50கோடிகள்

 எஸ்.பி.ஐ (SBI) வங்கி கிளைகளில், ரூ. ஆயிரம், 10 ஆயிரம், 1 லட்சம், 10 லட்சம், கோடி போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும்.

தனி நபர்களோ, கார்ப்பரேட் நிறுனங்களோ இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரமும் பெறலாம் என்று கூறப்பட்டது. தேர்தலின்போது கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியவர் பெயர் மற்றும் தொகை தொடர்பான தரவுகளை நிதியாண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் (Representation of People Act-1951) முன்பு குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை தேர்தல் பத்திரங்கள் திட்டம் (Electoral Bond Scheme- 2018) மூலம் திருத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது. தேர்தல் பத்திரம் என்பது வெளிப்படைத் தன்மைக்கு எதிராக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டுத் தேர்தல் ஆணையம் தரப்பிலேயே முறையிடப்பட்டது. எனினும் அது மாற்றப்படவில்லை.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகமான கார்ப்பரேட் நிதியை பெற்றது, பாஜகதான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மார்ச் 2018-க்கும் 2022-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதியில் ரூ. 9 ஆயிரத்து 208 கோடியில், ரூ. 5 ஆயிரத்து 270 கோடி அல்லது 2022 வரை விற்கப்பட்ட மொத்த தேர்தல் பத்திரங்களில் 57 சதவிகிதம் பாஜகவுக்கே சென்றுள்ளது.


ஆனால், இதேகாலத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், ரூ. 964 கோடி அல்லது 10 சதவிகிதத்தைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.767 கோடி அல்லது அனைத்து தேர்தல் பத்திரங்களிலும் 8 சதவிகிதத்தை கைப்பற்றியுள்ளது.

இதேபோல கடந்த 2021-22 நிதியாண்டில் 8 தேசிய கட்சிகள் ஒட்டுமொத்தமாக ரூ. 3 ஆயி த்து 289 கோடியை நன்கொடையாக பெற்றுள்ள நிலையில், இதிலும் பாஜக மட்டும் 58 சதவிகிதத் தொகையை - அதாவது ரூ. 1,917 கோடியை நன்கொடையாக அள்ளியிருக்கிறது. 2020-21 நிதியாண்டில் பாஜக ரூ. 752 கோடியை நன்கொடையாக பெற்றிருந்தது. இது 2021-22 நிதியாண்டில் 154 சதவிகிதம் அதிகரித்து ரூ. 1,917 கோடியாக உயர்ந்துள்ளது.

“ரூ.5000 கோடி.. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கோடி கோடியாய் நிதி பெற்ற பா.ஜ.க” - தேர்தல் ஆவணங்களில் அம்பலம்!

ரூ. 545.7 கோடி நன்கொடை ‘வசூலித்து’ திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முந்தைய 2020-21 நிதியாண்டில் திரிணாமுல் காங்கிரஸ் ரூ. 74.4 கோடி மட்டுமே நன்கொடையாக பெற்றிருந்த நிலையில், அது ஒரே ஆண்டில் 633 சதவிகிதம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையின் அளவு கடந்த நிதியாண்டில் ரூ. 285.7 கோடியிலிருந்து 89 சதவிகிதம் உயர்ந்து ரூ. 541.2 கோடியாக அதிகரித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற நன் கொடை 2020-21-ல் ரூ. 171 கோடியாக இருந்த நிலையில் 2021-22-இல் அது ரூ. 162.2 கோடியாக குறைந்துள்ளது. இத்தொகையில் பெரும் பகுதி, நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மக்களிடம் உண்டியல் ஏந்தி பெற்ற காசுகள் ஆகும். மேலும் கட்சி ஆதரவாளர்கள், நடுத்தர வர்க்க ஊழியர்கள், சிறு, குறு வணிகர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களிடம் நன்கொடையாகப் பெற்ற கட்சி நிதியே ஆகும்.

சீத்தாராம் யெச்சூரி
சீத்தாராம் யெச்சூரி

சிபிஐ பெற்ற நன்கொடை ரூ. 2.1 கோடியிலிருந்து ரூ. 2.8 கோடியாக சற்று உயர்ந்துள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) பெற்ற நன்கொடை வசூல் ரூ. 52.4 கோடியிலி ருந்து ரூ.43.7 கோடியாக குறைந்துள்ளது.

அதிக நன்கொடை பெற்றதைப் போலவே கடந்த 2021-22 நிதியாண்டில் ‘செலவினத்திலும்’ பாஜகவே முதலிடத்தில் உள்ளது. அக்கட்சி, கடந்த நிதியாண்டில் ரூ. 854.46 கோடியை செலவு செய்துள்ளது. காங்கிரஸ் ரூ. 400 கோடி, திரிணாமுல் ரூ. 268.3 கோடி, பிஎஸ்பி 85.1 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 83.41 கோடி, சிபிஐ 1.2 கோடி என நன்கொடை திரட்டியுள்ளதாக தேர்தல் ஆணையவலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களில் ஆபத்துகாலங்களில் வுளியேற வைக்கப்படும் அவசரக் கால கதவுகள் அ.மலை சொல்வதுபோல் திறப்பது கடினமாகவா இருக்கும்.

அவசர கதவை யார் அப்படி திறக்க கடினமாக வடிவமைப்பார்கள்?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?