கொடி வணக்கம்.

பள்ளியில் படிக்கும் போது ஆகஸ்டு -15 காலை தூக்கமே வராது. விடிந்ததும் கொடியேற்றப் போக வேண்டுமே. உற்சாகத்தில் உறக்கமே வராது. விடுதல் நாள் கொண்டாட்டத்திவிட வாத்தியார் கொடியேற்றியதும் தரும் ஆரஞ்சு மிட்டாய் தான் சுதந்திரத்தின் அடையாளச் சின்னமாக திகழ்ந்த காலம். ஆனால் இப்போது கொஞ்சம் விபரம் நாட்டு நடப்பு தெரிந்தது தவறாக போய் விட்டது. இந்திய விடுதலை நாளை கொண்டாட ஆவல்தான்.ஆனால் இன்றைய தலைவர்களை பார்த்தால் இப்படி கொண்டாட வெட்கமாக இருக்கிறது. விடுதலைப் பெற்றதே ஏந்தானொ என்றிருக்கிறது.மிட்டாய் கிடைக்காததால் அல்ல. அரசாள்வோர் கொண்டுவரும் திட்டங்கள் நாட்டை ஒரு வழியாக்குவதாகவே உள்ளது. வாக்குகள் பெறும் வரை மக்களின் அடியாளாக வேடமிட்டு-நாட்டை முன்னேற்றுவதே லட்சியம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்தவுடன் மேல் நாடுகள் சொல்வதை தலை மேல் கொண்டாடும் ஆட்சியாளர்கள் இருக்கும் நாட்டின் விடுதலை ரசிக்க இயலாதது. உலகின் அடிப்படைத்தொழிலாளியான விவசாயிகள் தற்கொலைக்கு கொண்டு செல்லும் ஆட்சியாளர் மேதன்மை வெறுக்க வைக்கிறது. நாட்டை முன்னெடுக்க பொதுத்துறையில் நிறுவனங்களை ஆரம்பித்து தொழிலில் முன...