மே -2012 நிகழ்வுகள் சில ,
இப்போது மே மாதத்தின் நடுவில் இருக்கிறோம் . சென்ற ஆண்டில் நடந்த சில நிகழ்வுகளை பார்ப்போம். மே -2012 நிகழ்வுகள் சில . ------------------------------------- உலகம்- ------------ மே 14: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 இந்தியர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி. மே 22: 2010 பிப்., 8ல், கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் ராணுவ தளபதியாக சரத் பொன்சேகா, பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார். மே 25: ஜப்பானைச் சேர்ந்த தமே வட்டானபி என்ற 73 வயது பெண் , எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கின்னஸ் சாதனை. இந்தியா- -------------- மே 3: 2012ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை பட ஹீரோ அப்புகுட்டிக்கு வழங்கப்பட்டது. மே 4: மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் விளம்பர தூதராக, "தேசிய விருது' பெற்ற பாலிவுட் நடிகை வித்யா பாலன் நியமனம். மே 5: டில்லியில் நடந்த, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான மாநாட்டில், ஜெ. உட்பட 10 முதல்வர்கள் எதிர்ப்பால் ஒருமித்த கருத்து இல்லை. மே 8: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, கோல்கட்டா ...