50கோடிகள்
எஸ்.பி.ஐ (SBI) வங்கி கிளைகளில், ரூ. ஆயிரம், 10 ஆயிரம், 1 லட்சம், 10 லட்சம், கோடி போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும். தனி நபர்களோ, கார்ப்பரேட் நிறுனங்களோ இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரமும் பெறலாம் என்று கூறப்பட்டது. தேர்தலின்போது கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியவர் பெயர் மற்றும் தொகை தொடர்பான தரவுகளை நிதியாண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் (Representation of People Act-1951) முன்பு குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை தேர்தல் பத்திரங்கள் திட்டம் (Electoral Bond Scheme- 2018) மூலம் திருத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது. தேர்தல் பத்திரம் என்பது வெளிப்படைத் தன்மைக்கு எதிராக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டுத் தேர்தல் ஆணையம் தரப்பிலேயே முறையிடப்பட்டது. எனினும் அது மாற்றப்ப...