்(weak hair) சாதாரண கூந்தல் (normal hair) நன்கு அடர்த்தியாகவும், சுத்தமாகவும், பளபளப்பாகவும், வளமையாகவும் இருக்கும் இத்தகைய கூந்தல் நன்கு வளரும் தன்மையுடையது . வறண்ட கூந்தல் (dry hair) இத்தகைய கூந்தல் நிறம் மங்கிய நிலையில் காணப்படும். முடியின் நுனிப்பகுதியில் வெடிப்பு காணப்படும். முடியின் நடுபகுதியில் உண்டாகும் முடிச்சுகளால் முடி அடிக்கடி உடைந்து உதிரும். மயிர்க்கால்கள் மற்றும் முடி வறண்டு காணப்படுவதால், அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து பராமரித்து வரவேண்டும் . எண்ணெய்ப் பசையுள்ள கூந்தல் (oil hair ) கூந்தலில் அளவுக்கதிமான எண்ணெய்ப்பசை காணப்படும். முடி மிகவும் மெலிந்து உறுதியற்று காணப்படும். எண்ணெய்ப் பசை அதிகமிருப்பதால் விரைவில் அழுக்கு மற்றும் தூசிகள் ...